Browsing All posts tagged under »பிபிசி«

பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

ஜூன் 4, 2021

0

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா. இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன. “இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் […]

அர்னாப் கோஸ்வாமி: மக்கள் நேசிப்பவரா வெறுக்கும் தொகுப்பாளரா – எது உண்மை?

நவம்பர் 24, 2020

0

சமீபத்தில், ரிப்பப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை ஆசிரியரும் செய்தி தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமி, ஒரு தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் அவரே ஒரு செய்தியாக மாறினார். அவர் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். இப்போது அவருக்கு ஜாமீனும் கிடைத்துவிட்டது. ஆனால் இந்த வழக்கு அவரின் அணிதிரட்டும் ஆளுமையை பலப்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதம் ‘ரிப்பப்ளிக் பாரத்’ சேனலில், தனது ப்ரைம்டைம் நிகழ்ச்சியில் அர்னாப், “80% இந்துக்கள் வாழும் ஒரு நாட்டில், இந்துவாக இருப்பது ஒரு குற்றமாகிவிட்டது” என்றார். “ஒரு […]

கொரோனா வைரஸ்: பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் தெரியுமா?

ஜூலை 24, 2020

0

20 ஜூன் 2020 சினிமா ரசிகர்கள், அவர்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியை திரை அரங்கத்தில் சென்று பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சியடைவார்கள். தமிழில் சில தினங்களுக்கு முன் ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடி தளத்தில் வெளியானது அதனையடுத்து தற்போது பென்குயின் படம் வெளியாகியுள்ளது. மேலும் பல மாதங்களுக்கு தியேட்டர்களை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியானது. ஹிந்தியிலும் கூட அமிதாப் பச்சம் நடித்த குலாபு […]

பிபிசி நியூஸ் உலகளவில் இந்தியாவில் அதிக நேயர்களை பெற்றுள்ளது

ஜூலை 24, 2020

0

புதிய தரவுகளின்படி இந்தியாவில் வாரம் ஒன்றிற்கு 6 கோடி மக்களை பிபிசி சென்றடைவது தெரியவந்துள்ளது. இந்த சமீபத்திய தரவுகளின்படி உலகளவில் பிபிசி, இந்தியாவிலேயே அதிகளவிலான நேயர்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பிபிசி சேவை ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மராட்டி, பஞ்சாபி, உருது, குஜராத்தி, தெலுகு, மற்றும் வங்காள மொழியிகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. பிபிசியின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பிபிசி டிஜிட்டல் தளங்களில் 186 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெற்றதாகும். […]

ஒரு செய்தியாளருக்கு தாவூத் இப்ராஹிம் இடமிருந்து வந்த மிரட்டல்

ஜூலை 4, 2020

0

ராஜேஷ் ஜோஷி பிபிசி   படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN / AFP / GETTY IMAGESImage captionதாவூத் இப்ராஹிம் நான் தொலைபேசியை எடுத்தபோது எதிர்திசையிலிருந்து அலட்சியமான குரல் வந்தது. அவர், “தொடர்பிலேயே இருங்கள்… பெரிய அண்ணன் பேசுவார்” என்றார். அந்த அழைப்பாளர் சோட்டா ஷகில். என் அருகே அமர்ந்திருந்த அவுட்லுக் இதழின் மூத்த செய்தியாளர் அஜித் பிள்ளை அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த அறையில் இருந்த அனைவரும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது சாதரண அழைப்பு அல்ல. […]

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தியை ஊடகங்கள் கையாண்ட விதம் சரியா?

ஜூன் 15, 2020

0

ஆ. நந்தகுமார்பிபிசி தமிழ்   படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை கொரோனா பிரச்சனைக்கு மத்தியிலும் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவரது மரணம் தொடர்பாகத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்ட விதம் மக்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் மரணம் குறித்த செய்திகள் எப்போதும் தொலைக்காட்சி, நாளிதழ் மற்றும் இணையளதளங்களில் முதலிடம் பிடிப்பது வழக்கமான ஒன்று. அதேபோல நேற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பான […]

அதுவொரு அழகிய வானொலி காலம் 1 – 6

மே 14, 2020

0

அருள்செல்வன். தொடர்புக்கு: arulselvanrk@gmail.com செவியில் விழுந்து இதயம் நுழைந்த இலங்கையின் குரல்கள்! இலங்கை வானொலியின் லைப்ரரி | கோப்புப் படம் எழுபதுகளில் தன் பால்யத்தைக் கழித்தவர்களின் வாழ்க்கையில் இலங்கை வானொலியின் நினைவில் மூழ்கிக் குளித்து எழாமல் கடந்து போக முடியாது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழக ரசிக மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான் .குறிப்பாக என்னைப்போன்று […]

கொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்?

மார்ச் 27, 2020

0

முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் செய்தித் தாள் விநியோகம் பெருமளவில் தடைபட்டுள்ளது. ஏற்கனவே விளம்பரங்கள் வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில் செய்தித்தாள்கள் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன? கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கிலிருந்து மளிகை, பால், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு […]

காஷ்மீர் : தினக்கூலியாக மாறிய ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் செங்கல் உடைக்கும் அவலம்

பிப்ரவரி 8, 2020

0

பிரியங்கா துபே பிபிசி 7 பிப்ரவரி 2020 படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடும் பனிப்பொழிவுக்கு இடையில், இந்திய நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் நகரில் மார்க்கெட் சதுக்கத்தில், 29 வயதான முனீப் உல் இஸாமை நான் சந்தித்தேன். உள்ளூர் மக்கள் பாரம்பரியமான காஷ்மீரி அங்கி உடை அணிந்திருந்த நிலையில், முனீப் நேவி ப்ளூ நிறத்தில் முரட்டுத்துணியில் தைத்த பேண்ட், மலையேற்றத்துக்கு உகந்த ஷூக்கள் அணிந்திருந்தார். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக புகைப்பட […]