பிபிசிக்கு இன்று 100வது பிறந்தநாள்

Posted on ஒக்ரோபர் 18, 2022

1


பிபிசிக்கு வயது 100
படக்குறிப்பு,பிபிசிக்கு இன்றுடன் வயது 100

இன்று பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிபிசி) தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இப்போது உலகிலேயே மிகப்பெரிய ஒளிப்பரப்பு நிறுவனமாக இருக்கும் பிபிசி, இங்கிலாந்தின் லண்டனில் கடந்த 1922ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது. அன்று முதல் பலதரப்பட்ட, அற்புதமான நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது பிபிசி.

அதன் நூற்றாண்டை கொண்டாடும் சமயத்தில், பிபிசியை உருவாக்கிய அதன் தனிச்சிறப்பு மிக்க தருணங்கள், தனித்துவமான பொருட்கள் மற்றும் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய ஒரு பார்வை இதோ:

1. முதல் பிபிசி வானொலி நிலையம்படக்குறிப்பு,

முதல் பிபிசி வானொலி நிலையம்

பல சிறிய வானொலி நிலையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பிபிசி தனது முதல் தினசரி வானொலி சேவையை 1922ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று இங்கிலாந்தின் லண்டனில் தொடங்கியது.

இதன் முதல் நிகழ்ச்சி, ஜி.எம்.டி நேரப்படி 18:00 மணிக்கு, செய்தி முகமைகளால் வழங்கப்பட்ட செய்தி நிகழ்ச்சியாகும். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு தேசிய வானிலை சேவையால் தயாரிக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு ஒலிப்பரப்பட்டது. இது ‘மெட் ஆபீஸ்’ என்று அழைக்கப்பட்டது.

நிகழ்ச்சி நிரல்களின் இயக்குநரான ஆர்தர் பர்ரோஸ் செய்திகளை ஆங்கிலத்தில் வாசித்தார். பர்ரோஸ் இரண்டு முறை செய்தி அறிக்கைகளை படித்தார். ஒருமுறை வேகமாகவும், பின்னர் கேட்பவர்கள் விரும்பினால் குறிப்புகளை எடுக்க வசதியா மெதுவாகவும் படித்தார்.

2. உலக சேவையின் ஆரம்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGESபடக்குறிப்பு,

முதல் அரச கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை வழங்கும் அரசரான ஐந்தாம் ஜார்ஜ்

1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று, அரசரான ஐந்தாம் ஜார்ஜ், இங்கிலாந்துக்கும் உலகின் சில பகுதிகளுக்குக்கும் தமது முதல் அரச கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை வழங்கினார்.

வானொலி ஒலிபரப்பிலும், சிற்றலை ஒலிப்பரப்பிலும், பிரிட்டிஷ் பேரரசு முழுவதும் ஆங்கிலம் பேசுபவர்களை முக்கியமாக இலக்காகக் கொண்டு, “பனி, பாலைவனம் அல்லது கடல் ஆகியவற்றால் பல்வேறு பகுதிகளில் தனித்திருக்கும் ஆண்களையும் பெண்களையும், காற்றில் இருந்து ஒலிக்கும் இந்த குரலால் மட்டும் சென்றடைய முடியும்,” என்று அவர் இந்த சேவையை வகைப்படுத்தினார்.

இந்த உரை மூலம் பிபிசி எம்பயர் சர்வீஸ் (இப்போது பிபிசி வோர்ல்ட் சர்வீஸ்) தொடங்கப்பட்டது.

பட மூலாதாரம்,GETTY IMAGESபடக்குறிப்பு,

பிபிசி ஆப்கன்

பரப்பளவு, மொழித் தேர்வு மற்றும் பார்வையாளர்களை சென்றடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் பிபிசி வோர்ல்ட் சர்வீஸ் இப்போது உலகின் மிகப்பெரிய ஒளிபரப்பாளராக உள்ளது.

இது இணையம், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் அதன் சேவைகள் மூலம் உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

3. சிறப்பு வாய்ந்த சின்னமாக பிபிசியில் ஒலிவாங்கிபடக்குறிப்பு,

‘டைப் ஏ’ ஒலிவாங்கி

1930களில் வணிக ரீதியாக கிடைக்கும் ஒலிவாங்கிகள் விலை உயர்ந்தவை. ஆகவே பிபிசி அதன் சொந்த மாதிரியை உருவாக்க மார்கோனி என்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது.

1934ஆம் ஆண்டில் ‘டைப் ஏ’ ஒலிவாங்கியுடன் ஒலிபரப்பில் புரட்சியை ஏற்படுத்தியது.

இது உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டது. பல அன்றைய பிரிட்டிஷ் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் காணப்படுவது போல், ‘கிளாசிக் பிபிசி மைக்ரோஃபோன்’ என்று அறியப்பட்டது.

4. முதல் பிபிசி வேற்று மொழி வானொலி சேவையாக உருவான பிபிசி அரபுபடக்குறிப்பு,

தொகுப்பாளர் அஹ்மத் கமால் சோரூர் எஃபெண்டி

1938ஆம் ஆண்டில், பிபிசியின் முதல் வேற்றுமொழி வானொலி சேவையாக பிபிசி அரபு சேவை உருவானது. எகிப்திய வானொலியில் இருந்து தொகுப்பாளர் அஹ்மத் கமால் சோரூர் எஃபெண்டி அதன் குரலாக நியமிக்கப்பட்டார்.

அரபு உலகில் மிகவும் விரும்பப்படும் தொகுப்பாளர்களில் எஃபெண்டி ஒருவராக இருந்ததால், அவரது நியமனம் ஒரே இரவில் இந்த சேவையை பிரபலமாக்கியது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த தசாப்தங்களில், பிபிசியில் அதிகமான மொழிச் சேவைகள் சேர்க்கப்பட்டன. முதலில், வானொலி நிகழ்ச்சிகளும், பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டன.

1997ஆம் ஆண்டு பிபிசி ஆன்லைன் தொடங்கப்பட்டது. அதனை பிற மொழி சேவைகள் பின்பற்றின. பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி வோர்ல்ட் சர்வீஸின் பிற மொழி சேவைகளும் சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் உருவாக்கப்பட்டன.

இன்று, பிபிசி வோர்ல்ட் சர்வீஸ் தனது கவனத்தை டிஜிட்டல் உலகிற்கு முன்னுரிமை அளிக்கும் உள்ளடக்கத்திற்கு மாற்றுகிறது.

5. பிபிசியின் முதல் கருப்பின பெண் தயாரிப்பாளர்படக்குறிப்பு,

உனா மார்சன்

உனா மார்சன் என்பவர் பிபிசியின் முதல் கருப்பின பெண் தயாரிப்பாளர் என்ற பெருமை மிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

ஜமைக்காவைச் சேர்ந்த உனா, 1939ஆம் ஆண்டு பிபிசியில் பணிபுரியத் தொடங்கிய நேரத்தில் ஓர் அனுபவமிக்க பத்திரிகையாளராக இருந்தார்.

அலெக்ஸாண்ட்ரா பேலஸ் தொலைக்காட்சி ஸ்டுடியோவில் உதவியாளராக இருந்தது அவரது முதல் பணி. ஆனால் அவர் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் முழுநேர பணியாளராக பிபிசியில் ‘எம்பயர் புரோகிராம்ஸ்’ பிரிவில் புரோகிராம் உதவியாளராக சேர்ந்தார்.

அவருக்கு கவிதையில் இருந்த ஆர்வம், ‘காலிங் தி வெஸ்ட் இண்டீஸ்’ தொடரில் வாராந்திர நிகழ்ச்சியான ‘கரீபியன் வாய்ஸ்’ உருவாக்க உதவியது.

6. இரண்டாம் உலகப் போரின் முடிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

1945ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதியன்று, அடால்ஃப் ஹிட்லரின் தற்கொலையை அறிவித்தது பிபிசி. மாலை ஏழு மணியளவில் இத்தாலியில் ஜெர்மனியர்கள் சரணடைந்தார்கள் என்ற செய்தியுடன், அன்றைய மாலை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அந்த ஆண்டு மே 4ஆம் தேதியன்று அவர்கள் டென்மார்க்கில் சரணடைந்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

ஆனால் இந்த போர் முடிவுக்கு வந்தது குறித்து அடுத்த சில நாட்களுக்கு, யாருக்கும் சரியாக தெரியவில்லை. மே 7ஆம் தேதியன்று திங்கட்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே மக்கள் திரண்டனர். ஆனால் மக்கள் ஐந்து ஆண்டுகளாக எதிர்பார்த்த செய்தி அப்போதும் வரவில்லை. நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்டதை ரஷ்ய மற்றும் அமெரிக்க தரப்புகள் உறுதி செய்வதற்காக பிரிட்டன் மக்கள் காத்திருந்தனர்.

அப்போதைய பிரதமர் சர்ச்சிலலின் உரை அன்றிரவு ஒளிப்பரப்படமாட்டாது என்று மாலை ஆறு மணியளவில் பிபிசி கூறியது. ஆனால் மாலை 19:40 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு அடுத்த நாள் ஐரோப்பாவில் முதல் வெற்றி என்று கூறப்பட்டது.

ஐரோப்பாவில் போர் உண்மையில் முடிந்துவிட்டது. சர்ச்சிலின் அறிக்கை அடுத்த நாள் பேரரசுக்குச் சென்றது. பலர் கேட்க மிகவும் உற்சாகமாக இருந்தனர். அவர்கள் வெளியே கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

பிபிசி அடுத்த 10 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. 1937க்குப் பிறகு முதல் முறையாக அங்கு ஒளிமயமாக இருந்தது.

7. பிபிசி டிவி உலகை இணைத்ததுபடக்குறிப்பு,

‘தி பீட்டில்ஸ்’ இசைக்குழு

1967ஆம் ஆண்டு, ‘அவர் வெர்ல்ட்’ (our world) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி வரலாற்றை உருவாக்கியது.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு, செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி சில நாடுகளை, முக்கியமாக சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே இணைத்தது. உதாரணமாக 1936ஆம் ஆண்டு ‘அதிநவீன தொலைக்காட்சி’ சேவையை தொடர்ந்து வழங்கிய உலகின் முதல் ஒளிபரப்பாளர் பிபிசி.

ஆனால் ‘அவர் வோர்ல்ட்’ (our world) வித்தியாசமானது. மேலும் ஒவ்வொரு கண்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலில் இருந்தும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பை பொழுதுப்போக்கு ரீதியில் செய்ய முயற்சி செய்தது பிபிசி. செயற்கைக்கோள் மூலம் முதல் முறையாக உலகத்தை இணைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கான பிரிட்டனின் பங்களிப்பில் ஒரு பகுதியாக, உலக புகழ்பெற்ற ‘தி பீட்டில்ஸ்’ இசைக்குழு, அப்போது பிரபலமான பாடலான ‘ஆல் யூ நீட் இஸ் லவ்’ பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி 1985ஆம் ஆண்டு ‘லைவ் எய்ட்’ உட்பட உலகை இணைக்கும் எதிர்காலத்தில் மறக்க முடியாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தூண்டுதலாக இருந்தது.

பட மூலாதாரம்,GETTY IMAGESபடக்குறிப்பு,

‘லைவ் எய்ட்’ நிகழ்ச்சி

60 நாடுகளில் 40 கோடி பார்வையாளர்கள், நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா காலத்திலும் மிகப்பெரிய அளவிலான செயற்கைகோள் இணைப்புகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலும் ஒன்றாக இருந்ததால், பிபிசி மிகப்பெரிய வெற்றியடைந்தது.

8. மர்மமான விஷம் கலந்த குடை

பட மூலாதாரம்,INTERNATIONAL SPY MUSEUMபடக்குறிப்பு,

குடை போன்ற ஓர் ஆயுதத்தின் மாதிரி

மேலே காட்டப்பட்டுள்ள இந்த பொருள், பிபிசி வோர்ல்ட் சேர்வீஸ் செய்தியாளர் ஜார்கி மார்கோவைக் கொன்ற குடை போன்று இருக்கும் ஓர் ஆயுதத்தின் மாதிரி.

1978ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதியன்று, மார்கோவ் லண்டனில் உள்ள புஷ் ஹவுஸில் உள்ள பிபிசியில் பணிபுரியச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம மனிதர் அவர் காலின் பின்புறத்தில் ஒரு குடையில் குத்தினார். பின்னர் அவர் ஓடிவிட்டார்.

பின்னர் மார்கோவ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பல்கேரிய ரகசிய சேவை மற்றும் கேஜிபி (சோவியத் யூனியனின் முக்கிய உளவு அமைப்பு) மூலம் தமக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஊழியர்களிடம் கூறினார்.

அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு 49 வயதில் இறந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு வயது மகளும் இருந்தார்கள்.

அவரது கொலையில், படுகொலையின் தன்மை மற்றும் பல்கேரியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி பற்றிய அவரது வெளிப்படையான விமர்சனம், சோவியத் கேஜிபி, பல்கேரிய ரகசிய சேவைகள் சம்பந்தப்பட்டதாக நீண்டகாலமாக சந்தேகிக்கப்பட்டது.

அந்தக் காலத்தின் ரகசிய காவல்துறை கோப்புகள் மூலம், பின்னர் அவரது கொலை செய்தவர் ‘பிக்காடில்லி’ என்ற குறியீட்டு பெயர் கொண்ட ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டது. ஆனால், கொலைச் சம்பவம் தொடர்பாக யாரும் நீதித்துறையால் தண்டிக்கப்படவில்லை.

9. ஆப்ரிக்காவின் சிறந்த விளையாட்டு வீரர் விருதுபடக்குறிப்பு,

ஆப்ரிக்காவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது

இந்த கோப்பை ஆப்ரிக்காவின் சிறந்த விளையாட்டு நட்சத்திரத்திற்கு வழங்கப்படும் வருடாந்திர விருதாகும். முந்தைய வெற்றியாளர்களில் , 2018ஆம் ஆண்டு எகிப்தைச் சேர்ந்த பிரீமியர் லீக் லிவர்பூல் கால்பந்து வீரரான முகமது சாலாவும் அடங்குவர்.

2001ஆம் ஆண்டு முதல் இந்த விருது கால்பந்து வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் 2021ஆம் ஆண்டில், இது ஆண்டின் ஆப்ரிக்க சிறந்த விளையாட்டு வீரர் என மீண்டும் தொடங்கப்பட்டது. இது விளையாட்டு உலகக்கையும், அதற்காக ஆப்ரிக்கா அளித்த பங்கையும் பெரிதும் மாற்றியது. இதனை ஆமோதிக்கும் விதமாக, முன்பை விட அதிகமாக ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் அதிக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

சியரா லியோனைச் சேர்ந்த, குழந்தைப் போராளியாக இருந்த சிறுவனால் இந்த விருதின் அசல் வடிவம் உருவாக்கப்பட்டது என்பதால் கோப்பைக்கு ஒரு சுவாரசியமான பின்னணி உள்ளது. அவருக்கு கலை மீதிருந்த பேரார்வத்தை மீட்டெடுத்த போது, அவரது வாழ்க்கை மாறியது.

10. டேவிட் அட்டன்பரோவும் தி கிரீன் பிளானட்டும்

பட மூலாதாரம்,GETTY IMAGESபடக்குறிப்பு,

டேவிட் அட்டன்பரோ

பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரும் இயற்கை ஆர்வலருமான டேவிட் அட்டன்பரோ, தமது பிபிசி வனவிலங்கு ஆவணப்படங்கள் மூலமாகவும், மென்மையான குரலாகக்கும் எட்டு தசாப்தங்களாக அறியப்படுபவர்.

அவரது புகழ்பெற்ற நிகழ்ச்சிகளான ப்ளூ பிளானட், தி லைஃப் கலெக்ஷன் மற்றும் நேச்சுரல் வோர்ல்ட் ஆகியவை லட்சக் கணக்கானவர்கள் பார்க்கப்பட்டு, எம்மி, பாஃப்டா உள்ளிட்ட பல புகழ் பெற்ற விருதுகள் பெற அவருக்கு உதவியுள்ளன.

1960களில் பிபிசியில் செய்தி தொகுப்பாளராக தமது பயணத்தை தொடங்கினார் டேவிட். அதன் பிறகு, பிபிசி நிறுவனத்தில் மூத்த மேலாளராக ஆனார். அதன் பிறகு, பிபிசி டூ-வின் கட்டுப்பாட்டு அலுவலராகவும், பிபிசி தொலைக்காட்சிக்கான நிரலாக்க இயக்குநராகவும் பணியாற்றினார்.

காலநிலை மாற்றம் குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்கான அவரது பணி, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் 2021ஆம் ஆண்டு ‘சாம்பியன் ஆஃப் தி எர்த்’ என்ற பெயரை பெற்று தந்தது.

சமீபத்திய பிபிசி ஐந்து-பகுதிகள் கொண்ட தொடரான தி கிரீன் பிளானட்டில், டேவிட் அட்டன்பரோ வெப்ப மண்டலத்தின் மழைக்காடுகளில் இருந்து உறைந்த வடக்கின் வனப்பகுதிக்கு பயணம் செய்கிறார். அப்போதும் தாவரங்கள் மிகவும் வித்தியாசமான, சில நேரங்களில் தீவிர வானிலை சூழல்களில் எப்படி சமாளிக்கின்றன என்று ஆராய்கிறார்.

https://www.bbc.com/tamil/global-63293301