Browsing All Posts filed under »பெண்களும் ஊடகமும்«

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி ..

ஓகஸ்ட் 13, 2022

0

SAROJ NARAYANASWAMY – ALL INDIA RADIO ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி .. TV காலத்துக்கு முந்தையவர், எங்களை ப்போல. இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் இன்முகம் காண்போமே .. ! வயது 85 இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இப்படி தமது குரலால் புகழ் பெற்றவர்களில் முக்கியமான ஒருவரைத் தேடி கண்டடைந்தோம். அவர்தான் அகில இந்திய […]

இலங்கை வானொலி புகழ் சானாவின் பாசறையில் வளர்ந்த சற்சொரூபவதிநாதன்

நவம்பர் 28, 2021

0

இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர்.மார்ச் 6, 1937இல் பிறந்த இவருக்கு இரண்டு சகோதரிகளும் மூன்று ஆண் சகோதரர்களும் இருந்தார்கள் ஜவகர்லால் நேரு விருது (1958)சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது (1995)ஒலிபரப்பாளருக்கான ‘உண்டா’ விருது (1992)இந்து கலாசார அமைப்பின் தொடர்பியல் வித்தகர் விருது (1993)வானொலி பவள விருதுவாழ்நாள் சாதனையாளர் விருதுதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய விருதுயாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சகலகலாவித்தகி விருதுகொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சான்றோர் […]

சானாவின் பாசறையில் மிளிர்ந்த ராஜேஸ்வரி சண்முகம்

நவம்பர் 2, 2021

0

இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.நாடகத் துறை மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் இராஜேசுவரி. 1952 ஆம் ஆண்டில் கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் […]

பெண் அறிவிப்பாளர்கள்

ஒக்ரோபர் 31, 2021

0

இலங்கை வானொலி தமிழ் வர்த்தக ஒலிபரப்பு 1950களில் ஆரம்பமான காலகட்டத்தில் அறிவிப்புப் பணிகளில் ஈடுபட்ட முதல் இருபெண் அறிவிப்பாளர்கள் அப்போது செல்விகளாக இருந்த புவனலோஜனி வேலுப்பிள்ளை மற்றும் யோகா சொக்கநாதன் ஆகிய இருவரும் என்று விஷயமறிந்தவர்கள் மூலம் அறிய முடிகிறது! 1966ல் பகுதி நேர அறிவிப்பாளர்களாக வர்த்தக சேவையில் நியமனம் பெற்ற அவர்களில் திருமதி புவனலோஜனி நடராஜசிவம் அவர்கள் “பூவும் பொட்டும்”மங்கையர் மஞ்சரியைத் தொடர்ந்து 25ஆண்டுகள் நடத்தினார்!’அரங்கேற்றம்’ எனும் நிகழ்ச்சியையும் நீண்ட காலம் வழங்கினார்! திரையிசைப் பாடல்கள் […]

‘நான் வேலைக்காரி அல்ல, செய்தியாளர்’ – பெண் பத்திரிகையாளர்

ஓகஸ்ட் 26, 2021

0

இனவாதப் பிரச்னைகளால் சமூகம் பெரிதும் பிரிந்து கிடந்த காலகட்டத்தில் டொரோதி பட்லர் கில்லியம், ஒரு முன்னணி அமெரிக்க செய்தித்தாளில், கருப்பின பெண் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், வெள்ளை இனவாத ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த உலகில், ஒரு கருப்பின பெண்ணாக இருந்தது, எப்படி அவர் வாழ்க்கையை வடிவமைத்தது என்று அவரிடம் கேட்டார் பிபிசியின் ஃபர்ஹானா ஹைதர் . வாஷிங்டனில் உள்ள ஒரு பணக்கார பெண்ணின் 100 வது பிறந்தநாள் விழாவிற்கு டொரோதி பட்லர் கில்லியம் சென்றபோது, ​​அவ்வீட்டு […]

பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

ஜூன் 4, 2021

0

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா. இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன. “இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் […]

‘BBC’யின் கீர்த்தியும் கௌரவமும்

மே 24, 2021

0

செய்தியின் பின்னணியில்…. இளவரசி டயானாவுடனான பிபிசி தொலைக்காட்சி நேர்காணல், செய்தி உலகில் வரலாற்று பதிவாகின்ற ஒன்று. உலகெங்கும் சுமார் இரண்டரைக் கோடி மக்கள் இந் நேர்காணலை அப்போது தொலைக்காட்சிகளில் பார்த்தார்கள். 1995 நவம்பர் 20ஆம் திகதி இது ஒளிபரப்பானது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தை ஓர் உலுக்கு உலுக்கி, உலகையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்ட இந்த நேர்காணலை மாட்டின் பஷிர் என்பவர் நிகழ்த்தினார்.மூன்று ஆண்டுகளுக்கு முன்னராகவே பிரிந்திருந்த இளவரசர் சார்ள்ஸும் டயானாவும், இந்த நேர்காணலின் பின்னரான சில மாதங்களில், […]

வாடாத ‘மல்லிகை’

பிப்ரவரி 3, 2021

0

‘மல்லிகை ஜீவா’ என எல்லோராலும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா, தனது 94ஆவது வயதில், ஜனவரி மாதம் 29ஆம்திகதி மாலை, கொழும்பில் காலமானார் என்பதை, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின! சமூகப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர், விமர்சகர், பதிப்பாளர் என எல்லா முகங்களையும் ஒருங்கே கொண்ட இலக்கிய உழைப்பாளி! வர்த்தகர்களையும் இலக்கியத்துக்குள் இழுத்துவந்த இலக்கிய விநியோகஸ்தர்! இலக்கிய உற்பத்தி என்பது ‘கற்றோர் மாட்டன்று’ என்பதை சரித்திரமாக்கிய வரலாறு […]

அச்சுக்கூடம்: பன்னாட்டு தொடர்பாடல் ஆய்விதழ் :

திசெம்பர் 22, 2020

0

 தமிழகம் குழுமத்தின் சார்பில், ஆய்வகம், பழமொழி, அச்சுக்கூடம் ஆகிய பன்னாட்டு ஆய்விதழ்களை வெளியிட்டு வருகின்றது. பன்னாட்டு ஆய்வுகளை தமிழில் வெளியிட உறுதுணையாக இருப்பதை ஆய்வகம், பழமொழி, அச்சுக்கூடம் ஆகிய பன்னாட்டு ஆய்விதழ்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அச்சுக்கூடம்: பன்னாட்டு தொடர்பாடல் ஆய்விதழ்      அச்சுக்கூடம், தொடர்பாடல் ஆய்வுகளை தமிழில் முன்னெடுக்கும் பன்னாட்டு ஆய்விதழ் ஆகும். தொடர்பாடல் கலை மற்றும் ஊடக அறிவியலுக்கான இப்பன்னாட்டு ஆய்விதழ், இதழியல் மற்றும் தொடர்பாடல் துறை சார்ந்த ஆய்வுகளை உலகத் தமிழர்களிடையேயும், அறிவுலகத்தின் பார்வைக்கும் கொண்டு […]

பெண்களை தரம் தாழ்த்தும் சொற்கள் பயன்பாடுக்கு எதிராகத் தொடங்கிய வித்தியாச முயற்சி

திசெம்பர் 21, 2020

0

ஒரு வாக்குவாதம் சண்டையாக மாறத் தொடங்கும் போதெல்லாம், தரம் தாழ்ந்த சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விவாதம் அல்லது சண்டை நடக்கும்போது கூட, பெண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களே பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விஷயம். இதுபோன்ற கெட்ட வார்த்தைகளை மக்களின் அகராதியிலிருந்து அகற்றுவதற்காக, இரண்டு பெண்கள் ‘த காலி ப்ராஜக்ட்’ என்ற திட்டத்தைத் தொடங்கினர். இதன் மூலம் தரம் தாழ்ந்த சொற்களை விடுத்து வேறு வழியில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தச் செய்வதே இதன் நோக்கம். இந்த திட்டத்துடன் தொடர்புடைய […]