Browsing All posts tagged under »பத்திரிகையாளர்«

பிரகாஸ் எனும் ஊடகவியலாளன்

செப்ரெம்பர் 11, 2021

0

பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர் செய்தியாகிப் போனமையால் ஊடகங்களில் இடம் பிடித்து முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஊடகவியலாளர்கள் செய்திகளை தேடித் தெளிந்து வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் தாங்களே செய்தியாக விரும்புவதில்லை. அந்தத் துரதிஸ்டம் பிரகாஸுக்கு நேர்ந்துவிட்டது. அந்தத் துயரம் ஊடகத்துறையை குறி;ப்பாக தமிழ் ஊடகத்துறையின் மனதைக் கீறி சோகமடையச் செய்து விட்டது.பிரகாஸ் […]

‘நான் வேலைக்காரி அல்ல, செய்தியாளர்’ – பெண் பத்திரிகையாளர்

ஓகஸ்ட் 26, 2021

0

இனவாதப் பிரச்னைகளால் சமூகம் பெரிதும் பிரிந்து கிடந்த காலகட்டத்தில் டொரோதி பட்லர் கில்லியம், ஒரு முன்னணி அமெரிக்க செய்தித்தாளில், கருப்பின பெண் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், வெள்ளை இனவாத ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த உலகில், ஒரு கருப்பின பெண்ணாக இருந்தது, எப்படி அவர் வாழ்க்கையை வடிவமைத்தது என்று அவரிடம் கேட்டார் பிபிசியின் ஃபர்ஹானா ஹைதர் . வாஷிங்டனில் உள்ள ஒரு பணக்கார பெண்ணின் 100 வது பிறந்தநாள் விழாவிற்கு டொரோதி பட்லர் கில்லியம் சென்றபோது, ​​அவ்வீட்டு […]

கோயம்புத்தூர் முதியோர் நடத்தும் ஆன்லைன் ரேடியோ – கொரோனா காலத்தில் ஒரு தன்னம்பிக்கை கதை

ஜூன் 27, 2021

0

”நான் சில மாதங்களுக்கு முன்பு மன அழுத்தத்தில் இருந்தேன். யாரிடமும் பேசிப் பழக மாட்டேன். அதிக நேரம் தனிமையில் இருப்பதையே விரும்பினேன். ஆனால், இப்போது அனைவரிடமும் சிரித்து பேசுகிறேன். புதிய மனிதர்களிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஆர்வமாக இருக்கிறேன்” என கூறிய முதியவர் ஒருவர், தனது வயலின் இசைக்கருவியோடு நம்மையும் ‘தபோவாணி’ ஆன்லைன் ரேடியோ குழுவினரை சந்திக்க அழைத்துச் சென்றார். கோவை மாதம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ‘தபோவனம் – மூத்தோர் குடியிருப்பு’ வளாகத்தில் வசிக்கும் முதியோர்கள் ஒன்றிணைந்து, ‘தபோவாணி’ […]

பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

ஜூன் 4, 2021

0

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா. இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன. “இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் […]

தினமுரசு நாட்கள்…..

மே 26, 2021

0

களுவாஞ்சிக்குடி சந்தைக்கு போய்வரும் அனேகரின் பைகளில் வீரகேசரி பத்திரிகை இருக்கும்.பத்திரிகை எனில் அந்த நாட்களில் வீரகேசரி தமிழர்களிடமும் தினகரன் முஸ்லிம்களிடமும் பிரபலம்.இருதரப்புக்கும் பொதுவானது எனில் தினபதி மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான சிந்தாமணி.இணையத்தளங்களின் வாசமேயில்லை. வானொலி , தொலைகாட்சிகளும் பெரிதாக பிரபல்யம் அடையாத நாட்களில் பத்திரிகைகட்கு நிறைய வாசகர்கள் இருந்தனர்.சிலருக்கு சிகரெட் பிடிக்காது டாய்லெட் போகாது.அதேபோல் பத்திரிகை படிக்காமல் பலருக்கு நாள் கழியாது. எங்கள் பகுதிகளில் பிரபல்யமான பத்திரிகை என்றால் அது வீரகேசரி தான்.ஆனால் அதன் வீக் […]

வாடாத ‘மல்லிகை’

பிப்ரவரி 3, 2021

0

‘மல்லிகை ஜீவா’ என எல்லோராலும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா, தனது 94ஆவது வயதில், ஜனவரி மாதம் 29ஆம்திகதி மாலை, கொழும்பில் காலமானார் என்பதை, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின! சமூகப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர், விமர்சகர், பதிப்பாளர் என எல்லா முகங்களையும் ஒருங்கே கொண்ட இலக்கிய உழைப்பாளி! வர்த்தகர்களையும் இலக்கியத்துக்குள் இழுத்துவந்த இலக்கிய விநியோகஸ்தர்! இலக்கிய உற்பத்தி என்பது ‘கற்றோர் மாட்டன்று’ என்பதை சரித்திரமாக்கிய வரலாறு […]

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

பிப்ரவரி 1, 2021

0

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.) “இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்” என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. “மூக்நாயக்” (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் […]

கொரோனா வைரஸ்: பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் தெரியுமா?

ஜூலை 24, 2020

0

20 ஜூன் 2020 சினிமா ரசிகர்கள், அவர்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியை திரை அரங்கத்தில் சென்று பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சியடைவார்கள். தமிழில் சில தினங்களுக்கு முன் ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடி தளத்தில் வெளியானது அதனையடுத்து தற்போது பென்குயின் படம் வெளியாகியுள்ளது. மேலும் பல மாதங்களுக்கு தியேட்டர்களை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியானது. ஹிந்தியிலும் கூட அமிதாப் பச்சம் நடித்த குலாபு […]

பிபிசி நியூஸ் உலகளவில் இந்தியாவில் அதிக நேயர்களை பெற்றுள்ளது

ஜூலை 24, 2020

0

புதிய தரவுகளின்படி இந்தியாவில் வாரம் ஒன்றிற்கு 6 கோடி மக்களை பிபிசி சென்றடைவது தெரியவந்துள்ளது. இந்த சமீபத்திய தரவுகளின்படி உலகளவில் பிபிசி, இந்தியாவிலேயே அதிகளவிலான நேயர்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பிபிசி சேவை ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மராட்டி, பஞ்சாபி, உருது, குஜராத்தி, தெலுகு, மற்றும் வங்காள மொழியிகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. பிபிசியின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பிபிசி டிஜிட்டல் தளங்களில் 186 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெற்றதாகும். […]

தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் – எஸ்.கே.விக்னேஸ்வரன்

ஜூலை 19, 2020

0

ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். ‘சந்தியில் இருவர் கைகலப்பு’ என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் […]