Browsing All Posts filed under »ஊடகங்களின் பொறுப்பு«

சிரித்திரன் சுந்தர்

திசெம்பர் 31, 2020

0

‘செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் மாமனிதர் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் 15000க்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1963ஆம் அண்டில் ஆரம்பிக்கப்பட்ட “சிரித்திரன்” சஞ்சிகை திரு சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து […]

நேர்மையான ஒரு தமிழ்ப் பத்திரிகையாளரின் குரலை நசுக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

திசெம்பர் 30, 2020

0

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளில் எத்தனையோ பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் என நூற்றுக்கணக்கான தமிழ் சிங்கள ஆங்கில மொழிப் பத்திரிகையாளர்களின் குரல்கள் பல்வேறு பிரிவினர்களால் நசுக்கப்பட்டுள்ளன. பலர் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள், பலர் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக மறைக்கப்பட்டுள்ளார்கள், அல்லது கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழ் பேசும் பத்திரிகையாளர்களான தராக்கி சிவராம், நடேசன், மயில்வாகனம் நிமலராஜன்,சுப்பிரமணியம் இராமச்சந்திரன் போன்ற எத்தனையோ தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் கோத்தபாய தரப்பாலும் அரச சார்பு தமிழ் அமைப்புக்களாலும் கொலை செய்யப்பட்டார்கள். இதைப்போலவே, லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, ரிச்சார்ட் டி […]

மட்டக்களப்பு ஊடகத்துறை வரலாற்றில் சுகுணம் ஜோசப் என்ற ஆளுமை.

திசெம்பர் 30, 2020

0

ஊடகவியலாளராக மனித உரிமை செயற்பாட்டாளராக தமிழ் தேசிய விடுதலையை பற்றுறுதியோடு நேசித்த அரசியல்வாதியாக பல தடங்களை பதித்த ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இரத்தம் புனித மரியாள் காலடியில் சிந்தப்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் கடந்து விட்டன. ஜோசப் போன்ற ஆளுமைகளை மட்டக்களப்பு அரசியல் தளத்திலிருந்து அதற்கு அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் தளத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜோசப் பரராசசிங்கம் உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு நீதி கிடைக்கும் என இலங்கையின் அரசியல் நிலவரங்களை […]

யாருக்கான ஊடகங்கள்?

திசெம்பர் 22, 2020

0

ஒட்டுமொத்த இந்திய காட்சி ஊடகங்களும் ஸ்ரீதேவி துக்கத்தில் இருந்து இன்று (பிப்ரவரி 28, 2018) முதல் மெதுவாக விடுபட்டு விடும் என நம்பலாம். பத்திரிகைகளை விடவும் இந்தக் காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் ஏன் எப்போதும் வர்க்க நலன் சார்ந்தே இருக்கின்றன என்பது தான் எனக்குப் புரியவில்லை. http://puthiyaagarathi.com/ அரசாங்கங்களை இயக்குவது ஊடகமா? அல்லது ஊடகத்திற்குத் தீனி போடுவது அரசாங்கமா? என்பது புரிந்து விடக்கூடாத அளவில் இரண்டும் திரைமறைவில் கைகோத்து செயல்படுகின்றன. ஒகி புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் […]

மொழியால் தண்டனை கொடுக்கக் கூடாது!

திசெம்பர் 22, 2020

0

எழுத்தாளர் பெருமாள்முருகனுடன் ஒரு மாலை! மண் சார்ந்த படைப்புகளைத் தரும் முக்கியமான சமகால எழுத்தாளர்களுள் ஒருவர் பெருமாள்முருகன். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிவருகிறார். படைப்பாளராக மட்டுமின்றி ஆசிரியராகவும் பணிபுரிந்துவரும் அவர், நவீன இலக்கியங்கள் குறித்தும் தமிழின் தொன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறிப் பல்வேறு துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்க உதவிசெய்கிறார். மொழி சார்ந்து மிகவும் நுட்பமாகச் செயல்பட்டுவரும் அவர், நெல்லை வட்டாரச் சொல்லகராதி, கரிசல் வட்டாரச் சொல்லகராதி போன்று கொங்கு […]

‘மனிதம்’ வாழும் தேசத்துக்காக ஊடக அர்ப்பணிப்பு வேண்டும்

திசெம்பர் 22, 2020

0

தேசிய ஐக்கியத்தையும், சமுக நல்லிணக்கத்தையும் சகல சந்தர்ப்பங்களிலும் அரசியல் வாதிகள் ஒரு பேசுபொருளாக எடுத்துக் கொண்டு அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எப்போதும் எம்மால் காணக்கூடியது நாட்டில் இரத்தம் சிந்துகின்ற வரலாற்றை மட்டுமேயாகும். இந்தச் சிறிய முத்து போன்ற தீவில் நான்கு மூலைகளிலும் இரத்தம் சிந்தாத இடத்தை கண்டு கொள்ள முடியாத நிலையையே அவதானிக்க முடிகிறது. குறுகிய அரசியலும், இனவாதமும் இன்று ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருப்பதை வெளிப்படையாகவே நோக்க முடிகிறது. இதற்கென கூலிப்படைகள் […]

அச்சுக்கூடம்: பன்னாட்டு தொடர்பாடல் ஆய்விதழ் :

திசெம்பர் 22, 2020

0

 தமிழகம் குழுமத்தின் சார்பில், ஆய்வகம், பழமொழி, அச்சுக்கூடம் ஆகிய பன்னாட்டு ஆய்விதழ்களை வெளியிட்டு வருகின்றது. பன்னாட்டு ஆய்வுகளை தமிழில் வெளியிட உறுதுணையாக இருப்பதை ஆய்வகம், பழமொழி, அச்சுக்கூடம் ஆகிய பன்னாட்டு ஆய்விதழ்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அச்சுக்கூடம்: பன்னாட்டு தொடர்பாடல் ஆய்விதழ்      அச்சுக்கூடம், தொடர்பாடல் ஆய்வுகளை தமிழில் முன்னெடுக்கும் பன்னாட்டு ஆய்விதழ் ஆகும். தொடர்பாடல் கலை மற்றும் ஊடக அறிவியலுக்கான இப்பன்னாட்டு ஆய்விதழ், இதழியல் மற்றும் தொடர்பாடல் துறை சார்ந்த ஆய்வுகளை உலகத் தமிழர்களிடையேயும், அறிவுலகத்தின் பார்வைக்கும் கொண்டு […]

‘கொவிட்19’ ஆல் முதல் மரணம்:சமூக ஊடகங்களில் பொய்யான பெயர் பரவியது ஏன்?!

திசெம்பர் 22, 2020

0

உண்மையில் கொரோனாவால் இறந்தது ஒரு இஸ்லாமியரும் அல்ல சாய்ந்த மருது என்ற இடத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஒருவர் செய்த தவறு எங்களுக்குகிடையில் உரையாடல் நிகழும்போது அது கொரோனாவைவிட வேகமாக பரவிவிட்டிருந்தது. கடைசியில் நான் என் நண்பனுக்கு அனுப்பிய ஸ்க்ரீன்ஷொட்தான்…. 04.04.2020  |  அம்பாறை மாவட்டம்முக்கியமானது உலகெங்கும் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான யுத்தத்தில் மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாடும் இன்று நோய் தொற்றுக்குள்ளானோர் இறந்தோர் தொகை உயிர்பிழைத்தோர் தொகை என எண்ணிக்கையிட்டுக்கொண்டிருக்கின்றன.அந்த வகையில் கொரோனாவினால் முதல் மரணம் முகம்மது ருபினாஸ் எனும் […]

குடிசைக் கைத்தொழில் ஊடகவியலாளர்கள்?

திசெம்பர் 20, 2020

0

தங்களைத் தாங்களே ஊடகவியலாளர்கள் என அடையளப்படுத்திக்கொண்டு, சமூக வலைத்தளங்களில் நேரலை செய்பவர்கள் மற்றும் எழுதிவருபவர்கள் தொடர்பில் நீண்டகாலமாகவே அச்ச உணர்வு இருந்துவந்தது. (சிலர் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி வருவதையும் மறுக்கமுடியாது.) இந்த அச்ச உணர்வின் பிரதிபலிப்பை நேற்று எல்லோரும் தெளிவாக கண்டுகொண்டோம். ஆர்வக்கோளாறு பிடித்தவர்களும், முறையாக ஊடகக் கல்வியை கற்காதவர்களும், ஊடக ஒழுக்க நெறிக்கோவை தொடர்பில் கிஞ்சித்தும் அறிவில்லாதவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடு இன்று சமூகத்தை நாற்சந்தியில் நிறுத்தியிருக்கிறது.இலங்கையில் 185 கொரோனா நோயாளர்கள் தொடர்பில் பொதுவாக எந்த […]

சமூக ஊடக தர்மமும் , ஊடகவியலாளர்களும்…!

திசெம்பர் 20, 2020

0

இன்று சமூக வலைத்தளம்/ ஊடகம் என்பது பல துறைகளில் தகவல்களை மக்களுக்கு வழங்க இலகுவாக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. அரசியல், சுகாதாரம், கல்வி, ஆன்மீகம், சமய கலச்சார விடயம் போனற முக்கிய துறைகளுக்கு இந்த சமூக ஊடகங்கள் பங்களிப்பு செய்கின்றன. ஆனால் தற்போது சமூக வலைத்தளம் அல்லது ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இது ஊடகத்திற்கு ஆரோக்கியமானதா? இல்லையா? என்பது விவாதிக்க வேண்டிய முக்கிய விடயம் இவ்விடத்தில் அதனை விடுவோம்.செய்திகளை பதிவேற்றல், புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், […]