Browsing All Posts filed under »ஊடகங்களின் பொறுப்பு«

பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

ஜூன் 4, 2021

0

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா. இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன. “இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் […]

நான்காவது தூணின் தலையில் தட்டக்கூடாது

மே 11, 2021

0

நான்காவது தூணின் சுதந்திரத்தின் தலையில் தட்டக்கூடாது தனக்கு மேலிருக்கும் மூன்று தூண்களின் செயற்பாடுகளையும் கழுகுக் கண்கொண்டு பார்த்து, மக்களுக்கு அறிவித்து, நேரடியான உறவுப்பாலமாய் இருப்பதுதான் ஊடகமாகும். இதைத்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பர். அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவற்றுக்கு அடுத்ததாக ஊடகம் இருக்கிறது. ஊடகங்களால், ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும். தவறான பாதையில், கண்மூடித்தனமாகப் பயணிக்கும் அரசாங்கத்தை நல்வழிக்குள் இழுத்துவிடவும் ஊடகத்துக்கு முடியும். உலகளவிலான பல நாடுகளில் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களுக்கு, ஊடகங்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளன. ஊழல், மோசடிகள், […]

வாடாத ‘மல்லிகை’

பிப்ரவரி 3, 2021

0

‘மல்லிகை ஜீவா’ என எல்லோராலும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா, தனது 94ஆவது வயதில், ஜனவரி மாதம் 29ஆம்திகதி மாலை, கொழும்பில் காலமானார் என்பதை, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின! சமூகப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர், விமர்சகர், பதிப்பாளர் என எல்லா முகங்களையும் ஒருங்கே கொண்ட இலக்கிய உழைப்பாளி! வர்த்தகர்களையும் இலக்கியத்துக்குள் இழுத்துவந்த இலக்கிய விநியோகஸ்தர்! இலக்கிய உற்பத்தி என்பது ‘கற்றோர் மாட்டன்று’ என்பதை சரித்திரமாக்கிய வரலாறு […]

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

பிப்ரவரி 1, 2021

0

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.) “இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்” என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. “மூக்நாயக்” (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் […]

டெல்லி விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளர்களை நசுக்குகிறதா அரசு? – குவியும் வழக்குகள்

பிப்ரவரி 1, 2021

0

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக, செய்தி வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது, அரசு தொடர்ந்து வழக்கு தொடர்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதற்கு மிக சமீபத்திய உதாரணம், மன்தீப் பூனியா என்கிற சுயாதீனப் பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதுதான். மன்தீப் கடந்த சனிக்கிழமை இரவு சிங்கு எல்லையில், காவலர்களின் பணியைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். […]

தமிழ்த் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு…

ஜனவரி 27, 2021

0

தமிழில் உள்ள எல்லாத் தொலைக்காட்சிகளையும் பல வருடங்கள் பார்த்தபிறகு நான் உங்களிடம் ஒரு தமிழனாய் வைக்கிற இரண்டு வேண்டுகோள்கள். 1. உங்களில் சிலரின் தமிழ் உச்சரிப்பு பரவாயில்லை. பலரின் உச்சரிப்பு ரொம்ப மோசம். தயவுசெய்து உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சரியாக உச்சரிப்பதாக நீங்களே நம்பிக்கொண்டு இந்தக் கொலைமுயற்சியைத் தொடரவேண்டாம். அப்படி தவறான எண்ணம் உங்கள் மனதில் இருப்பதால்தான் நீங்கள் இன்னமும் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.‘ஆனால் எங்கள் தொலைக்காட்சியில் இதுவரை யாரும் அப்படி எதுவும் என்னை சொன்னதில்லையே’ என்று […]

ஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்

ஜனவரி 8, 2021

0

நுகர்வுப் பண்பாடு என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை மிகுவிக்கச் செய்யும் பொருளாதாரம் சார்ந்த ஒரு வாழ்வியல் முறைமை ஆகும். ஒரு நாட்டின் பொருளாதார நலன் அந்நாட்டு மக்களின் நுகர்வுப் பண்பாட்டை நம்பியே உள்ளது என்ற கருத்தாக்கம் சந்தைப் பொருளாதாரத்தின் தாரக மந்திரமாகும். நுகர்வுப் பண்பாடு, தேவைக்கும் /தேவைக்கு அதிகமாகவும் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் உற்பத்தித் துறை, சேவை மையத் தொழில் வாய்ப்புகள், விளம்பரங்கள், […]

ஊடக பாசிசமும் மாற்று ஊடகத்திற்கான தேவையும்

ஜனவரி 8, 2021

0

நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து பத்திரிகையாளர் ஹாசிப் முகமது வற்புறுத்தல் காரணமாக பதவி விலக வைக்கப் பட்டதாகவும், குணசேகரன் அவர்களின் அதிகாரம் குறைக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஊடகத்துறை என்பது நாட்டின் நான்காவது தூண் என்றும், அது நாட்டில் நடக்கும் அநீதிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துறை என்றும், அந்தத் துறையில் பணியாற்றினால் ஊழல்வாதிகளையும், சாதிவெறியர்களையும், மதவெறியர்களையும் அம்பலப்படுத்தி, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படும் ஜனநாயக விரோத சக்திகளை தண்டித்து […]

அண்ணலின் பார்வையில் – செய்தித்தாள்கள் யாருக்கானது?

ஜனவரி 8, 2021

0

‘செய்தித்தாள்கள் வெளியிடும் செய்திகள் அறம் சார்ந்து உண்மையை வெளியிடுபவையாக குரலற்ற எளிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். வணிக ரீதியாக இருக்க கூடாது”. – அண்ணல் அம்பேத்கர். பத்திரிக்கைச்செய்தி: “தமிழ்நாடு முழுவதும் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிலுவையிலுள்ளது எனவும், அதனை நிலுவையின்றி முடிவு செய்யாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாண்பமை நீதிமன்றம் உத்தரவு”. மேற்கண்ட பத்திரிக்கை செய்தியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க தாமதமின்றி […]

சிறுபத்திரிக்கைகள் குறித்து

ஜனவரி 8, 2021

0

சிறுபத்திரிக்கைகள் குறித்து பேசுவதும்.. கலந்துரையாடுவதும்… காலத்தின் தேவை என்றே கருதுகிறேன். ஏனென்றால் சமூகத்தின் ஓர் அங்கமாகவே தான் சிறு பத்திரிக்கைகள் இருக்கின்றன. மனிதன் தன்னை தொடர்ந்து பண்படுத்திக் கொண்டே இருக்க கலை இலக்கியம் மிக அவசியம். அந்த கலை இலக்கியத்தின் முக்கியமான வடிவம் தான் சிறு பத்திரிக்கைகள் என்று நம்புகிறேன். முதன் முதலில் ஆனந்த விகடனில் தான் எனது கவிதை வெளி வந்தது. எழுதி எழுதி நிறைந்து கிடக்கும் ஒருவனுக்கு பத்திரிக்கை வெளி மிக தேவையான ஒரு […]