சமூக ஊடக தர்மமும் , ஊடகவியலாளர்களும்…!

Posted on திசெம்பர் 20, 2020

0


இன்று சமூக வலைத்தளம்/ ஊடகம் என்பது பல துறைகளில் தகவல்களை மக்களுக்கு வழங்க இலகுவாக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது.

அரசியல், சுகாதாரம், கல்வி, ஆன்மீகம், சமய கலச்சார விடயம் போனற முக்கிய துறைகளுக்கு இந்த சமூக ஊடகங்கள் பங்களிப்பு செய்கின்றன.

ஆனால் தற்போது சமூக வலைத்தளம் அல்லது ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இது ஊடகத்திற்கு ஆரோக்கியமானதா? இல்லையா? என்பது விவாதிக்க வேண்டிய முக்கிய விடயம் இவ்விடத்தில் அதனை விடுவோம்.
செய்திகளை பதிவேற்றல், புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், வலைப்பக்கத்தில் இடல் இத்தோடு ஒரு ஊடகவியலாளனின் கடமை முடிந்தது என்று அர்த்தமில்லை.

மாறாக தான் தொகுத்த விடயங்களில் இருந்து இறுதி முடிவும் அதற்கான பின்னூட்டல்களுக்கு சிறந்த பதிலும் வழங்குவது தான் சிறந்த ஊடகவியலாளனுக்கு உதாரணம்.
ஆனால் இன்று ஒரு சிலர் தொகுத்து வழங்க முடியாமல் திகைத்துப் போய் உள்ளனர்.ஏனென்றால் அவர்களுக்கு அநாகரீகமற்று பின்னூட்டல்கள் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.
ஊடகம் என்றால் ஒரு சில விடயங்களுக்கு நாகரீகமாகவும் சரி , அநாகரீகமாகவும் சரி கேள்விகளும் பதில்களும் வழங்கப்படுவது வழக்கம்.


தயவு செய்து சமூக சிந்தனையோடு செயற்படும் ஊடகவியலாளர்கள் போல் நாம் அனைவரும் பொது மக்களுக்கு உண்மையானதும் நேர்மையானதுமான தகவல்களை வழங்க வேண்டும் என்பது என் அவா.

நேரம், காலம், சூழ்நிலை பொருத்து நடந்து கொள்ளுங்கள்.ஒரு சில ஊடகவியலாளர்களால் நல்ல ஊடகவியலாளர்களுக்கும் கெட்ட பெயர்.
உங்கள் தேவையையும் உங்கள் தகவலையும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.
நன்றி.
– அஷ்கி அஹமட் –

https://www.thenation.lk/2020/04/blog-post_84.html