Browsing All Posts filed under »உலக பத்திரிகை சுதந்திர தினம்«

உண்மைகளை வெளிக்கொணர உயிரை கொடுத்தவர்கள்

ஒக்ரோபர் 20, 2022

1

உண்மைகளை வெளிக்கொணர உயிரைக் கொடுத்தவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள்.அடிப்பாங்கள், உதைப்பாங்கள், எரிப்பாங்கள், கொழுத்துவாங்கள் ஆனாலும் தொடர்ந்தும் வரும் என்றார் யோகர் சுவாமிகள் 1961 இல். யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்ட்ட போது யோகர் சுவாமிகளிடம் அருள் வாக்குப்பெறச் சென்றபோது இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். ஆம் அவருடைய அருள்வாக்கு பின் நாட்களில் பலித்துத்தான் போய்விட்டது. உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு வீறுகொண்டெழுந்த போராட்டங்களும், அதனோடு எழுச்சி பெற்ற தமிழ் ஊடகவியலும் பின்னாளில் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்படும் என்பதை அன்றே யாழ்ப்பாணத்தின் […]

பிரகாஸ் எனும் ஊடகவியலாளன்

செப்ரெம்பர் 11, 2021

0

பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர் செய்தியாகிப் போனமையால் ஊடகங்களில் இடம் பிடித்து முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஊடகவியலாளர்கள் செய்திகளை தேடித் தெளிந்து வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் தாங்களே செய்தியாக விரும்புவதில்லை. அந்தத் துரதிஸ்டம் பிரகாஸுக்கு நேர்ந்துவிட்டது. அந்தத் துயரம் ஊடகத்துறையை குறி;ப்பாக தமிழ் ஊடகத்துறையின் மனதைக் கீறி சோகமடையச் செய்து விட்டது.பிரகாஸ் […]

‘நான் வேலைக்காரி அல்ல, செய்தியாளர்’ – பெண் பத்திரிகையாளர்

ஓகஸ்ட் 26, 2021

0

இனவாதப் பிரச்னைகளால் சமூகம் பெரிதும் பிரிந்து கிடந்த காலகட்டத்தில் டொரோதி பட்லர் கில்லியம், ஒரு முன்னணி அமெரிக்க செய்தித்தாளில், கருப்பின பெண் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், வெள்ளை இனவாத ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த உலகில், ஒரு கருப்பின பெண்ணாக இருந்தது, எப்படி அவர் வாழ்க்கையை வடிவமைத்தது என்று அவரிடம் கேட்டார் பிபிசியின் ஃபர்ஹானா ஹைதர் . வாஷிங்டனில் உள்ள ஒரு பணக்கார பெண்ணின் 100 வது பிறந்தநாள் விழாவிற்கு டொரோதி பட்லர் கில்லியம் சென்றபோது, ​​அவ்வீட்டு […]

தினமுரசு நாட்கள்…..

மே 26, 2021

0

களுவாஞ்சிக்குடி சந்தைக்கு போய்வரும் அனேகரின் பைகளில் வீரகேசரி பத்திரிகை இருக்கும்.பத்திரிகை எனில் அந்த நாட்களில் வீரகேசரி தமிழர்களிடமும் தினகரன் முஸ்லிம்களிடமும் பிரபலம்.இருதரப்புக்கும் பொதுவானது எனில் தினபதி மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான சிந்தாமணி.இணையத்தளங்களின் வாசமேயில்லை. வானொலி , தொலைகாட்சிகளும் பெரிதாக பிரபல்யம் அடையாத நாட்களில் பத்திரிகைகட்கு நிறைய வாசகர்கள் இருந்தனர்.சிலருக்கு சிகரெட் பிடிக்காது டாய்லெட் போகாது.அதேபோல் பத்திரிகை படிக்காமல் பலருக்கு நாள் கழியாது. எங்கள் பகுதிகளில் பிரபல்யமான பத்திரிகை என்றால் அது வீரகேசரி தான்.ஆனால் அதன் வீக் […]

‘BBC’யின் கீர்த்தியும் கௌரவமும்

மே 24, 2021

0

செய்தியின் பின்னணியில்…. இளவரசி டயானாவுடனான பிபிசி தொலைக்காட்சி நேர்காணல், செய்தி உலகில் வரலாற்று பதிவாகின்ற ஒன்று. உலகெங்கும் சுமார் இரண்டரைக் கோடி மக்கள் இந் நேர்காணலை அப்போது தொலைக்காட்சிகளில் பார்த்தார்கள். 1995 நவம்பர் 20ஆம் திகதி இது ஒளிபரப்பானது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தை ஓர் உலுக்கு உலுக்கி, உலகையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்ட இந்த நேர்காணலை மாட்டின் பஷிர் என்பவர் நிகழ்த்தினார்.மூன்று ஆண்டுகளுக்கு முன்னராகவே பிரிந்திருந்த இளவரசர் சார்ள்ஸும் டயானாவும், இந்த நேர்காணலின் பின்னரான சில மாதங்களில், […]

யார் இந்த தேஜ்பால்?

மே 21, 2021

0

அரசியல், புலனாய்வு பத்திரிகையான டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால், 2013ம் ஆண்டு தனது பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவா மாநில விசாரணை நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. கோவாவில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டெஹல்கா நிகழ்ச்சி ஒன்றில் தமது பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாக தேஜ்பால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு ஏழு மாதங்கள் […]

நான்காவது தூணின் தலையில் தட்டக்கூடாது

மே 11, 2021

0

நான்காவது தூணின் சுதந்திரத்தின் தலையில் தட்டக்கூடாது தனக்கு மேலிருக்கும் மூன்று தூண்களின் செயற்பாடுகளையும் கழுகுக் கண்கொண்டு பார்த்து, மக்களுக்கு அறிவித்து, நேரடியான உறவுப்பாலமாய் இருப்பதுதான் ஊடகமாகும். இதைத்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பர். அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவற்றுக்கு அடுத்ததாக ஊடகம் இருக்கிறது. ஊடகங்களால், ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும். தவறான பாதையில், கண்மூடித்தனமாகப் பயணிக்கும் அரசாங்கத்தை நல்வழிக்குள் இழுத்துவிடவும் ஊடகத்துக்கு முடியும். உலகளவிலான பல நாடுகளில் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களுக்கு, ஊடகங்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளன. ஊழல், மோசடிகள், […]

ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா

பிப்ரவரி 21, 2021

0

ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் 18 பெப்ரவரி 1990. ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியில் இச்சம்பவம் இடம்பெற்றது.தமிழரான தாயார் கொழும்பில் பிரபல மருத்துவர் மனோராணி சரவணமுத்து.தந்தையார் பெரும்பான்மை இனத்தவர். ராஜகிரி-வெலிக்கடவத்த இல்லத்தில் இரவு ஆயுதங்களுடன் வந்த சிலர்,எந்தவித கேள்வியுமின்றி பிடித்து இழுத்துச்சென்றனர். வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் இலங்கை ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல் தடவை.அவரின் முகவரியை தெரியாத கடத்தல்காரர்,முதலில் மல்வத்தை வீதியில் வசிக்கும் ITN + ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் திருமதிகெனத் […]

வாடாத ‘மல்லிகை’

பிப்ரவரி 3, 2021

0

‘மல்லிகை ஜீவா’ என எல்லோராலும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா, தனது 94ஆவது வயதில், ஜனவரி மாதம் 29ஆம்திகதி மாலை, கொழும்பில் காலமானார் என்பதை, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின! சமூகப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர், விமர்சகர், பதிப்பாளர் என எல்லா முகங்களையும் ஒருங்கே கொண்ட இலக்கிய உழைப்பாளி! வர்த்தகர்களையும் இலக்கியத்துக்குள் இழுத்துவந்த இலக்கிய விநியோகஸ்தர்! இலக்கிய உற்பத்தி என்பது ‘கற்றோர் மாட்டன்று’ என்பதை சரித்திரமாக்கிய வரலாறு […]

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

பிப்ரவரி 1, 2021

0

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.) “இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்” என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. “மூக்நாயக்” (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் […]