Browsing All Posts filed under »உலக பத்திரிகை சுதந்திர தினம்«

டெல்லி விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளர்களை நசுக்குகிறதா அரசு? – குவியும் வழக்குகள்

பிப்ரவரி 1, 2021

0

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக, செய்தி வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது, அரசு தொடர்ந்து வழக்கு தொடர்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதற்கு மிக சமீபத்திய உதாரணம், மன்தீப் பூனியா என்கிற சுயாதீனப் பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதுதான். மன்தீப் கடந்த சனிக்கிழமை இரவு சிங்கு எல்லையில், காவலர்களின் பணியைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். […]

ஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்

ஜனவரி 8, 2021

0

நுகர்வுப் பண்பாடு என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை மிகுவிக்கச் செய்யும் பொருளாதாரம் சார்ந்த ஒரு வாழ்வியல் முறைமை ஆகும். ஒரு நாட்டின் பொருளாதார நலன் அந்நாட்டு மக்களின் நுகர்வுப் பண்பாட்டை நம்பியே உள்ளது என்ற கருத்தாக்கம் சந்தைப் பொருளாதாரத்தின் தாரக மந்திரமாகும். நுகர்வுப் பண்பாடு, தேவைக்கும் /தேவைக்கு அதிகமாகவும் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் உற்பத்தித் துறை, சேவை மையத் தொழில் வாய்ப்புகள், விளம்பரங்கள், […]

சிரித்திரன் சுந்தர்

திசெம்பர் 31, 2020

0

‘செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் மாமனிதர் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் 15000க்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1963ஆம் அண்டில் ஆரம்பிக்கப்பட்ட “சிரித்திரன்” சஞ்சிகை திரு சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து […]

நேர்மையான ஒரு தமிழ்ப் பத்திரிகையாளரின் குரலை நசுக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

திசெம்பர் 30, 2020

0

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளில் எத்தனையோ பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் என நூற்றுக்கணக்கான தமிழ் சிங்கள ஆங்கில மொழிப் பத்திரிகையாளர்களின் குரல்கள் பல்வேறு பிரிவினர்களால் நசுக்கப்பட்டுள்ளன. பலர் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள், பலர் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக மறைக்கப்பட்டுள்ளார்கள், அல்லது கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழ் பேசும் பத்திரிகையாளர்களான தராக்கி சிவராம், நடேசன், மயில்வாகனம் நிமலராஜன்,சுப்பிரமணியம் இராமச்சந்திரன் போன்ற எத்தனையோ தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் கோத்தபாய தரப்பாலும் அரச சார்பு தமிழ் அமைப்புக்களாலும் கொலை செய்யப்பட்டார்கள். இதைப்போலவே, லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, ரிச்சார்ட் டி […]

மட்டக்களப்பு ஊடகத்துறை வரலாற்றில் சுகுணம் ஜோசப் என்ற ஆளுமை.

திசெம்பர் 30, 2020

0

ஊடகவியலாளராக மனித உரிமை செயற்பாட்டாளராக தமிழ் தேசிய விடுதலையை பற்றுறுதியோடு நேசித்த அரசியல்வாதியாக பல தடங்களை பதித்த ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இரத்தம் புனித மரியாள் காலடியில் சிந்தப்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் கடந்து விட்டன. ஜோசப் போன்ற ஆளுமைகளை மட்டக்களப்பு அரசியல் தளத்திலிருந்து அதற்கு அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் தளத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜோசப் பரராசசிங்கம் உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு நீதி கிடைக்கும் என இலங்கையின் அரசியல் நிலவரங்களை […]

அச்சுக்கூடம்: பன்னாட்டு தொடர்பாடல் ஆய்விதழ் :

திசெம்பர் 22, 2020

0

 தமிழகம் குழுமத்தின் சார்பில், ஆய்வகம், பழமொழி, அச்சுக்கூடம் ஆகிய பன்னாட்டு ஆய்விதழ்களை வெளியிட்டு வருகின்றது. பன்னாட்டு ஆய்வுகளை தமிழில் வெளியிட உறுதுணையாக இருப்பதை ஆய்வகம், பழமொழி, அச்சுக்கூடம் ஆகிய பன்னாட்டு ஆய்விதழ்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அச்சுக்கூடம்: பன்னாட்டு தொடர்பாடல் ஆய்விதழ்      அச்சுக்கூடம், தொடர்பாடல் ஆய்வுகளை தமிழில் முன்னெடுக்கும் பன்னாட்டு ஆய்விதழ் ஆகும். தொடர்பாடல் கலை மற்றும் ஊடக அறிவியலுக்கான இப்பன்னாட்டு ஆய்விதழ், இதழியல் மற்றும் தொடர்பாடல் துறை சார்ந்த ஆய்வுகளை உலகத் தமிழர்களிடையேயும், அறிவுலகத்தின் பார்வைக்கும் கொண்டு […]

பெண்களை தரம் தாழ்த்தும் சொற்கள் பயன்பாடுக்கு எதிராகத் தொடங்கிய வித்தியாச முயற்சி

திசெம்பர் 21, 2020

0

ஒரு வாக்குவாதம் சண்டையாக மாறத் தொடங்கும் போதெல்லாம், தரம் தாழ்ந்த சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விவாதம் அல்லது சண்டை நடக்கும்போது கூட, பெண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களே பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விஷயம். இதுபோன்ற கெட்ட வார்த்தைகளை மக்களின் அகராதியிலிருந்து அகற்றுவதற்காக, இரண்டு பெண்கள் ‘த காலி ப்ராஜக்ட்’ என்ற திட்டத்தைத் தொடங்கினர். இதன் மூலம் தரம் தாழ்ந்த சொற்களை விடுத்து வேறு வழியில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தச் செய்வதே இதன் நோக்கம். இந்த திட்டத்துடன் தொடர்புடைய […]

ஊடகம், ஊடகவியல் மற்றும் ஊடகவியலாளர்?

திசெம்பர் 20, 2020

0

ஊடகம்தகவல்தொடர்பில், ஊடகம்(ஊடகங்கள்) என்பது தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இது பெரும்பாலும், மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம் என்றும் குறிப்பிடப்படும், மாறாக ஒருமையில் இது ஊடகம் என குறிப்பிடப்படுகிறது. பரிணாம வளர்ச்சிமனித தகவல் தொடர்பு பண்டைய காலங்களில் குகை ஓவியங்கள், வரையப்பட்ட வரைபடங்கள், மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. இதன் பின்னர் தொழிநுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய […]

தமிழ் முரசோடு வளரும் தலைமுறை

நவம்பர் 28, 2020

0

தான் விநியோகிக்கும் நாளிதழில் தன் மகள் எழுதுவாள் என நினைத்திராத இ. இளங்கோவன், தமிழ் முரசின் இளம் செய்தியாளரான மகள் இந்து, உயர்நிலை 4 மாணவரான மகன் இனியவன் இருவருடன் தமிழ் முரசு மின்னிதழையும் அச்சு இதழையும் படித்து மகிழ்கிறார்.படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்து இளங்கோவன் அன்றைக்கு எனது அப்பாவுக்கு, முக்கியமாக அவர் எடுத்து வரும் தமிழ் முரசுக்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன். அன்று ஜூன் 15-ஆம் தேதி. செய்தித்தாள் படிப்பதில் அதிக நாட்டம் காட்டாத நான், […]

85வது ஆண்டில் தமிழ் முரசு

நவம்பர் 28, 2020

0

6.7.1935 சனிக்கிழமை, தமிழர் சீர்திருத்தச் சங்க இல்லத்தில் (கிள்ளான் ரோடு) முரசின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. சீர்திருத்தச் சங்க செயலாளர் கோ. சாரங்கபாணி ஆசிரியர். இதழின் விலை ஒரு காசு. 1935 ஆகஸ்ட் மாதத்திலேயே சிங்கப்பூரில் 1,500 பிரதிகளும் மலேசியாவில் 500 பிரதிகளும் விற்றன. வார இதழாகத் தொடங்கப்பட்ட முரசு மூன்று மாதங்களிலேயே வாரம் மூன்று முறை வெளிவரத் தொடங்கியது. சில வாரங்களிலேயே சங்கம் செய்தித்தாளைக் கைவிட, கோ.சாரங்கபாணி பத்திரிகையை நடத்தத் தொடங்கினார். 2.5.1936 முதல் பெரிய […]