Browsing All Posts filed under »குழுத்தொடர்பாடல்«

சானா சண்முகநாதன் ,இலங்கை வானொலி புகழ் லண்டன் கந்தையா

நவம்பர் 2, 2021

0

சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். கொழும்பில் சனவரி 11, 1911 இல் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். ஓவியம் பயில்வதற்காக தமிழ்நாடு சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் (கண்ணகி, தமிழறியும் பெருமாள், சகுந்தலை) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் சிறு […]

கோயம்புத்தூர் முதியோர் நடத்தும் ஆன்லைன் ரேடியோ – கொரோனா காலத்தில் ஒரு தன்னம்பிக்கை கதை

ஜூன் 27, 2021

0

”நான் சில மாதங்களுக்கு முன்பு மன அழுத்தத்தில் இருந்தேன். யாரிடமும் பேசிப் பழக மாட்டேன். அதிக நேரம் தனிமையில் இருப்பதையே விரும்பினேன். ஆனால், இப்போது அனைவரிடமும் சிரித்து பேசுகிறேன். புதிய மனிதர்களிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஆர்வமாக இருக்கிறேன்” என கூறிய முதியவர் ஒருவர், தனது வயலின் இசைக்கருவியோடு நம்மையும் ‘தபோவாணி’ ஆன்லைன் ரேடியோ குழுவினரை சந்திக்க அழைத்துச் சென்றார். கோவை மாதம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ‘தபோவனம் – மூத்தோர் குடியிருப்பு’ வளாகத்தில் வசிக்கும் முதியோர்கள் ஒன்றிணைந்து, ‘தபோவாணி’ […]

பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

ஜூன் 4, 2021

0

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா. இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன. “இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் […]

ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா

பிப்ரவரி 21, 2021

0

ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் 18 பெப்ரவரி 1990. ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியில் இச்சம்பவம் இடம்பெற்றது.தமிழரான தாயார் கொழும்பில் பிரபல மருத்துவர் மனோராணி சரவணமுத்து.தந்தையார் பெரும்பான்மை இனத்தவர். ராஜகிரி-வெலிக்கடவத்த இல்லத்தில் இரவு ஆயுதங்களுடன் வந்த சிலர்,எந்தவித கேள்வியுமின்றி பிடித்து இழுத்துச்சென்றனர். வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் இலங்கை ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல் தடவை.அவரின் முகவரியை தெரியாத கடத்தல்காரர்,முதலில் மல்வத்தை வீதியில் வசிக்கும் ITN + ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் திருமதிகெனத் […]

நில், கவனி, செ(π)ல்

பிப்ரவரி 6, 2021

0

மளிகைக் கடைக்கு வந்த சிறுவனிடம் கடைக்காரர் என்ன வேண்டுமென்று கேட்கிறார். அவன் சுக்குமி ளகுதி ப்பிலி என்கிறான். அவர் குழம்பிப் போனார். அவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கி படிக்கும் போதுதான் அவருக்குப் புரிந்தது, அவனுக்கு சுக்கு, மிளகு, திப்பிலி வேண்டுமென்று.  இதைத் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் நமக்குச் சொல்லி இருப்பார்கள், கேட்டிருப்போம். மகாபாரத நாடகம்; பீமன் மேடைக்கு வந்து விட்டான். அவன் நடிக்க பின்னணியில் பாட்டு வரும்; பாடுபவர் அன்று புதிதாகச் சேர்ந்தவர். பீமன் விழிக்க விழிக்க அவர் […]

வாடாத ‘மல்லிகை’

பிப்ரவரி 3, 2021

0

‘மல்லிகை ஜீவா’ என எல்லோராலும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா, தனது 94ஆவது வயதில், ஜனவரி மாதம் 29ஆம்திகதி மாலை, கொழும்பில் காலமானார் என்பதை, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின! சமூகப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர், விமர்சகர், பதிப்பாளர் என எல்லா முகங்களையும் ஒருங்கே கொண்ட இலக்கிய உழைப்பாளி! வர்த்தகர்களையும் இலக்கியத்துக்குள் இழுத்துவந்த இலக்கிய விநியோகஸ்தர்! இலக்கிய உற்பத்தி என்பது ‘கற்றோர் மாட்டன்று’ என்பதை சரித்திரமாக்கிய வரலாறு […]

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

பிப்ரவரி 1, 2021

0

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.) “இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்” என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. “மூக்நாயக்” (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் […]

தமிழ்த் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு…

ஜனவரி 27, 2021

0

தமிழில் உள்ள எல்லாத் தொலைக்காட்சிகளையும் பல வருடங்கள் பார்த்தபிறகு நான் உங்களிடம் ஒரு தமிழனாய் வைக்கிற இரண்டு வேண்டுகோள்கள். 1. உங்களில் சிலரின் தமிழ் உச்சரிப்பு பரவாயில்லை. பலரின் உச்சரிப்பு ரொம்ப மோசம். தயவுசெய்து உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சரியாக உச்சரிப்பதாக நீங்களே நம்பிக்கொண்டு இந்தக் கொலைமுயற்சியைத் தொடரவேண்டாம். அப்படி தவறான எண்ணம் உங்கள் மனதில் இருப்பதால்தான் நீங்கள் இன்னமும் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.‘ஆனால் எங்கள் தொலைக்காட்சியில் இதுவரை யாரும் அப்படி எதுவும் என்னை சொன்னதில்லையே’ என்று […]

அண்ணலின் பார்வையில் – செய்தித்தாள்கள் யாருக்கானது?

ஜனவரி 8, 2021

0

‘செய்தித்தாள்கள் வெளியிடும் செய்திகள் அறம் சார்ந்து உண்மையை வெளியிடுபவையாக குரலற்ற எளிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். வணிக ரீதியாக இருக்க கூடாது”. – அண்ணல் அம்பேத்கர். பத்திரிக்கைச்செய்தி: “தமிழ்நாடு முழுவதும் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிலுவையிலுள்ளது எனவும், அதனை நிலுவையின்றி முடிவு செய்யாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாண்பமை நீதிமன்றம் உத்தரவு”. மேற்கண்ட பத்திரிக்கை செய்தியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க தாமதமின்றி […]

சிறுபத்திரிக்கைகள் குறித்து

ஜனவரி 8, 2021

0

சிறுபத்திரிக்கைகள் குறித்து பேசுவதும்.. கலந்துரையாடுவதும்… காலத்தின் தேவை என்றே கருதுகிறேன். ஏனென்றால் சமூகத்தின் ஓர் அங்கமாகவே தான் சிறு பத்திரிக்கைகள் இருக்கின்றன. மனிதன் தன்னை தொடர்ந்து பண்படுத்திக் கொண்டே இருக்க கலை இலக்கியம் மிக அவசியம். அந்த கலை இலக்கியத்தின் முக்கியமான வடிவம் தான் சிறு பத்திரிக்கைகள் என்று நம்புகிறேன். முதன் முதலில் ஆனந்த விகடனில் தான் எனது கவிதை வெளி வந்தது. எழுதி எழுதி நிறைந்து கிடக்கும் ஒருவனுக்கு பத்திரிக்கை வெளி மிக தேவையான ஒரு […]