Browsing All posts tagged under »இதழியல்«

ஐயாத்துரை வர்ணகுலசிங்கம்

மே 1, 2022

0

(அமரர்.A.V.குலசிங்கம்) திரு.A.V.குலசிங்கம் தன் வாழ்நாளில் கால் பதித்த அனைத்து முயற்சியாண்மையிலும் முதல்வராக விளங்கியவர். ஆசிரியர், அரசியல் வாதி, பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், விவசாயி ஆகிய தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக ஆற்றக் கூடிய பன்முக ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார். இத்தகையதோர் திறமைசாலி காரைநகரில் ஆடம்பரமின்றி, சாமானியனாக வாழ்ந்து தனது எண்பத்து எட்டாவது வயதில் இவ்வுலகில் இருந்து விடை பெற்றுச் சென்றார். 1890ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11ந் திகதி காரைநகரில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை அயலில் இயங்கிய […]

இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம்

ஜனவரி 13, 2022

0

இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது. ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை […]

இலங்கை வானொலி புகழ் சானாவின் பாசறையில் வளர்ந்த சற்சொரூபவதிநாதன்

நவம்பர் 28, 2021

0

இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர்.மார்ச் 6, 1937இல் பிறந்த இவருக்கு இரண்டு சகோதரிகளும் மூன்று ஆண் சகோதரர்களும் இருந்தார்கள் ஜவகர்லால் நேரு விருது (1958)சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது (1995)ஒலிபரப்பாளருக்கான ‘உண்டா’ விருது (1992)இந்து கலாசார அமைப்பின் தொடர்பியல் வித்தகர் விருது (1993)வானொலி பவள விருதுவாழ்நாள் சாதனையாளர் விருதுதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய விருதுயாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சகலகலாவித்தகி விருதுகொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சான்றோர் […]

சானா சண்முகநாதன் ,இலங்கை வானொலி புகழ் லண்டன் கந்தையா

நவம்பர் 2, 2021

0

சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். கொழும்பில் சனவரி 11, 1911 இல் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். ஓவியம் பயில்வதற்காக தமிழ்நாடு சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் (கண்ணகி, தமிழறியும் பெருமாள், சகுந்தலை) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் சிறு […]

சானாவின் பாசறையில் மிளிர்ந்த ராஜேஸ்வரி சண்முகம்

நவம்பர் 2, 2021

0

இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.நாடகத் துறை மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் இராஜேசுவரி. 1952 ஆம் ஆண்டில் கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் […]

பெண் அறிவிப்பாளர்கள்

ஒக்ரோபர் 31, 2021

0

இலங்கை வானொலி தமிழ் வர்த்தக ஒலிபரப்பு 1950களில் ஆரம்பமான காலகட்டத்தில் அறிவிப்புப் பணிகளில் ஈடுபட்ட முதல் இருபெண் அறிவிப்பாளர்கள் அப்போது செல்விகளாக இருந்த புவனலோஜனி வேலுப்பிள்ளை மற்றும் யோகா சொக்கநாதன் ஆகிய இருவரும் என்று விஷயமறிந்தவர்கள் மூலம் அறிய முடிகிறது! 1966ல் பகுதி நேர அறிவிப்பாளர்களாக வர்த்தக சேவையில் நியமனம் பெற்ற அவர்களில் திருமதி புவனலோஜனி நடராஜசிவம் அவர்கள் “பூவும் பொட்டும்”மங்கையர் மஞ்சரியைத் தொடர்ந்து 25ஆண்டுகள் நடத்தினார்!’அரங்கேற்றம்’ எனும் நிகழ்ச்சியையும் நீண்ட காலம் வழங்கினார்! திரையிசைப் பாடல்கள் […]

பிரகாஸ் எனும் ஊடகவியலாளன்

செப்ரெம்பர் 11, 2021

0

பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர் செய்தியாகிப் போனமையால் ஊடகங்களில் இடம் பிடித்து முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஊடகவியலாளர்கள் செய்திகளை தேடித் தெளிந்து வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் தாங்களே செய்தியாக விரும்புவதில்லை. அந்தத் துரதிஸ்டம் பிரகாஸுக்கு நேர்ந்துவிட்டது. அந்தத் துயரம் ஊடகத்துறையை குறி;ப்பாக தமிழ் ஊடகத்துறையின் மனதைக் கீறி சோகமடையச் செய்து விட்டது.பிரகாஸ் […]

‘நான் வேலைக்காரி அல்ல, செய்தியாளர்’ – பெண் பத்திரிகையாளர்

ஓகஸ்ட் 26, 2021

0

இனவாதப் பிரச்னைகளால் சமூகம் பெரிதும் பிரிந்து கிடந்த காலகட்டத்தில் டொரோதி பட்லர் கில்லியம், ஒரு முன்னணி அமெரிக்க செய்தித்தாளில், கருப்பின பெண் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், வெள்ளை இனவாத ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த உலகில், ஒரு கருப்பின பெண்ணாக இருந்தது, எப்படி அவர் வாழ்க்கையை வடிவமைத்தது என்று அவரிடம் கேட்டார் பிபிசியின் ஃபர்ஹானா ஹைதர் . வாஷிங்டனில் உள்ள ஒரு பணக்கார பெண்ணின் 100 வது பிறந்தநாள் விழாவிற்கு டொரோதி பட்லர் கில்லியம் சென்றபோது, ​​அவ்வீட்டு […]

பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

ஜூன் 4, 2021

0

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா. இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன. “இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் […]

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

பிப்ரவரி 1, 2021

0

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.) “இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்” என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. “மூக்நாயக்” (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் […]