Browsing All Posts filed under »இந்திய ஊடகம்«

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி ..

ஓகஸ்ட் 13, 2022

0

SAROJ NARAYANASWAMY – ALL INDIA RADIO ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி .. TV காலத்துக்கு முந்தையவர், எங்களை ப்போல. இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் இன்முகம் காண்போமே .. ! வயது 85 இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இப்படி தமது குரலால் புகழ் பெற்றவர்களில் முக்கியமான ஒருவரைத் தேடி கண்டடைந்தோம். அவர்தான் அகில இந்திய […]

கோயம்புத்தூர் முதியோர் நடத்தும் ஆன்லைன் ரேடியோ – கொரோனா காலத்தில் ஒரு தன்னம்பிக்கை கதை

ஜூன் 27, 2021

0

”நான் சில மாதங்களுக்கு முன்பு மன அழுத்தத்தில் இருந்தேன். யாரிடமும் பேசிப் பழக மாட்டேன். அதிக நேரம் தனிமையில் இருப்பதையே விரும்பினேன். ஆனால், இப்போது அனைவரிடமும் சிரித்து பேசுகிறேன். புதிய மனிதர்களிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஆர்வமாக இருக்கிறேன்” என கூறிய முதியவர் ஒருவர், தனது வயலின் இசைக்கருவியோடு நம்மையும் ‘தபோவாணி’ ஆன்லைன் ரேடியோ குழுவினரை சந்திக்க அழைத்துச் சென்றார். கோவை மாதம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ‘தபோவனம் – மூத்தோர் குடியிருப்பு’ வளாகத்தில் வசிக்கும் முதியோர்கள் ஒன்றிணைந்து, ‘தபோவாணி’ […]

பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

ஜூன் 4, 2021

0

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா. இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன. “இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் […]

யார் இந்த தேஜ்பால்?

மே 21, 2021

0

அரசியல், புலனாய்வு பத்திரிகையான டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால், 2013ம் ஆண்டு தனது பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவா மாநில விசாரணை நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. கோவாவில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டெஹல்கா நிகழ்ச்சி ஒன்றில் தமது பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாக தேஜ்பால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு ஏழு மாதங்கள் […]

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

பிப்ரவரி 1, 2021

0

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.) “இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்” என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. “மூக்நாயக்” (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் […]

டெல்லி விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளர்களை நசுக்குகிறதா அரசு? – குவியும் வழக்குகள்

பிப்ரவரி 1, 2021

0

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக, செய்தி வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது, அரசு தொடர்ந்து வழக்கு தொடர்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதற்கு மிக சமீபத்திய உதாரணம், மன்தீப் பூனியா என்கிற சுயாதீனப் பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதுதான். மன்தீப் கடந்த சனிக்கிழமை இரவு சிங்கு எல்லையில், காவலர்களின் பணியைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். […]

தமிழ்த் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு…

ஜனவரி 27, 2021

0

தமிழில் உள்ள எல்லாத் தொலைக்காட்சிகளையும் பல வருடங்கள் பார்த்தபிறகு நான் உங்களிடம் ஒரு தமிழனாய் வைக்கிற இரண்டு வேண்டுகோள்கள். 1. உங்களில் சிலரின் தமிழ் உச்சரிப்பு பரவாயில்லை. பலரின் உச்சரிப்பு ரொம்ப மோசம். தயவுசெய்து உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சரியாக உச்சரிப்பதாக நீங்களே நம்பிக்கொண்டு இந்தக் கொலைமுயற்சியைத் தொடரவேண்டாம். அப்படி தவறான எண்ணம் உங்கள் மனதில் இருப்பதால்தான் நீங்கள் இன்னமும் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.‘ஆனால் எங்கள் தொலைக்காட்சியில் இதுவரை யாரும் அப்படி எதுவும் என்னை சொன்னதில்லையே’ என்று […]

ஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்

ஜனவரி 8, 2021

0

நுகர்வுப் பண்பாடு என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை மிகுவிக்கச் செய்யும் பொருளாதாரம் சார்ந்த ஒரு வாழ்வியல் முறைமை ஆகும். ஒரு நாட்டின் பொருளாதார நலன் அந்நாட்டு மக்களின் நுகர்வுப் பண்பாட்டை நம்பியே உள்ளது என்ற கருத்தாக்கம் சந்தைப் பொருளாதாரத்தின் தாரக மந்திரமாகும். நுகர்வுப் பண்பாடு, தேவைக்கும் /தேவைக்கு அதிகமாகவும் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் உற்பத்தித் துறை, சேவை மையத் தொழில் வாய்ப்புகள், விளம்பரங்கள், […]

ஊடக பாசிசமும் மாற்று ஊடகத்திற்கான தேவையும்

ஜனவரி 8, 2021

0

நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து பத்திரிகையாளர் ஹாசிப் முகமது வற்புறுத்தல் காரணமாக பதவி விலக வைக்கப் பட்டதாகவும், குணசேகரன் அவர்களின் அதிகாரம் குறைக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஊடகத்துறை என்பது நாட்டின் நான்காவது தூண் என்றும், அது நாட்டில் நடக்கும் அநீதிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துறை என்றும், அந்தத் துறையில் பணியாற்றினால் ஊழல்வாதிகளையும், சாதிவெறியர்களையும், மதவெறியர்களையும் அம்பலப்படுத்தி, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படும் ஜனநாயக விரோத சக்திகளை தண்டித்து […]

யாருக்கு எழுதுகிறோம்?

ஜனவரி 8, 2021

0

சமீபத்தில் சமீபத்திய அடிப்படைகள் மீதே சந்தேகம் வரத் தொடங்கி விட்டது. சந்தேகப் படுவதில் இருக்கும் சுகம் கண்டு பழகும் மனதை கொய்யா மரத்தில் தூக்கிலிடத் துடிக்கிறேன். ஆனால் அவை தாண்டிய சிந்தையில்… கொய்யா மரங்கள் எங்குமே இருக்க போவது இல்லை. எல்லாமே கொய்த மரங்கள் தான். பேரண்டத்தில்… பெருவெளிச்சம் காதலியின் மூக்குத்தி என்பது சுவை தான். எனினும்… எறும்பு பசிக்கு கூட ஆகாத உவமை. சாலையில்.. முன்னெப்போதும் இல்லாத அளவு எதிரே வரும் ஆணோ பெண்ணோ முகம் […]