Browsing All posts tagged under »தினகரன்«

தினமுரசு நாட்கள்…..

மே 26, 2021

0

களுவாஞ்சிக்குடி சந்தைக்கு போய்வரும் அனேகரின் பைகளில் வீரகேசரி பத்திரிகை இருக்கும்.பத்திரிகை எனில் அந்த நாட்களில் வீரகேசரி தமிழர்களிடமும் தினகரன் முஸ்லிம்களிடமும் பிரபலம்.இருதரப்புக்கும் பொதுவானது எனில் தினபதி மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான சிந்தாமணி.இணையத்தளங்களின் வாசமேயில்லை. வானொலி , தொலைகாட்சிகளும் பெரிதாக பிரபல்யம் அடையாத நாட்களில் பத்திரிகைகட்கு நிறைய வாசகர்கள் இருந்தனர்.சிலருக்கு சிகரெட் பிடிக்காது டாய்லெட் போகாது.அதேபோல் பத்திரிகை படிக்காமல் பலருக்கு நாள் கழியாது. எங்கள் பகுதிகளில் பிரபல்யமான பத்திரிகை என்றால் அது வீரகேசரி தான்.ஆனால் அதன் வீக் […]

சிரித்திரன் சுந்தர்

திசெம்பர் 31, 2020

0

‘செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் மாமனிதர் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் 15000க்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1963ஆம் அண்டில் ஆரம்பிக்கப்பட்ட “சிரித்திரன்” சஞ்சிகை திரு சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து […]

‘மெய்ப்பொருள்’ காணுமா தினகரன் யாழ் பதிப்பு?

ஒக்ரோபர் 2, 2020

0

(யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று வெளியிடப்பட்ட தினகரன் யாழ் பதிப்பான “வடக்கின் உதயம்“ முதல் வெளியீட்டில் வெளியான எனது கட்டுரை)இலங்கையில் அதிகளவு பிராந்தியப் பத்திரிகைகள் வெளிவருகின்ற யாழ்ப்பாணத்துக்கென இன்னுமொரு விசேட பத்திரிகையாக தினகரன் யாழ் பதிப்பு வெளிவருகிறது. இதன்மூலம் தினகரன் எதனைச் சாதிக்கப்போகிறது? பத்தோடு பதினொன்றாக எண்ணிக்கையில் இன்னொன்றாக மட்டும் இருக்கப்போகிறதா? அல்லது, இதுவரைகாலமும் வெளியாகிவரும் அனைத்துத் தமிழ்ப் பிராந்தியப் பத்திரிகைகளும் நிரப்பாத, ஆனால் அவசியம் நிரப்பப்படவேண்டிய இடைவெளியை நிரப்புவதாக அது அமையப்போகிறதா? அப்படி அமைந்தால் […]