Browsing All posts tagged under »ஊடகம்«

ஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்

ஜனவரி 8, 2021

0

நுகர்வுப் பண்பாடு என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை மிகுவிக்கச் செய்யும் பொருளாதாரம் சார்ந்த ஒரு வாழ்வியல் முறைமை ஆகும். ஒரு நாட்டின் பொருளாதார நலன் அந்நாட்டு மக்களின் நுகர்வுப் பண்பாட்டை நம்பியே உள்ளது என்ற கருத்தாக்கம் சந்தைப் பொருளாதாரத்தின் தாரக மந்திரமாகும். நுகர்வுப் பண்பாடு, தேவைக்கும் /தேவைக்கு அதிகமாகவும் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் உற்பத்தித் துறை, சேவை மையத் தொழில் வாய்ப்புகள், விளம்பரங்கள், […]

ஊடகம், ஊடகவியல் மற்றும் ஊடகவியலாளர்?

திசெம்பர் 20, 2020

0

ஊடகம்தகவல்தொடர்பில், ஊடகம்(ஊடகங்கள்) என்பது தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இது பெரும்பாலும், மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம் என்றும் குறிப்பிடப்படும், மாறாக ஒருமையில் இது ஊடகம் என குறிப்பிடப்படுகிறது. பரிணாம வளர்ச்சிமனித தகவல் தொடர்பு பண்டைய காலங்களில் குகை ஓவியங்கள், வரையப்பட்ட வரைபடங்கள், மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. இதன் பின்னர் தொழிநுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய […]

90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி !

செப்ரெம்பர் 2, 2020

0

தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக  வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது. தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று  சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் […]

‘ரகசிய வானொலி நிலையம்’

ஓகஸ்ட் 15, 2020

0

இந்திய சுதந்திர போராட்டம்: முக்கிய பங்கு வகித்த ‘ரகசிய வானொலி நிலையம்’ பார்த் பாண்டியா மற்றும் ரவி பர்மார்   பட மூலாதாரம்,‘FREEDOM FIGHTERS REMEMBER’ 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி. பாம்பே (இப்போது மும்பை) கொவாலியா டேங்க் மைதானத்தில் மகாத்மா காந்தியின் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். “நான் இன்று உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ‘செய் அல்லது செத்து மடி'” என்று கூறினார் காந்தி. […]

“சமூகப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்”

ஓகஸ்ட் 8, 2020

0

சமீப நாட்களாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என பல தளங்களில் பேசுபொருளாகி உள்ளது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020.   இதில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் வேலைவாய்ப்புகள் பெருகும், அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறினாலும் இது முதலாளிகளுக்கு சாதகமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும், பொதுமக்களின் பங்கேற்பை குறைப்பதாகவும் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் நடக்கும் உரையாடல்களில் கவனிக்கத்தக்கவராக […]

கருணாநிதியின் மரணத்தின் போது வட இந்திய ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன?

ஓகஸ்ட் 7, 2020

0

மு.நியாஸ் அகமது இந்தியாவில் ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் சென்னையில் மரணமடைந்தார். அவரின் மரணத்தை பெரும்பாலான இந்திய ஆங்கில நாளிதழ்கள் முதல் பக்கத்தில் முதன்மை செய்தியாக வெளியிட்டன. குறிப்பாக வட இந்தியாவில் கணிசமான […]

தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா?

ஓகஸ்ட் 1, 2020

0

கே. சஞ்சயன் வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும்  வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1977இற்குப் பின்னர், வடக்கில் பெரும்பாலான தருணங்களில், ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடக்கவில்லை. ஒன்றில் இறுக்கமான இராணுவ சூழலுக்குள் தேர்தல் நடந்திருக்கிறது. அல்லது, அரச அதிகாரபலம் கோலோச்சிய நிலையில் நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை, இராணுவச் […]

நரேந்திர மோதி அரசாங்கத்திடம் இந்திய ஊடகங்கள் மண்டியிட்டனவா?

ஓகஸ்ட் 1, 2020

0

பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் கவுன்சிலில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, “கோவிட்-19 நோய்ப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டோம்” என்று கூறினார். ஜுபைர் அஹ்மத் இந்தியாவில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் இது பரவலாக செய்தியாக்கப்பட்டது. ஆனால் ஆச்சர்யமூட்டும் வகையில், இதற்கு ஆட்சேபம் எதுவும் எழவில்லை. அவர் உரையாற்றிய நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனை […]

பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்

ஜூலை 26, 2020

0

தொலைநோக்கியின் வழியாக நிலாவிலுள்ள அடுக்குகளைப் பார்க்கும்போது கிராமத்துப் பெண்கள் பூரித்துப் போனார்கள்; கணிதவியல் பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு அது மிகப் புதிதாக இருந்தது. தொலைநோக்கியில் நிலாவைப் பார்த்துவிட்டு “அம்மா, இங்க நிலா காட்டுறாங்க” என்று பரவசத்துடன் ஓடிப் போய் அம்மாவை, அக்காவை அழைத்து வந்த அந்தச் சிறுவனின் சித்திரம் அவர் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. இயற்கை தனது பேரழகால் ஒவ்வொரு கணமும் மக்களைப் பிரமிக்க வைக்கிறது. ”ஒவ்வொரு கணமும் உங்களது பெருவிரல் வழியாக 40 பில்லியன் (ஒரு பில்லியன் […]

கொரோனா வைரஸ்: பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் தெரியுமா?

ஜூலை 24, 2020

0

20 ஜூன் 2020 சினிமா ரசிகர்கள், அவர்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியை திரை அரங்கத்தில் சென்று பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சியடைவார்கள். தமிழில் சில தினங்களுக்கு முன் ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடி தளத்தில் வெளியானது அதனையடுத்து தற்போது பென்குயின் படம் வெளியாகியுள்ளது. மேலும் பல மாதங்களுக்கு தியேட்டர்களை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியானது. ஹிந்தியிலும் கூட அமிதாப் பச்சம் நடித்த குலாபு […]