Browsing All posts tagged under »ஊடகங்கள்«

அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

பிப்ரவரி 1, 2021

0

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.) “இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்” என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. “மூக்நாயக்” (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் […]

ஊடக பாசிசமும் மாற்று ஊடகத்திற்கான தேவையும்

ஜனவரி 8, 2021

0

நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து பத்திரிகையாளர் ஹாசிப் முகமது வற்புறுத்தல் காரணமாக பதவி விலக வைக்கப் பட்டதாகவும், குணசேகரன் அவர்களின் அதிகாரம் குறைக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஊடகத்துறை என்பது நாட்டின் நான்காவது தூண் என்றும், அது நாட்டில் நடக்கும் அநீதிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துறை என்றும், அந்தத் துறையில் பணியாற்றினால் ஊழல்வாதிகளையும், சாதிவெறியர்களையும், மதவெறியர்களையும் அம்பலப்படுத்தி, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படும் ஜனநாயக விரோத சக்திகளை தண்டித்து […]

அண்ணலின் பார்வையில் – செய்தித்தாள்கள் யாருக்கானது?

ஜனவரி 8, 2021

0

‘செய்தித்தாள்கள் வெளியிடும் செய்திகள் அறம் சார்ந்து உண்மையை வெளியிடுபவையாக குரலற்ற எளிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். வணிக ரீதியாக இருக்க கூடாது”. – அண்ணல் அம்பேத்கர். பத்திரிக்கைச்செய்தி: “தமிழ்நாடு முழுவதும் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிலுவையிலுள்ளது எனவும், அதனை நிலுவையின்றி முடிவு செய்யாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாண்பமை நீதிமன்றம் உத்தரவு”. மேற்கண்ட பத்திரிக்கை செய்தியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க தாமதமின்றி […]

யாருக்கான ஊடகங்கள்?

திசெம்பர் 22, 2020

0

ஒட்டுமொத்த இந்திய காட்சி ஊடகங்களும் ஸ்ரீதேவி துக்கத்தில் இருந்து இன்று (பிப்ரவரி 28, 2018) முதல் மெதுவாக விடுபட்டு விடும் என நம்பலாம். பத்திரிகைகளை விடவும் இந்தக் காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் ஏன் எப்போதும் வர்க்க நலன் சார்ந்தே இருக்கின்றன என்பது தான் எனக்குப் புரியவில்லை. http://puthiyaagarathi.com/ அரசாங்கங்களை இயக்குவது ஊடகமா? அல்லது ஊடகத்திற்குத் தீனி போடுவது அரசாங்கமா? என்பது புரிந்து விடக்கூடாத அளவில் இரண்டும் திரைமறைவில் கைகோத்து செயல்படுகின்றன. ஒகி புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் […]

விவசாயிகள் போராட்டம்: ஊடகங்களின் மீதான நம்பிக்கை குறைவது ஏன்?

திசெம்பர் 7, 2020

0

சிங்கு எல்லையில் ஒரு விவசாயி போராட்டக்காரருடன் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நபர் ஒரு சுவரொட்டியுடன் அங்கு வந்தார். அந்த சுவரொட்டியில் “ஊடகங்களே தயவுசெய்து உண்மையை பேசுங்கள்!”என்று எழுதப்பட்டிருந்தது. விவசாயிகள் போராட்டத்தின்போது, எம்.எஸ்.பி அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை என்று மிக அதிகமாக அடிபடும் சொற்றொடருக்குப்பிறகு அதிகமாக காதில் கேட்டும் மற்றொரு சொல் ‘கோதி மீடியா’ அதாவது ‘மடியில் அமர்ந்துள்ள ஊடகங்கள். (ஒருவருக்காக தாளம் போடுபவை என்று இதை நாம் பொருள் கொள்ளலாம்). அரசிற்கு சாதகமாகவும், […]