Browsing All Posts filed under »கேலிச்சித்திரம்«

டெல்லி விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளர்களை நசுக்குகிறதா அரசு? – குவியும் வழக்குகள்

பிப்ரவரி 1, 2021

0

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக, செய்தி வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது, அரசு தொடர்ந்து வழக்கு தொடர்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதற்கு மிக சமீபத்திய உதாரணம், மன்தீப் பூனியா என்கிற சுயாதீனப் பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதுதான். மன்தீப் கடந்த சனிக்கிழமை இரவு சிங்கு எல்லையில், காவலர்களின் பணியைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். […]

யாருக்கு எழுதுகிறோம்?

ஜனவரி 8, 2021

0

சமீபத்தில் சமீபத்திய அடிப்படைகள் மீதே சந்தேகம் வரத் தொடங்கி விட்டது. சந்தேகப் படுவதில் இருக்கும் சுகம் கண்டு பழகும் மனதை கொய்யா மரத்தில் தூக்கிலிடத் துடிக்கிறேன். ஆனால் அவை தாண்டிய சிந்தையில்… கொய்யா மரங்கள் எங்குமே இருக்க போவது இல்லை. எல்லாமே கொய்த மரங்கள் தான். பேரண்டத்தில்… பெருவெளிச்சம் காதலியின் மூக்குத்தி என்பது சுவை தான். எனினும்… எறும்பு பசிக்கு கூட ஆகாத உவமை. சாலையில்.. முன்னெப்போதும் இல்லாத அளவு எதிரே வரும் ஆணோ பெண்ணோ முகம் […]

அண்ணலின் பார்வையில் – செய்தித்தாள்கள் யாருக்கானது?

ஜனவரி 8, 2021

0

‘செய்தித்தாள்கள் வெளியிடும் செய்திகள் அறம் சார்ந்து உண்மையை வெளியிடுபவையாக குரலற்ற எளிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். வணிக ரீதியாக இருக்க கூடாது”. – அண்ணல் அம்பேத்கர். பத்திரிக்கைச்செய்தி: “தமிழ்நாடு முழுவதும் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிலுவையிலுள்ளது எனவும், அதனை நிலுவையின்றி முடிவு செய்யாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாண்பமை நீதிமன்றம் உத்தரவு”. மேற்கண்ட பத்திரிக்கை செய்தியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க தாமதமின்றி […]

சிறுபத்திரிக்கைகள் குறித்து

ஜனவரி 8, 2021

0

சிறுபத்திரிக்கைகள் குறித்து பேசுவதும்.. கலந்துரையாடுவதும்… காலத்தின் தேவை என்றே கருதுகிறேன். ஏனென்றால் சமூகத்தின் ஓர் அங்கமாகவே தான் சிறு பத்திரிக்கைகள் இருக்கின்றன. மனிதன் தன்னை தொடர்ந்து பண்படுத்திக் கொண்டே இருக்க கலை இலக்கியம் மிக அவசியம். அந்த கலை இலக்கியத்தின் முக்கியமான வடிவம் தான் சிறு பத்திரிக்கைகள் என்று நம்புகிறேன். முதன் முதலில் ஆனந்த விகடனில் தான் எனது கவிதை வெளி வந்தது. எழுதி எழுதி நிறைந்து கிடக்கும் ஒருவனுக்கு பத்திரிக்கை வெளி மிக தேவையான ஒரு […]

சிரித்திரன் சுந்தர்

திசெம்பர் 31, 2020

0

‘செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் மாமனிதர் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் 15000க்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1963ஆம் அண்டில் ஆரம்பிக்கப்பட்ட “சிரித்திரன்” சஞ்சிகை திரு சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து […]

யாருக்கான ஊடகங்கள்?

திசெம்பர் 22, 2020

0

ஒட்டுமொத்த இந்திய காட்சி ஊடகங்களும் ஸ்ரீதேவி துக்கத்தில் இருந்து இன்று (பிப்ரவரி 28, 2018) முதல் மெதுவாக விடுபட்டு விடும் என நம்பலாம். பத்திரிகைகளை விடவும் இந்தக் காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் ஏன் எப்போதும் வர்க்க நலன் சார்ந்தே இருக்கின்றன என்பது தான் எனக்குப் புரியவில்லை. http://puthiyaagarathi.com/ அரசாங்கங்களை இயக்குவது ஊடகமா? அல்லது ஊடகத்திற்குத் தீனி போடுவது அரசாங்கமா? என்பது புரிந்து விடக்கூடாத அளவில் இரண்டும் திரைமறைவில் கைகோத்து செயல்படுகின்றன. ஒகி புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் […]

அச்சுக்கூடம்: பன்னாட்டு தொடர்பாடல் ஆய்விதழ் :

திசெம்பர் 22, 2020

0

 தமிழகம் குழுமத்தின் சார்பில், ஆய்வகம், பழமொழி, அச்சுக்கூடம் ஆகிய பன்னாட்டு ஆய்விதழ்களை வெளியிட்டு வருகின்றது. பன்னாட்டு ஆய்வுகளை தமிழில் வெளியிட உறுதுணையாக இருப்பதை ஆய்வகம், பழமொழி, அச்சுக்கூடம் ஆகிய பன்னாட்டு ஆய்விதழ்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அச்சுக்கூடம்: பன்னாட்டு தொடர்பாடல் ஆய்விதழ்      அச்சுக்கூடம், தொடர்பாடல் ஆய்வுகளை தமிழில் முன்னெடுக்கும் பன்னாட்டு ஆய்விதழ் ஆகும். தொடர்பாடல் கலை மற்றும் ஊடக அறிவியலுக்கான இப்பன்னாட்டு ஆய்விதழ், இதழியல் மற்றும் தொடர்பாடல் துறை சார்ந்த ஆய்வுகளை உலகத் தமிழர்களிடையேயும், அறிவுலகத்தின் பார்வைக்கும் கொண்டு […]

‘கொவிட்19’ ஆல் முதல் மரணம்:சமூக ஊடகங்களில் பொய்யான பெயர் பரவியது ஏன்?!

திசெம்பர் 22, 2020

0

உண்மையில் கொரோனாவால் இறந்தது ஒரு இஸ்லாமியரும் அல்ல சாய்ந்த மருது என்ற இடத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஒருவர் செய்த தவறு எங்களுக்குகிடையில் உரையாடல் நிகழும்போது அது கொரோனாவைவிட வேகமாக பரவிவிட்டிருந்தது. கடைசியில் நான் என் நண்பனுக்கு அனுப்பிய ஸ்க்ரீன்ஷொட்தான்…. 04.04.2020  |  அம்பாறை மாவட்டம்முக்கியமானது உலகெங்கும் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான யுத்தத்தில் மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாடும் இன்று நோய் தொற்றுக்குள்ளானோர் இறந்தோர் தொகை உயிர்பிழைத்தோர் தொகை என எண்ணிக்கையிட்டுக்கொண்டிருக்கின்றன.அந்த வகையில் கொரோனாவினால் முதல் மரணம் முகம்மது ருபினாஸ் எனும் […]

குடிசைக் கைத்தொழில் ஊடகவியலாளர்கள்?

திசெம்பர் 20, 2020

0

தங்களைத் தாங்களே ஊடகவியலாளர்கள் என அடையளப்படுத்திக்கொண்டு, சமூக வலைத்தளங்களில் நேரலை செய்பவர்கள் மற்றும் எழுதிவருபவர்கள் தொடர்பில் நீண்டகாலமாகவே அச்ச உணர்வு இருந்துவந்தது. (சிலர் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி வருவதையும் மறுக்கமுடியாது.) இந்த அச்ச உணர்வின் பிரதிபலிப்பை நேற்று எல்லோரும் தெளிவாக கண்டுகொண்டோம். ஆர்வக்கோளாறு பிடித்தவர்களும், முறையாக ஊடகக் கல்வியை கற்காதவர்களும், ஊடக ஒழுக்க நெறிக்கோவை தொடர்பில் கிஞ்சித்தும் அறிவில்லாதவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடு இன்று சமூகத்தை நாற்சந்தியில் நிறுத்தியிருக்கிறது.இலங்கையில் 185 கொரோனா நோயாளர்கள் தொடர்பில் பொதுவாக எந்த […]

விவசாயிகள் போராட்டம்: ஊடகங்களின் மீதான நம்பிக்கை குறைவது ஏன்?

திசெம்பர் 7, 2020

0

சிங்கு எல்லையில் ஒரு விவசாயி போராட்டக்காரருடன் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நபர் ஒரு சுவரொட்டியுடன் அங்கு வந்தார். அந்த சுவரொட்டியில் “ஊடகங்களே தயவுசெய்து உண்மையை பேசுங்கள்!”என்று எழுதப்பட்டிருந்தது. விவசாயிகள் போராட்டத்தின்போது, எம்.எஸ்.பி அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை என்று மிக அதிகமாக அடிபடும் சொற்றொடருக்குப்பிறகு அதிகமாக காதில் கேட்டும் மற்றொரு சொல் ‘கோதி மீடியா’ அதாவது ‘மடியில் அமர்ந்துள்ள ஊடகங்கள். (ஒருவருக்காக தாளம் போடுபவை என்று இதை நாம் பொருள் கொள்ளலாம்). அரசிற்கு சாதகமாகவும், […]