செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைக்கான வரைபுச் சட்டம்

Posted on ஜூன் 30, 2017

0


காலி மாவட்ட கலந்துரையாடல் தொகுப்பு

1.ஊடகங்கள் தொடர்பில் பெரும்பாலான கேட்போர்கள் திருப்தியற்றவர்களாகவே உள்ளனர். அரசியலும் ஊடகங்களும் இந்நாட்டின் பின்னடைவுக்கு காரணங்களாகும். தேர்தல் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் அவை இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதை காண்பதற்கு இல்லை. இந்நிர்வனத்துக்கும் அவ்வாறான நிலையோ ஏற்படும் என்ற சந்தேகமும் உள்ளது. பேரவையினை நியமிப்பதும் ஜனாதிபதி என்பதால் அதன் சுயாதீனத்தன்மையிலும் பிரச்சினை உள்ளது.

2. ஊடகங்கள் தமது பிரபல்யம் மற்றும் மக்களை கவரல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே செய்திகளை வெளியிடுகின்றன. அண்மையில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையையும் ஏற்படுத்தியது ஊடகங்களே. அவ்வமைப்பு கொண்டுள்ள கொள்கை சரியானதே. ஊடகங்கள் அதனை அறிக்கையிட்ட விதத்தினால் பிற சமூகங்களுக்கு இடையில் பிரச்சினைகள் உருப்பெற்றன. ஊடகங்களுக்கு நாட்டை அழிப்பதற்கோ அல்லது அழிப்பதற்கான எவ்வித நிகழ்ச்சி நிரலும் இல்லை. இந்நிர்வனத்தை அமைக்கும் போது நாட்டுக்கு, இனத்துக்கு முக்கியத்துவம் பெறும் அடிப்படையில் அமைக்க வேண்டும். இன்றேல், பொலிஸ் அல்லது தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்.

3. நிர்வனத்தின் பிரஜைகள் அங்கத்துவத்துக்கு எமக்கும் விண்ணப்பிக்க முடியுமென்றால் சிறந்தது.

4. முகப்புத்தகத்தில் பகிரப்படுகின்ற சில பொய்யான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்ட சில பதிவுகளே காரணமாகும்.

5.பிரதேச ஊடகவியலாளர்களின் சில செயற்பாடுகளினால், ஊடகம் தொடர்பில் பாரதூரமான நிலையொன்று ஏற்படுகின்றது. அந்நிலையை மாற்றுவதற்கு முடியுமான எல்லா நடவடிக்கையாக ஊடகவியலாளர்கள் ஓர் நிர்வனத்துக்கு மாத்திரம் பணிபுரிவதற்கு பயன்படுத்த வேண்டும். சாதாரண நிலை என்னவெனின், இன்று ஒரு ஊடகவியலாளர் 04க்கும் அதிகமான நிர்வனங்களில் பணிபுரிகின்றனர்.

6.(08 ) உறுப்புரையின் அடிப்படையில், பிரபுக்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு வற்புறுத்தாமல் இருக்க முடியும். சட்டத்தின் சலுகையின்றி தமது விருப்பம் படி சுதந்திரத்தையும் மீறி பைத்தியம் போன்று செயற்படுவதற்கான சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கு கிடைப்பதே அதன் பிரதிபலனாகும்.

7.( 39) உறுப்புரையின் அடிப்படையில், பேரவையின் முன் வருகின்ற உரிமை மீறப்பட்ட நபரின் அடிப்படை மனித உரிமையான நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமைக்கும் இதன் மூலம் தடை ஏற்படுகின்றது. பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா என்பது குறித்து விசாரிப்பதற்கு பேரவைக்கு எவ்விதத்திலும் உரிமை இல்லை. நட்டஈடு வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர விரும்பினால், விண்ணப்பிக்கின்ற நட்டஈட்டில் 10% உம் செலுத்த வேண்டி வருவது மற்றுமொரு தடையாகும்.

8. யுனெஸ்கோ இல்லை அவ்வாறான எந்த நிர்வனத்தில் பணிபுரிந்தாலும், ஜயவீர அவர்களின் மூலம் தயாரிக்கப்பட்ட இச்சட்டமானது பொய் செய்திகளை உருவாக்கும், தனியார் சுதந்திரத்துக்கு தடையாக அமைகின்ற, அறிக்கையிடல் தொடர்பில் முறைபாடு ஒன்றை மேற்கொண்டால் சிறை பிடிக்கப்படக் கூடிய மிகவும் பயங்கரமான சட்டமாக இதனை சுட்டிக் காட்டலாம்.

9. பத்திரிகைகள் அல்லது தொலைக்காட்சிகளுக்கு மேலாக இணையத்தளங்களின் ஊடாக ஏற்படுகின்ற பிழைகளுக்காக காப்பீடு தொடர்பில் இச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

10. சட்டமூலம் தொடர்பான ஆய்விற்கு இதற்கும் அதிகமான காலம் வழங்கினால் மிகவும் நல்லது. ஊடகங்களுக்கு இடையில் காணப்படுகின்ற போட்டித்தன்மையினால் கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை மையமாகக் வைத்து தாம் பிரபல்யம் அடைவதையே செய்தனர். வெள்ளப்பெருக்கு நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிப்பு அல்லது இரவில் வீடுகளுக்கு பாய்ந்து நிதியுதவியளித்தல் ஆகிய சேவைகளையா ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும்?

11.அரசாங்கம் மற்றும் பிற ஊடகங்கள் இன்று இந்தியச் சாயலினை மற்றும் கொரியச் சாயலினை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றனர். நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய இவ்வாறான ஊடகங்களினால் நாட்டின் எதிர்காலம் எந்த நிலைக்கு சென்று நிற்கும் என்பது கேள்விக்குறி?

12.இன்று சில ஊடகங்கள் தமது தொழிலினை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். இச்சட்டத்தின் மூலம் விளம்பரங்களுக்கான நேரத்தை கட்டுப்படுத்த முடியுமா? ஊடகங்களுக்கு புள்ளிகளை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உண்மையான வேலைத்திட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா?

13. பத்திரிகைக்காக எம்மால் கடிதங்கள் அனுப்பும் போது சில நிர்வனங்கள் கடிதத்தின் விலாசத்தை கூட திருத்தத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

14. சில விளம்பரங்களினால் பிரபல்யப்படுத்தப்படும் பொருட்கள்ஃ சேவைகள் தொடர்பில் சரியான மேற்பார்வையொன்று இச்சட்டத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் இவ்வாறான செல்லாக் காசுகளான விளம்பரங்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

15. இச்சட்டமானது காலத்துக்கு பொருத்தமானது. கையூட்டு பெற்ற ஊடகவியலாளர்களின் பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டு பதவிகள் இழக்கப்பட்ட நபர்கள் எனும் ரீதியில் கூறக்கூடியது என்னவென்றால் தற்போது உள்ள ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

16. ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவது, அரசியல்வாதிகளுக்கு உள்ள தகைமைகளைப் போன்று. எனினும், ஊடகவியலாளர்களுக்கான அதி குறைந்த தகுதி என்ன? ஊடகவியலாளர்கள் என்பவர்கள் யார் என்பது தொடர்பான விரைவிலக்கணம் மற்றும் அவர்களின் பணிகள் தொடர்பில் இச்சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். சட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கு சட்டத்தின் 38 ஆவது உறுப்புரையினை திருத்தம் செய்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை உறுதி செய்தல் வேண்டும். சட்டத்தை திருத்தம் செய்யும் போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பிலும் சற்று அறிந்திருத்தல் நன்று.

17. நாட்டினை கட்டியெழுப்பும் போது அபிவிருத்தி ஊடகவியல் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தமானது.

18. இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களின் போக்கு குறித்து அதிக கேள்விகள் உள்ளன. அரசியல் விவாத நிகழ்ச்சிகளின் போது எதிர் கருத்துக்களை கொண்ட நபர்களின் கருத்துக்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. முன்பு ஒரு காலம் கட்டை பாவாடை அணிந்த பெண்கள் செய்தி வாசிப்பில் ஈடுபட்டமை ஞாபகத்துக்கு வருகின்றது. அச்சந்தர்ப்பத்தில் பார்வையாளர்கள் பார்த்தது செய்தியையா? அப்பெண்ணின் காலையா?

19. இலங்கை ஊடகவியலாளர்கள் சிலர் இன்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களை தவிர ஏனையோரின் வாழ்க்கை சோகமயமானதே. அரசியல்வாதிகளின் பணத்தை பெற்று எவ்வாறாவது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதையே அவர்கள் மேற்கொள்கின்றனர்.

20. இலங்கை எப்போதும் இடம்பெறுவது அரசியல்வாதிகளின் நோக்கங்களே நிறைவேறுகின்றன. இச்சட்டமும் பேரவையும் சுயாதீனமான போதும் அது எந்தளவுக்கு யாதார்த்தமாகும் என்பதில் சந்தேகமுண்டு. எனினும், முறையான சமூகத்தில் அறிவார்ந்தவர்களின் பங்களிப்பு அளப்பெரியது. அரசாங்கம் தொடர்பான நம்பிக்கை இன்று அருகி வருகின்றது.

21. ராவய பத்திரிகையில் விசமற்ற வயல் நிலத்துக்கு எதிரான விடயங்கள் தொடர்பில் பாரியளவிலான பிரச்சாரம் வழங்கப்படுகின்றது. அவர்கள் ஏதேனுமொரு நிர்வனத்திற்கு தமது பிரபல்யப்படுத்தும் நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனர்.

22. இச்சட்ட மூலத்தை வரையும் போது, பாரம்பரிய அடிப்படை விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவில்லை. சட்டமூலத்தை இதைவிட அபிவிருத்தி தன்மை பொருந்தியதாக கொண்டு வர வேண்டுமென்றால், உள்ளடக்கம் தொடர்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படல் வேண்டும். உறுப்புடைகளில் மொழி பிரச்சினை, குறைப்பாடுகள் உள்ளன. அது தொடர்பில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

23. குறைப்பாடுகள் எந்தளவு இருப்பினும், 69 வருட சுதந்திர வரலாற்றை கொண்டுள்ள நாட்டில், எப்போதும், கொள்கையளவிலான அடிப்படையில் காணப்படாமையினால் இதனை மாத்திரம் சரியாக நிறைவேற்ற முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்களின் நிலைமையும் கேள்விக்குறியே. அரசியல் யாப்பு குறித்து மக்களின் கருத்துக்கள் பெறப்பட்ட போதும், அவை இன்னும் கவனத்திற் கொண்டதாக தெரியவில்லை. அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தினால் நல்லது. அறிவார்ந்தவர்களின் தலையிடு இங்கு மிக முக்கியத்துவமாகின்றது.

24. பத்திரிகை பேரவையினை இரத்துச் செய்ததை தொடர்ந்து, பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு பொருப்பாய் இருப்பவர்கள் யார்?

25.ஊடகங்களின் செயற்பாட்டினால், பாதிப்படைகின்ற சிறுவர்கள், மகளீர் தொடர்பில கவனம் செலுத்தல் வேண்டும்.

26. புதுப்புது கருப்பொருட்கள் தொடர்பில் மக்களை குழப்புகின்ற ஜனயுகய, மவ்பிம போன்ற பத்திரிகை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

27. இலங்கை ஊடகங்களில் கல்வி சார் நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நேரங்கள் தொடர்பில் சட்டத்தில் கதைக்க வேண்டும்.

28. இலங்கை ஊடகங்களின் ஒலிபரப்பாகும் ‘சுடச்சுட செய்திகள்’ கள்வர்களுக்கு வழிகாட்டல்களாக அமைகின்றன.

29. சட்டத்தில் இணையத்தள நிர்ணயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்படாமை பாரியதொரு குறைப்பாடாகும். அவ்வாறு காணப்படாவிடின் அது இனவாத செயற்பாடுகளுக்கு மேலும் உரம் ஊட்டுவதாக அமையும்.

30. அனைத்து பிரதேச ஊடகவியலாளர்களதும் ஊடக பயன்பாடு குறித்து பிரச்சினை இல்லை. ஊடகவியலாளர்கள் எந்நதளவு உண்மையான செய்திகளை முன்வைத்தாலும், நிர்வனங்கள் இலாபமீட்டும் செய்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.

31.ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதும், அவர்களுக்கான சரியான பயிற்சிகள், வழிகாட்டல்கள் வழங்கப்படவில்லை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

32. சட்டத்தின் மூலம் ஊடக சமூகத்தை கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றோம். சுய நிர்ணயம் மிக முக்கியமானது. ஊடக நிர்வகிப்பு, விமர்சனத்துக்கு அல்லாமல் அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதற்கு பயன்படல் வேண்டும். எதிர்காலத்தில் எத்த, தினமின பத்திரிகைகளை சம்பிரதாயத்துக்கு அப்பால் கொண்டு செல்வதற்கு ஊடகவியலாளர்கள் முயற்சிக்க வேண்டும். அவர்களின் கல்வித்தகைமை குறித்து கவனத்திற் கொள்வது சிறந்த விடயமாகும்.

33. ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கும் அரச அதிகாரிகளை பாதுகாக்கம் அம்சங்கள் சட்டத்தின் 08 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மிகவும் முக்கியத்துவம் வாயந்தது.

34. இந்நிர்வனங்களில் நியமனங்கள் வழங்கும் முறைகள், நிதி மற்றும் நன்கொடைகள் கணக்காய்வு தொடர்பிலான உறுப்புரைகள் மேலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். 43 ஆவது உறுப்புரையின் ஒரு மாத அளவு 90 நாட்களாக திருத்தம் செய்யப்பட வேண்டும்.

35. பரிசீலனைகளின் போது தொலைப்பேசி உரையாடல்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் எனின் அது தொடர்பில் தொலைப்பேசி சேவை நிர்வனங்களுக்கு ஆரம்பத்தில் அறிவிப்பது எவ்வாறு என்பது குறித்து சட்டத்தில் விளக்கமளிக்கப்படல் வேண்டும்.

36. பேரவைக்கு மிகவும் அவசரமாக முறைப்பாடு செய்வதற்கான வழிவகைகள் காணப்படல் வேண்டும். முறைப்பாட்டாளர்களுக்காக முன்நிற்பதற்காக பிரதிநிதி ஒருவர், சட்ட ஆலோசகர் இருப்பது முக்கியமாகின்றது.

37. முறைப்பாட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு குறித்த செய்திக்காக நிர்வனத்தினால் கொடுக்கப்பட்ட கட்டணத்தை மீள அறிவடுவதற்கான அவகாசம் இருக்க வேண்டும்.

38. கல்வித் தகைமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும். எனினும், விக்ரமசிங்க போன்ற சிரேஷ;ட ஊடகவியலாளர்களுக்கு அவ்வாறான தகைமைகள் இல்லாத போதும் அவர்களின் பங்களிப்பினை அளவிட முடியாது.

39. இச்சட்டம் தொடர்பில் தெளிவு படுத்துவதற்கு இன்னும் பல பொது மக்கள் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களை கவரும் செய்திகளாக இவ்வாறான சட்டங்களுக்கு பிரச்சாரம் வழங்கப்படாமையினால் இணைய வாயிலான இவற்றினை அறிவுறுத்த வேண்டும்.

40. அனுமதிப்பத்திரம் அற்ற ஒரு சில கேபல் தொலைக்காட்சிகள் இச்சட்டத்தின் மூலம் நிர்ணயப்படுத்தப்படுமா?

41. இவ்வாறான ஆணைக்குழுக்கள் விருத்தியடைந்த சமூகங்களின் அங்கமாகும். நிறைவேற்று ஜனாதிபதிக்கு கூட மாற்ற முடியாமையினால் சட்டத்துக்குள் உள்வாங்கப்படுகின்ற ஒழுக்க நெறிகள் பலமாக காணப்படல் வேண்டும். குழுவுக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவது சிறந்தது.

42. தொலைக்காட்சிகள் இந்திய முறைக்கு மாறுவதால், பெண்களுக்கு சிறுவர்களுக்கு அதன் மூலம் ஏற்படும் விபரீதம் தொடர்பில் சட்டம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

43. செய்தி பிரசுரிக்கும் போது கவர்ச்சிகரமான தலைப்புகளை போடுவதை விட்டு விட்டு நடுநிலையான, உண்மையான செய்திகளை அறிக்கையிட வேண்டும். காலியில் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான செய்தியொன்றை பிழையாக அறிக்கையிட்டதால் ஏற்பட்ட மனக்கசப்புகள், அச்சுறுத்தல்களை குறித்த நிர்வனம் கவனத்திற் கொள்ளவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்டது செய்தியை வழங்கிய நபரே.

 

கண்டி மாவட்ட கலந்துரையாடல் தொகுப்பு

ஊடகங்கள் மகளீர் மற்றும் சிறார்களின் உள்ளங்களை மாற்றமடையச் செய்கின்றனர் – கண்டிய பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

1. பண்டைய காலத்திலிருந்து இந்நாட்டு மக்களை வளப்படுத்தியவர்கள் எழுத்தாளர்களே. அதற்கு நிகராக இன்றைய ஊடகங்களின் செயற்பாடுகள் பிரச்சினைக்குரியவையாகும். தொலைக்காட்சிஃ வானொலி அலைவரிசைகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து தமக்கிடையில் சண்டையிட்டுக் கொள்கின்றனர். மாறாக அவர்களுக்கு இடையில் எவ்வித சம்பாசனையையும் கண்டு கொள்வதற்கு இல்லை. அமைச்சர்களும் நாடுகளுக்கு இடையில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றனரே ஒழிய அந்நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் ஒன்றும் இல்லை. ஒன்று சேர்ந்து செயற்படும் அவர்கள் மக்கள் மத்தியில் வரும் போது பிரிந்து செயற்படுவதை போன்று பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றனர். பொய்யான பிரச்சாரங்களினால் நாடுகள் துண்டு துண்டாக்கப்படுகின்றன. மக்களுக்கு தீங்கு இளைக்காமல் ஊடகங்கள் அவர்களின் வளர்ச்சிக்காக ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும். அதற்கு இந்த சட்டம் துணைபுரிய வேண்டும்.

2. . என்னுடைய 60 வருட ஊடக வாழ்க்கையில் அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இச்சட்டமானது பூரணத்துவமற்றது. தொலைக்காட்சி – வானொலிக்காக தர நிர்ணயங்கள் வௌ;வேறாக இருக்க வேண்டும். அதற்காக வேறு வேறாக கருத்துக்களை முன்வைக்க நான் விரும்புகின்றேன். ஒளி, ஒலி அலைகள் பொதுச் சொத்து, மற்றும் உரிமை என்பதை இங்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

3. பிற ஊடகங்களை நோக்குமிடத்து ராவய பத்திரிகையில் பாராட்டத்தக்க ஊடக பயன்பாடு காணப்படுவதை சொல்லியே ஆக வேண்டும். இந்நாட்டு ஊடகவியலாளர்களால் இலங்கை வாழ் மக்கள் பல வருடங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டனர். எனினும், ஊடகங்கள் இன்னும் இனவாதத்தை தூண்டிவிடுகின்றன. சிங்களம் – தமிழ் பிளவு இன்று சிங்களம் – முஸ்லிம் பிளவாக மாறியுள்ளது.

4. தமக்கு உரிமையொன்று இருப்பின், முதலில் கவுன்சிலின் அனுமதியினை பெற்று, பின்னர் நீதிச்சலுகையினை பெறுவது சாதாரணமாகும். எனினும், 10% வைப்பு என்பது சட்டத்தில் காணப்படுகின்ற வரையறுக்கப்பட்ட நிலைமையாகும். மேலும், இச்சட்டமூலத்தை தயாரித்த குழு தொடர்பில் கூறப்பட்டாலும், ஜயவீர அவர்களின் பெயரைத் தவிர ஏனையோரின் பெயர்கள் குறிப்பிடப்படாதது பெரும் குறையாகும்.

5. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் நியமனங்கள் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் பிரச்சினைக்குரிய இடங்கள் தெளிபடுத்தப்படுதல் வேண்டும். தற்போதைய இளம் பராயத்தினர் ஊடகத்தினால் வழிதவறி செல்கின்றனர். அது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6. ஊடகங்கள் இன்று ஒரு வர்த்தக பண்டமாகவே காணப்படுகின்றன. எனினும் ஊடகங்களினால் முழு சமூகமும் மாயையாக மாறிவிட்டது. இந்நிலை மாறவேண்டும். அறிக்கையிடலின் போது பல் முலாதாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறின்றேல், அதனை கேள்விக்குள்ளாக்கி நீதிமன்றத்துக்கு செல்லக் கூடிய வாய்ப்பும் உண்டு. பிரித்தானியா போன்ற நாடென்றால், அனைத்து ஊடகவியலாளர்களின் சட்டை பைகளிலும் ஊடக ஒழுக்க நெறிக்கோவை புத்தகம் காணப்படுகின்றது.

7. இச்சட்ட மூலத்தின் 05ம் பிரிவில் ‘ஆய்வறிக்கையிடல்’ உள்ளடக்கப்படாமை குறைப்பாடாகும். 09ஆவது பிரிவில் திருத்தம் செய்தல் தொடர்பில் சட்ட பிரயோகம் பொருத்தமானதா என்பது குறித்து தெளிவுபடுத்தல் அவசியமாகும். பிரச்சினை ஒன்றின் போது பேரவைக்கு அல்லாமல் நேரடியாக நீதிமன்றத்துக்க செல்வதற்கான வாயப்புக்களை செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று இச்சட்டமானது ஊடக நிர்வனங்களை பாதுகாப்பதற்கு கொண்டு சட்டமே தவிர கேட்போர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாக தெரியவில்லை. இன்று பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற இணையத்தளங்களை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகள் இச்சட்டத்தில் உள்வாங்கப்படாமையானது பெரிய குறைப்பாடாகும்.

8. இக்கலந்துரையாடல்களின் போது அனைவராலும் விமர்சிக்கப்படுகின்ற நபர்களாக தொழில் ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றனர். இலங்கையில் எங்கு இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு நீண்ட வரலாறு இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். எனினும், கலந்துரையாடப்பட்ட எந்தவொன்று செயல்வடிவு பெறவில்லை. பத்திரிகையாசிரியர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆகிய இரு சாராரும் தொழில் ஊடகவியலாளர்களை அடக்கியாள்பதையே செய்கின்றனர். கண்டியில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம், கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. வேறு நிர்வனங்களுக்கு பணிபுரிய சென்றால், இருக்கும் இடத்தை கூட கைப்பற்ற முனைகின்றனர். இங்கிருக்கும் அனைத்து பணியாளர்களினதும் உரிமைகள் பாதுகாப்பானதே. அவர்களது போராட்டங்களில் ஊடகவியலாளர்கள் பாரியளவு பங்களிப்பை செய்கின்றனர். எனினும் நடுத்தெருவில் விழுகின்ற ஊடகவியலாளர்களுக்காக வேண்டி முன்வருகின்ற ஆசிரியர் சங்கத்தின் ஓர் உறுப்பினரையும் காண்பதற்கில்லை.

9. பேரவையின் மூலம் ஊடக நிர்ணயம் கட்டாயமாக இடம்பெறவேண்டும். விளம்பரங்களின் போது பொருட்கள் அல்லது சேவைகளின் உண்மையான சுயரூபம் வெளிப்படுத்தப்பட வேண்டும். நிர்வனங்களுக்கு ஊடகவியலாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் போது நடைபெறும் நேர்முகத்தேர்வுகளில் பேரவையின் உறுப்பினர்களும் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் டிப்ளோமா ஒன்று உள்ளவர்களை மாத்திரமே சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து பல்கலைக்கழக ஊடக பாடவிதானங்களிலும் இச்சட்டம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். .

10. சட்டத்தின் 9,10ம் பிரிவுகளின் அடிப்படையில் இச்சட்டமானது ஊடக நிர்வனங்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட சட்டமாகவே நோக்க கூடியதாக உள்ளது. அது அசாதாரணமானது. 29ஆவது பிரிவின் அடிப்படையிலும் பேரவையின் உள்ளடக்கம் தொடர்பிலும் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது. 10% நிதி வைப்பும் கேட்போரின் உரிமைக்காக சேர்க்கப்பட்டதாக தெரியவில்லை.

11.நாட்டின் கொள்கை வரைவதில் பொதுமக்களையும் சேர்த்துக் கொள்வதற்கான ஒர் சந்தர்ப்பமாக இது அமைகின்றது என இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எனினும் பாராளுமன்றத்தில் இது அனுமதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது. நீதிமன்றத்தில் நியாயமான முன்மாதிரிகள் இருக்கும் போது, சரத் நந்த சில்வா சுயமாக பல தீர்ப்புக்களை எடுத்தமை எமக்கு நன்கு தெரியும். அதனால், நாம் இச்சட்டம் தொடர்பில் நம்பிக்கை கொள்வது எவ்வாறு? அதேபோன்று, அடுத்து வரும் இவ்வாறான கலந்துரையாடல்களில் இன்னும் அதிகமான பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வது பொருத்தமானதாகும்.

12. 36 பிரிவின் xi,XIV தொடர்பாக தொழில்நுட்ப பிரச்சினை ஒன்று உள்ளது. அத்தரப்படுத்தும் செயன்முறையினுள் பொதுமகன் ஒருவரின் அங்கத்துவமும் இன்றியமையாதது.

13.பாடசாலை மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக, சட்டத்தில் ஊடகக் காப்புறுதி குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இன்றேல், எதிர்கால தலைவர்கள் வருங்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதை தடுக்க முடியாது.

14. ஊடகங்களினால் பாதிக்கப்பட்ட பிரிவினர் பேரவைக்கு ஆரம்பத்திலேயே வருவது அசாதாரணமல்ல. ஒழுக்கக் கோவை பாதுகாக்கப்படுமேயோனால் நீதிமன்றத்தினால் பிரச்சினைகள் ஏற்படாது. நுகர்தல் அல்லது வெளியிடல் சுதந்திரம் அதனால் மீறப்படாது. எனினும் ஏனைய அனைத்து ஆணைக்குழுக்களை போன்று இப்பேரவையிலும் மக்களின் சுயாதீனத்துவம் இழக்கப்படும் எனும் எண்ணம் எழுவது சாதாரணமே. அது தொடர்பில் உறுதியான கருத்தினை கொண்டிருத்தல் அவசியமாகும்.

15.கடந்த 20 – 25 வருட காலப்பகுதியில் நான்காவது அரசாங்கத்தின் செயற்பாடு குறித்த திருப்தி கொள்ள முடியாது. இந்நாட்டு நீதிமன்றமும், ஊடகங்களும் ஒன்றாய்பிறந்த இரட்டையர்களைப் போன்று மோசமான முறையில் செயற்படுகின்றது. ஒரு ஆங்கிள பத்திரிகையில் இன்று தரமற்ற ஆங்கிள பக்கங்களினால் நிரப்பப்படுகின்றது. சிங்கள பத்திரிகைகளும் அவ்வாறே. அறிவூட்ட வேண்டியது பொதுமக்களுக்கன்று, பத்திரிகைகளை கொண்டு நடாத்துகின்ற ஈனியா பெரியவர்களுக்கே. அவர்களின் அடிப்படையில் பார்க்கும் போது பொது மக்களுக்கு அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் தெரிவதில்லை. உண்மையில் கூறுவதென்றால் அவ்விரு பத்திரிகைகளும் பொருட்கள் சுற்றுவதற்கே பொருத்தமாகும். ஊடகங்கள் சீனி பூசி பொது மக்களுக்கு விசத்தை கொடுப்பதில் வள்ளவர்களாவர்.

16.இலத்திரனியல் ஊடகங்களின் விளம்பரங்கள் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படுகின்ற சிறுவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு மெகா தொடர்கள் கூட எமது நாட்டு கலாச்சாரத்துக்கு பெரிய சவாலாகும்.

17. நாட்டின் ஒரு இடத்தில் ஒரு சம்பவத்தை மீண்டும் மீண்டும் ஒலி,ஒளிபரப்பு செய்வதனால் இனவாத கருத்துக்கள் வேகமாக பரவுகின்றன. முதல் பக்கங்களில் மோசமான செய்திகளே உள்ளடக்கப்படுகின்றன. நல்ல செய்திகளுக்கு இடம் கிடைப்பதில்லை. சில மாகாணங்களில் சிறுவர் துஷ;பிரயோகத்துடன் தொடர்பான குற்றவாளிகள் கூட அரசியல்வாதிகளுக்காக விடுவிப்பதற்கு ஊடகவியலாளர்கள் துணைநிற்கின்றனர்.

18. ஜனவரி 08ம் திகதி எடுக்கப்பட்ட அரசியல் தீர்ப்பின் அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஊடகங்களில் பொதுமக்கள் அஹிம்சை, அநாதரவான நபர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதனால், உடனடியாக ஊடகங்களில் இருந்து சமயம் மற்றும் அரசியல் நீக்கப்பட வேண்டும். பௌத்த தேரரின் பெயரை விற்று ஊடகங்களை கொண்டு நடாத்தும் பிழையான பிரச்சாரங்களால் மக்கள் தம்மிடமிருக்கும் அனைத்து விடயங்களையும் இழக்கின்றனர். கிராமிய பெண்களின் உள்ளங்கள் ஊடகங்களினால் மோசமடைகின்றன. இச்சட்டமானது பாராளுமன்றத்தில் சம்மதிக்கப்படுமோ என்ற சந்தேகம் உண்டு.

19.இங்கு கேட்போர்களுக்கு நஷ;டஈடு வழங்குவது என்பது சாத்தியமா? தற்காலத்தில் மாத்திரமல்லாமல் 60 – 70 களில் இருந்து பாராளுமன்றத்தின் நம்பிக்கை மிகவும் கீழ் மட்டத்தில் தான் இருக்கின்றது. பத்திரிகை பேரவை சட்டமானது ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தவிர ஏனைய அனைவராலும் ஒருமனதுடன் அங்கீகரிக்கப்பட்டது. லேக்ஹவுஸ் அரசாங்கத்தின் காவலரணாகும். 50மூ ஊடக சர்வாதிகாரம் இருக்கும் எனின் வேறு நாடுகளில் அது தகர்க்கப்படும். பொதுமக்களை மையமாகக் கொண்ட ஊடக கலாச்சாரம் தொடர்பில் இந்நாட்டில் கலந்துரையாடல்களுக்கு எடுப்பது பொருத்தமானது. இந்தியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் இச்சட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற நேர்முகமான அறிகுறிகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.

20. விரும்பும் சமயங்களை பின்பற்றும் உரிமை இருக்க வேண்டும். எனினும் பல்வேறு சமய அலைவரிசைகள் காணப்படும் போது இந்நாட்டின் ஏனைய அலைவரிசைகளும் சமய பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதுமாத்திரமல்லாமல் சாதாரண மக்களின் குற்றக் குறைகளை தூக்கி பிடிக்கும் ஊடகங்கள் பணபலம் படைத்தவர்களின் குற்றக் குறைகளை கணக்கெடுத்தும் பார்ப்பதில்லை. மேலும், பாடசாலைகளின் ஊடகங்கள் முன்னின்று பல்வேறு மேலிதக வகுப்புக்களை முன்னெடுக்கின்றன. அவை கல்வி அமைச்சின் பொறுப்பேயன்றி, ஊடகங்களின் பொறுப்பல்ல. சட்டத்தின் மூலம் இது தொடர்பில் தலையிட முடியுமென்றால் சிறந்தது. ஊடக நிர்வனங்களை பொதுமக்கள் நிர்வனமாக கவனத்திற் கொள்ள முடியும்.

21. கையூட்டினை கொடுத்து பொதுமக்களை மாட்டிவிடும் கலாச்சாரம், கிராமிய மட்டத்தில் மக்களை ஏமாற்றும் வெள்ளப்பெருக்கு, வறட்சி நிவாரண கலாச்சாரமும் ஊடகங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கலக்கமான ஊடக பயன்பாட்டிற்கு பதிலாக ஊடக பரிணாமத்தை போன்று ஏனைய பரிணாமங்களாலும் பொதுமக்கள் கவரப்படல் வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டை நிர்வகிக்கும் முழு இயந்திரமும், குறுகிய காலத்தினுள் மாறவில்லை எனின், நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலமும் இருளாகிவிடும்.

22.ராவய பத்திரிகையின் விக்டர் அய்வன் அவர்கள் எடுத்துக்காட்டும் குள பிரச்சினை தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்கள் உணர்ச்சி வசப்படுவதில்லை. பொலிசுக்கு சென்று அறிக்கைகளை பெற்றுக் கொள்கின்ற அவர்கள் குளத்தை சுட்டிக் காட்டாமல் செய்தி சேகரிப்பது அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
செய்தியாளர் சந்திப்புக்களில் அவர்கள் தேவையற்ற கேள்விகளையே எழப்புகின்றனர். ஒருமுறை தேர்தல் ஆணையாளரிடம் கேட்கும் போதே ஊடகவியலாளர்களுக்கு தேவையான பதில்களை வழங்க வேண்டியுள்ளது. இறுதியில் அவர்கள் கோள் சொல்பவர்களாக மாறிவிடுகின்றனர். பத்திரிகையின் முதற்பக்கத்தில் களவு – மிரட்டல் – குற்றச் செயல்கள் ஆகியவற்றை அறிக்கையிடுவது பொதுமக்கள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதாக அமையுமா? என்னுடைய புத்தகமொன்று தொடர்பில் விமர்சனமொன்றை பிரசுரிப்பதற்கான தேவை ஏற்பட்ட போது, ஒரு ஊடகவியலாளர் அவரின் பெயரில் பிரசுரிப்பதற்கு எழுதி தருமாறு கேட்டுக் கொண்டார்.

23. எதிர்கால ஊடக பரம்பரையை கட்டியெழுப்புயவுடன், எதிர்காலத்தில் ஊடக பரம்பரையினருக்காக சட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

 

வடக்கின் பரிந்துரைகள்

01.இணைய பதிவு என்பது இலங்கையினில் பதிவு செய்யப்படுவது என்பதனை தாண்டி இலங்கையினில் பார்வையிடக்கூடிய இணையங்கள் அனைத்து தொடர்பினில் நடவடிக்கை என அமைய வேண்டும்

02.தேசிய பாதுகாப்பு தொடர்பினில் வரைவிலக்கணம் செய்யப்படவேண்டும். உதாரணமாக அரசு தேசிய பாதுகாப்பு எனக்கூறிக்கொண்டு பொருளாதார விடயங்களினை கூட பிரஸ்தாபிக்கலாம்.அதனால் தேசிய பாதுகாப்பு என எதனை வரையறை செய்கின்றனரென்பது முக்கியம்.

03.அரசியல் தரப்பினர் ஊடக பணிகளினில் தலையிடுவது மற்றும் குற்றம் சாட்டி நீதிமன்ற நடவடிக்கைகளினில் ஈடுபடுவது போன்றவற்றிலிருந்தான பாதுகாப்பு தொடர்பினில் வரையறுக்கப்படவேண்டும்.

04.ஊடகங்களது சுயாதீன தன்மை உறுதிப்படுத்தப்படவேண்டும்.

05.சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்கள் இரண்டு தரப்புமே ஏனைய இனச்செய்திகளிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.இன நல்லிணக்கத்தை தோற்றுவிக்க பரஸ்பரம் இரு இன செய்திகளிற்கும் முக்கியத்துவம் தரக்கூடியதான அறிக்கையிடல் மேற்கொள்ள பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

06.ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளினில் ஈடுபட தனியார் ஊடக நிறுவனங்கள் தடைவிதிக்கின்றன.ஊடகவியலாளர்கள் தமது உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்காக ஊடக தொழிற்சங்கங்களினில் இணைவதற்கான அனுமதி

07.சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அனுமதியை கொண்டிருத்தல் வேண்டும்.தாமதித்து ஊடகங்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை தவிர்க்கவேண்டும்.

08.ஊடகங்களிற்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காலக்கெடுவுடன் வழங்கப்படவேண்டும்

09.இன ,மத எல்லையினை தாண்டி ஊடகங்கள் அனைத்து தரப்பும் தமது கருத்துக்களினை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும்.

10.பெண்கள் மற்றும் சிறார்கள் தொடர்பிலான செய்தி அறிக்கையிடல்கள் தொடர்பினில் கட்டுப்பாடுகள்,வரையறைகள் ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.

11.சமூக ஊடகங்கள் தனிநபர் சுயகௌரவத்தினை பாதிக்க வைக்கும் அறிக்கையிடல்களினில் ஈடுபடுமிடத்து பாதிக்கப்பட்ட தரப்புக்கள் நீதி கிடைப்பதற்கான பொறிமுறை

12.இணைய ஊடகங்களினை கட்டுப்படுத்துவதற்கான கூடிய சட்டங்கள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்படவேண்டும்.அவற்றினை பதிவு செய்வதில் கட்டுப்பாடுகள் பேணப்படவேண்டும்.

13.ஊடகமொன்றினால் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் நீதியை பெற்றுக்கொள்ளவும் மானநஸ்டம் பெற்றுக்கொள்ளவும் வழிசமைக்கப்படவேண்டும்.

14.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினில் உள்ள கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் தகவல்களை சுதந்திரமாக பெற்றுக்கொள்ள வழிசமைக்கப்படவேண்டும்.

15.ஊடகங்களினில் வெளியாகும் விளம்பரங்களிற்கு ஆசிரியர் பொறுப்பாகமாட்டார்கள் என்பதுடன் அதனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.

16.செய்திகளிற்கான மூலங்களிற்கான பாதுகாப்பு மீள உறுதிப்படுத்தப்படவேண்டும்.

17.ஊடக செய்திகளினால் பாதிக்கப்படுபவர்கள் நீதியை விரைந்து பெற்றுக்கொள்ளவும் அதற்கு ஊடக நிறுவனம் பொறுப்பேற்பது கட்டாயப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

18.ஏற்கனவே அமுலில் உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு கலைக்கப்படவேண்டும்.

19.பத்திரிகை ஆசிரியர் பேரவையுடன் கலந்துரையாடி யாப்பு வரையறுக்கப்படவேண்டும்.

20.சிங்கள ஊடகங்கள் தமிழ் தரப்புக்களிறகான பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்கின்றன.அரசிடமும் கேள்வி கேட்க தமிழ் ஊடகங்களிற்கு சந்தர்ப்பமற்ற பக்கச்சார்பு நிலை

21.அரசியல் சாசனம் போன்று கண்துடைப்பாக இல்லாது நீதியானதாக ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப்பேரவை சட்டம் இருக்கவேண்டும்.

22.பெண்கள் மற்றும் பாதிக்கப்படும் சிறார்களது பெற்றோர் நீதியை பெற்றுக்கொள்வதற்கான சுலபமான நீதி முறைமை உருவாக்கப்படவேண்டும்.

23.ஊடக ஒழுக்க நெறிகள் பற்றிய எழுத்துமூமாகவேனும் ஆவணப்படுத்தப்பட்டோ சட்டமூலமாகவோ இருந்தால் மட்டுமே ஒருவித மரியாதையுடன் அவை அமுல்படுத்தப்படுவதுடன் ஊடகவியலாளர்களும் பணியாற்றுவர்.

24.ஊடகங்களால் பாதிக்கப்படும் மக்கள் நீதியை பெற்றுக்கொள்ள ஏதுவாக சுலபமான விளக்கம்.

25.ஊடகவியலாளர்கள் பக்கசார்பற்று தகவல்களை பெற்றுக்கொள்வது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நிச்சயமாக்கப்படவேண்டும்.

 

மட்டக்களப்பு மாவட்ட கலந்துரையாடல் தொகுப்பு

01. செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச சட்டம் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தும் முகமாக நாடுதளுவியரிதியில் மக்கள் கருத்துக்களை அறிந்து வரும் செயற்பாடானது உன்மையில் வரவேற்கத்தக்க விடயம்.

02. இத்தகைய செயற்பாட்டில் மக்கள் கருத்துக்களை கேட்பது மாத்திரம் அல்லாது ஊடகவியளாளர்களின் முன்மொழிவுகளை கண்டிப்பாக இந்த சுயாதீனப் பேரவையானது கருத்தில் கொள்ளல் வேண்டும். என்பதுடன் பத்திகையாளர்கள் ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய எழுத்தாளர்களை பாதுகாக்கும் ஏற்பாடுகள் இங்கு மிகமிக குறைவாகவே காணப்படுகின்றமை மிகுந்த வேதனை தருகின்ற செயலாகவே உள்ளது.

03. வெறும் சட்டமாக புத்தகவடிவில் உருவாக்கி கிடப்பில் போடுவதாக அமையாமல் இந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் நடைமுறைக்கு கொன்டு வருவது மிகவும் நன்மை பயக்ககூடியதாக இருக்கும்.

04. மக்களின் உண்மையான கருத்துக்களை செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவை சட்டமாக்கும் போது முழுமையான வடிவுடைய ஒரு சட்டத்தினை இலங்கை எதிர்காலத்தில் தன்னகத்தே கொண்டிருப்பது சர்வதேச மட்டத்தில் இலங்கையின் செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டம் உயர்வானதாக மதிக்கப்படும்.

05. இலங்கையில் பத்திரிகைப் பேரவைச் சட்டத்தை இல்லாதொழித்து இந்த புதிய செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டம் வெறுமனே பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்தும் சட்டமாக அமையாமல் பத்திரிகை துறையினருக்கு பாதுகாப்பையும் நிவாரணங்களையும் பெற்று கொடுக்கக்கூடிய வகையில் அமைவது சிறப்பானதாக இருக்கும்.

06. கடந்த ஆட்சிக்காலங்களில் எத்தனை பத்திரிகையாளர்கள் இல்லாது ஆக்கப்பட்டனர் அவர்களின் பணிகள் எத்தகையதாக இருந்தது நாட்டின் ஊழல் வாதிகளையும் மோசடிகாரர்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு தண்டனை மரணத்தினை சந்திக்க நேர்ந்தது. இதனால் யாருக்கு இளப்பு ஏற்பட்டது அவர்களின் குடும்பங்கள் இன்றுவரை எத்தனையோ குடும்பங்கள் கஷ;டங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றனர்.
இவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது எதுவும் இல்லை நிச்சயமாக மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்களை பாதுகாக்ககூடிய வகையில் சில சட்டங்கள் அமைவது நன்மைதரும்.

07. சிவில் அமைப்புக்களும் ஏனைய தனியார் நிறுவனங்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போது ஒரு செய்தியால் அல்லது தகவலால் பாதிக்கப்படுகின்ற தனி நபருக்கான சட்ட ஏற்பாட்டில் குறைபாடுகள் காணப்படுகின்றது.

08. ஒருதனி நபரை பற்றிய செய்தி பரப்புரைகளை ஆராய்வதற்கு முன்னர் செய்தி நிறுவனங்கள் தங்களின் பத்திரியாளருடைய நம்பிக்கையின் நிமிர்த்தம் செய்தியை வெளியிடுகின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்படுகின்ற நபர் தற்கொலை முயற்சிக்கு கூட முனைகின்றமை அறிந்த விடயமே.

09. அவருடைய இறப்பிற்கு பிறகு உங்களுடைய செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச சட்டம் எவ்வாறான தீர்வை கொடுக்கும்.
இதனை தவிர்பதற்கான சிறப்பான ஒரு ஏற்பாட்டை செய்து இவ்வாறான சட்டத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.

10. நல்லாட்சியின் இத்தகை செயல்பாட்டினை வரவேற்கின்றோம் உண்மையில் சட்டமாக்குவதற்கு முன்னரான மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டு பாராளுமான்றத்தில் நிறைவேற்றுவதற்கான முன் ஏற்பாட்டினை செய்து வருகின்றமை வரவேற்கத்தக்கது.

11. உண்மையில் சில ஊடங்கள் உணர்சிபுர்வமான செய்திகளை ஒளிபரப்பு செய்து மக்களை கிலேசத்திற்கு உட்படுத்த மக்களிடையே குழப்பங்களை செய்கின்ற ஊடக நிறுவனங்களை கட்டுபடுத்துகின்ற வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

12. ஒரு மதத்திற்கு, இனத்திற்கு சாதிக்கு மொழிக்கு முக்கியத்துவத்தினை வழங்கி இன்னொரு மதத்திற்கு, மொழிக்கு வழங்காமல் செயல்படுகின்ற ஊடக நிறுவனங்களை கண்டிப்பாக கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தவேண்டும் என்பதுதான் மக்களின் கருத்தாகும்.

13. பொதுமக்களின் துன்பங்கள், இன்னல்கள், கண்ணீர்கள், அழிவுகளை மரணங்கள் இவைகளை படமாக்கி ஒளியிடுகின்ற சில நிறுவனங்களுக்கு எப்படியாயினும் தங்களுக்கு மக்களை வசியப்படுத்தும் வகையில் உணர்ச்சிபூர்வமான செய்திகளை தொடர்ந்து பரப்புவதற்கு எத்தனிக்கின்ற நபர்களுக்கு எதிராக நடவடிக்ககை எடுக்கும் சட்டஏற்பாடு இடம்பேறவேண்டும்.

14. அடுத்து மிகவும் முக்கியமான விடையம் இனையத்தளங்களில் அதாவது சமூக வலைத்தளங்களில் இன்று எத்தனையோ குழறுபடிகளும் மோசடிகளும் பாலியல் துன்புறுத்தல்பளும் பாலியல் அச்சுறுத்தல்களும் ஆபாச படங்கள் மூலமாக இளம் சமூகத்தினர் பால் இர்க்கப்படுவதும் என பலவிதமான அசம்பாவிதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இது இலங்கையில் மாத்திரமல்ல உலகத்தின் எல்லா நாடுகளிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை எவ்வாறான முறையில் உங்கள் சட்டத்தினுடாக கட்டுப்படுத்தலாம் என்று சற்று சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும்.

15. செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச சட்டம் இலங்கையின் எல்லாமக்களுக்கும் ஒரு நிறைவினை கொடுக்கப்படவேண்டும் என்பதுடன் சகலதரப்பட்ட மக்களின் கருத்துகளையும் உள்வாங்கிகொண்டு பூரணமான சட்டமாக அமையவேண்டும்.

16. இவ்வறான சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் சட்டத்தின் தன்மைகளை மக்களுக்கு உள்ள வகிபாகம் என்ன ஊடக வியலாளர்களின் வகிபாகம் என்ன என்பது பற்றிய தெளிவூட்டல்களை மீண்டும் மக்கள் மத்தியில் செய்யவேண்டும்.

 

https://www.facebook.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1778384392474450/?hc_ref=PAGES_TIMELINE&fref=nf