சமூக ஊடகங்கள் ஊடாக உலகை ஆராய்வது நல்லது போல தோன்றினாலும் அது அத்தனை நல்லதல்ல

Posted on July 22, 2016

0


வலைத்தளங்களில் கிளிக்குகள், உருட்டல்கள் செய்யாமல் மற்றும் சமூக வலைத்தளங்களை வெறித்து நோக்காமல் இன்றைய காலத்தில் ஒரு நாள் கடந்துபோவது வெகு அபூர்வம். உலகளாவிய ரீதியில் இணையதளத்திற்குள் நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டுள்ள சுமார் 3.4 பில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 2.3 பில்லியன் பேர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பார்வையிடுவதில்  மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அவற்றுடன் ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பை உருவாக்கியுள்ளார்கள். சமூக ஊடகங்கள் வெவ்வேறு வடிவங்களிலான தொடர்புகளை வழங்கி வருகின்றன. பரந்த வீச்சத்திலான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கருவிகள் மற்றும் பார்வையாளர்களை அவை அநேகமாக எந்த ஒரு பயன்பாட்டாளருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

social media

தேசிய அளவிலான புள்ளிவிபரங்கள், கிட்டத்தட்ட 2.8 மில்லியன் இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களுடன் தீவிரமாக தொடர்பு கொண்டுள்ளார்கள் என்றும் அவர்களில் 2.2 மில்லியன் பேர்கள் அவர்களின் மொபைல் சாதனங்களை அவற்றைப் புதுப்பிக்க அல்லது மேம்படுத்த பயன்படுத்துகிறார்கள் என்றும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த காலங்களை விட கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு மகத்தான அளவிலான 53 விகிதத்தால் அதிகரித்துள்ளது மற்றும் எதிர்காலத்தில் அது நிச்சயமாக இன்னும் தொடரும். எனவே இந்த சமூக வலைத்தளங்களின் தாக்கங்களைப்பற்றி ஒரு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டிய ஒரு அவசியமான காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்.

அதேவேளை “எங்கள் உலகத்தில் பல்துலக்கும் தூரிகைகளை உபயோகிப்பவர்களைக் காட்டிலும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்கிற உண்மை உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம், ஸ்ரீலங்காவில் சமூக ஊடகம் என்பதை வேறுவிதமாகச் சொல்வதானால் “முக நூல்” என்று அழைக்கலாம் என நான் சொன்னால் நீங்கள் யாரும் அதை ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. புள்ளிவிபரங்கள் இந்த அறிக்கையை உறுதிப்படுத்துகின்றன, கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்காவாசிகளில் 90 விகிதத்துக்கும் அதிகமானவர்களின் சமூக ஊடக செயற்பாடு முகநூலிலேயே உள்ளதாக புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.

உலகெங்கிலுமுள்ள பல்வேறு சட்ட அமலாக்க அதிகாரிகள், எவ்வாறு சமூக ஊடகங்கள் குற்றவாளிகளை அடையாளம் காணவும் அவர்களைப் பிடிக்கவும் உதவி புரிந்தன என்பதைப்பற்றி சில சுவராஸ்யமான கதைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்த சாகசமான மற்றும் பரபரப்பூட்டும் நலன்களுக்கு அப்பால் இந்த சமூக ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் பல உணர்ச்சி மிக்க கதைகளும் அதேபோல உள்ளன. எனது மாமனார் தான் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு தனது சிறு பராயத்து நண்பர்களில் ஒருவருடன் முகநூலைப் பயன்படுத்தி எவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் என்கிற கதையை சமீபத்தில் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

smedia

பதின்ம வயதினர், உண்மையில் இந்த தளங்கள் தங்களை அதிக சமூக உணர்வுள்ளவர்களாக மாற்றுவதுடன் சம ஆர்வமுள்ள மக்களை சந்திப்பதற்கு தங்களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள் – இல்லையென்றால் வேறு எந்த வழியிலும் இது சாத்தியமாக முடியாது. ஆனால் உங்களில் அநேகர் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் உண்மைகளையே நீங்கள் கடந்து வந்துள்ளதாக நான் கருதுகிறேன் – அவை அனைத்தும் உண்மையாக இருக்க முடியாது என்றும் மாற்றலாம். சமூக ஊடகங்களில் காண்பது அல்லது சொல்வது எதுவானாலும் அது உண்மை என மக்கள் நம்பும் போக்கு இருப்பதினால், இந்த தவறான தகவல்கள் யாவும் எங்கள் சமூகத்தில் பல தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுக்கின்றன – துரதிருஸ்டவசமாக பல சம்பவங்களில் இதுதான் வழக்காக உள்ளது. சிறிய சங்கடங்களைத் தோற்றுவிப்பதற்கு அப்பால் குறிப்பிட்ட சில தவறான தகவல்கள் அல்லது எண்ணங்கள் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்துவர்களிடையே பரவி வருகிறது, அதன் விளைவு வெறுப்பை ஊட்டுவதை தவிர வேறு ஒன்றுமில்லை.

ஒரு உளவியல் நிபுணர், மக்கள் உண்மையான உலகத்துக்கும் மற்றும் எண்ணிக்கையற்ற சாதாரண இணையத்தள உறவுகளுக்கும் இடையே உள்ள அர்த்தமுள்ள உறவுமுறையை வேறுபிரித்தறிவதற்கு சிரமப்படுகிறார்கள் என்று பரிந்துரைத்துள்ளார். இந்த செயற்பாடுகளில் செலுத்தப்படும் ஏராளமான கவனம், எங்கள் முக்கியமான முகத்துக்கு முகம் உள்ள தொடர்புகளை பலவீனப்படுத்துகிறது என்று அவர் அச்சப்படுகிறார். ஆனால் அது அத்துடன் முடிவதில்லை, இந்த நவீன வழிமுறைகளிலான சமூக தொடர்புகள் காரணமாக உடல் ரீதியான செயற்பாடுகள் அபாயகரமான அளவில் குறைவடைந்து வருகின்றன.

சுவராஸ்யமான  மற்றும் மறைமுகமான ஒரு விடயம் என்னவென்றால் சமூக வலைத் தளங்களுக்காக சராசரியாக செலவிடப்படும் நேரம் தொலைக்காட்சிகளைப் பார்க்க செலவிடும் நேரத்தைக்காட்டிலும் அதிகரித்து உள்ளது. ஊழியர்கள் மற்றும் வேலை தேடுவோரை இந்த போக்கு கண் வைத்துள்ளது, இந்த சமூக ஊடகங்கள் வழியாக வேலைச் சந்தை ஒரு புதிய கதவைத் திறந்துள்ளது. விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை பரப்புவது ஒரு புதிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது, இதற்காக இந்த தொழில்நுட்ப பரிமாணத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். சமீபத்தைய வெள்ள நிவாரண உதவி பிரச்சாரம் சமூக உடகங்களின் திறமையின் சிறந்த பரிமாணத்துக்கு மிகச் சிறந்த சாட்சியாக உள்ளது.

எவ்வாறெனினும் சமூக ஊடகங்களின் வழியாக உலகை ஆய்வு செய்வது நல்லது போலத் தோன்றினாலும் அது நல்லதல்ல. ஆய்வாளர்கள், அது பரபரப்பூட்டும் செய்திகளை மட்டும் உங்களுக்கு ஊட்டி வருகிறதே தவிர, நீங்கள் உண்மையில் அறியவேண்டிய தேவையுள்ளவற்றை முற்றாக உங்களுக்கு வழங்காமல் எப்படி உங்கள் மனதையும் மற்றும் எண்ணங்களையும் குறுகச் செய்கிறது என்று தங்கள் கவலையை வெளியிட்டுள்ளார்கள். பொதுவாக எழுப்பப்படும் புகாரான, இந்த வலையமைப்புகள் உங்களை எப்படி திசைதிருப்புகின்றன என்பது, இந்த சமூகத் தளங்கள் எப்படி உங்களை  ஆழமான மனத் தழும்புகளுக்குள் தள்ளி விடுவதால் அடிக்கடி மன உளைச்சல்கள் ஏற்படுவதற்கு வழி செய்வதுடன் சில வேளைகளில் தற்கொலைக்கும் கூட தூண்டிவிடுகிறது என்பதுடன் ஒப்பிடுகையில் இந்தப் புகார் மிகவும் சிறிய ஒரு பிரச்சினைதான்.

வெறுமே ஒரு பொத்தானை அழுத்துவதின் மூலமும் மற்றும் சிறிய வட்டமான சிரித்த முகமுடைய உருவத்தின் மூலமும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் திறன் போலி மனிதர்களுக்கு வெற்றிகரமாக அதிகாரம் வழங்குகிறது. சமூக ஊடகங்கள் இயற்கையாக நாங்கள் இருப்பதைக் காட்டிலும் அதிகம் பகிரங்கமாக இருப்பதை ஊக்குவிக்கிறது. இந்த முழு உலகமும் உங்களைக் காட்டிலும் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா …..?? அல்லது ஒரு சமூக ஊடக அமர்வின்போது, உங்கள் வேலைத் திறன், அறிவு, அல்லது சாதனை என்பன பற்றாக்குழைறயாக உள்ளதாக நீங்களே எண்ணி உங்களைப்பற்றி துயரம் அடைந்திருக்கிறீர்களா…?? நல்லது, ஆய்வுகள் வெளிப்படுத்துவது மக்கள் தங்களை இந்த இணையங்கள் மூலம் அறிமுகமானவர்களுடன் ஒப்பீடு செய்ய ஆரம்பிக்கும்போது, அது அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை தூண்டுகிறது என்று. மற்றும் அதன் பார்வை மூலம் பொறாமையானது எங்கள் ஆன்மாவுக்குள் நுழைவதற்கு புதிய ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.

ஆனால் சமூக ஊடகம், எப்பொழுதும் நோக்கங்கள் அதைத் தேடுபவர்களுக்கு அவர்கள் கைகளில் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. சமூக ஊடகம் நல்லதா அல்லது கெட்டதா என்கிற குழந்தைத்தனமான ஒரு முடிவுக்கு நீங்கள் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இதன் நோக்கம், தாக்கங்களை உண்மையாகவும் மற்றும் சரியாகவும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப எங்கள் மனதையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

http://www.thenee.com/190716/190716-1/190716-1.html

Advertisements