காணமற்போன யாழ் ஊடகவியலாளர் இராமசந்திரன் எங்கிருக்கின்றார்?

Posted on February 16, 2016

0


ஓன்பது வருடங்களிற்கு முன்னர் காணமற்போன யாழ் ஊடகவியலாளர் இராமசந்திரன் எங்கிருக்கின்றார்?

ருக்கிபெர்ணாண்டோ, சுவஸ்திகா அருலிங்கம் – தமிழ் வடிவம் குளோபல் தமிழ் செய்திகள்:-

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுப்பிரமணியம் இராமசந்திரன் என்ற பத்திரிகையாளர் 2007 இல் யாழ்ப்பாணத்தில் பெப்ரவரி 17 ம் திகதி காணமற் போனார்.இராணுவ சோதனைச் சாவடியிலும் முகாமிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தபலர் உள்ளனர்,எனினும் இன்று வரைஅவரி;ற்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் அவரது வயதான பெற்றோர் அவரின் வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது ஊடக துறை சகாக்களும் குடும்பத்தினரும் ராமசந்திரன் எந்த விவகாரம் என்றாலும் அச்சமின்றி அதுகுறித்து செய்திவெளியிடும் பத்திரிகையாளன் என நினைவு கூறுகின்றனர். ஜிரிஎன். இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதகுழுக்களும் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து துணிச்சலுடன் செய்திகளை வழங்கிவந்த யாழ் ஊடகவியலாளன் இராமசந்திரன்.

இவர் காணமற்போய் ஓன்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணமற்போன கொல்லப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்கள், சிவில்சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறாதது போன்று இவர் குறித்த விசாரணைகளும் இடம்பெறாதநிலை காணப்படுகின்றது.
 சம்பவம்
காணமற்போவதற்கு சில வாரங்களிற்கு முன்னர் இராணுவத்தினரின் துணையுடன் வர்த்தகர்கள் சிலர் முன்னெடுக்கும் சட்டவிரோ மண் அகழ்வு குறித்து இராமசந்திரன் பத்திரிகையில் எழுதியிருந்தார்.இந்த கட்டுரை வெளிவந்ததை தொடர்ந்து நீதிபதியொருவர் சட்டவிரோத மணல்அகழ்வில் ஈடுபட்ட வாகனத்தை கைப்பற்றுமாறு பொலிஸாரிற்கு உத்தரவி;ட்டுள்ளார். அதேகாலப்பகுதியில் மணல் அகழ்வுடன் தொடர்புபட்டிருந்த வர்த்தககர்pன் வாகனத்தை விடுதலைப்புலிகள் தீக்கிரையாக்கி உள்ளனர். இந்த சம்பவங்களிற்கும் இராமசந்திரனின் படுகொலைக்கும் தொடர்புள்ளது என கருதியவர்களே அவரை கடத்தியிருக்கலாம் என அவரது சகாக்கள்கருதுகின்றனர்.
இராமசந்திரன் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுவதை பார்த்த சிலர் உள்ளனர்,வழமைபோல இராமசந்திரன் அன்றைய தினமும் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையே அவர் கலிகை சந்தியில் உள்ள சோதனைசாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஜிரிஎன். படையினர் அவரை சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பியதை தாங்கள் பார்த்ததாக பலர் தெரிவிக்கின்றனர், ஏழு மணியளவில் தீடிரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அவ்வேளை இராணுவத்தின் பவல் வாகனம் வரும் சத்தத்தை தாங்கள் கேட்டதாகவும், இராமசந்திரனை அவர்கள் அதில்கொண்டு சென்றிருக்கலாம் எனவும்  அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இராமசந்திரனின் சகோதரி ஜெயரத்தினம் கமலாலிசினி தனது சகோதரன் இரவு 8 மணிக்கு பின்னரும் வீடு திரும்பாதது குறித்து  கவலையடையத் தொடங்கியுள்ளார்.அவர் இவரை இரண்டு தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார், அவ்வேளை இராமசந்திரன்  தற்போது தன்னை இராணுவத்தினர் முகாமில் வைத்து விசாரித்து வருவதாகவும் தான் பாதுகாப்பாக திரும்பிவருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அதிகாலை 4.00 மணியாகியும் தனது சகோதரர் திரும்பாதைதொடர்ந்து கமலாலிசினி மீண்டும் தனது சகோதரரை தொடர்புகொண்டுள்ளார். அவ்வேளை அவர் தன்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளவேண்டாம் எனவும் அதனால் தனக்கு பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் கமலாலிசினி தனது தந்தையுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தனது சகோதரரை தேடியுள்ளார், எனினும் அந்த முகாமை சேர்ந்த இராணுவத்தினர் இராமசந்திரன் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது தாங்கள் அவரை பார்க்கவுமில்லை, கைதுசெய்யவுமில்லை  என குறிப்பி;ட்டுள்ளனர், இராமசந்திரன் குறித்த தகவலை வழங்குமாறு குடும்பத்தவர்கள் வாதாடியவேளை அங்கிருந்து அவர்கள் செல்லாவிட்டால் அவர்களை கைதுசெய்துவிடுவோம் என இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அன்றிரவு நோர்வேயில் வசிக்கும் இன்னொரு சகோதரி இராமசந்திரனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளார், அவ்வேளை இராமசந்திரன் கவலைப்பட வேண்டாம் நான் விரைவில் வீடு திரும்புவேன் என குறிப்பிட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடியது இதுவே இறுதி தடவை,2012 வரை இராமசந்திரனின் தொலைபேசிக்கு குடும்பத்தினர் அழைப்பை ஏற்படுத்தி வந்துள்ளனர். ஜிரிஎன். ஆனால் எவரும் பதிலளிக்கவில்லை, அதன் பின்னர் குறிப்பிட்ட தொiலைபேசி சேவை நிறுவனம் அந்த இலக்கத்தை வேறு ஓருவரிற்கு வழங்கிவிட்டதாக இராமசந்திரன் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
நீண்டதேடல்
இதன் பின்னர் தங்கள் பிள்ளைகள் காணமற்போன ஏனைய குடும்பத்தவர்களை போன்று இராமசந்திரன் குடும்பத்தினரும் பல நாட்கள், பல மணிநேரங்கள் இராணுவத்தின் சிவில் அலுவலகத்தின் வாசலில் தவம் கிடந்துள்ளனர், அவர்களின் தொடர்ச்சியான விஜயத்திற்கு இறுதியில் பலன் கிடைத்துள்ளது, அவர்கள் மீது கருணைகொண்ட புலனாய்வு அதிகாரியொருவர் இராணுவத்தினரே இராமசந்திரனை கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார். அவர் அவ்வேளை அமைச்சராக காணப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கும்படிஇராமசந்திரன் குடும்பத்தினரிற்கு அறிவுறுத்தியுள்ளார். ஜிரிஎன்.  இதன் பின்னர் அவர்கள் அமைச்சரை சந்தித்துள்ளனர், அவ்வேளை அமைச்சரின் செயலாளராக காணப்பட்ட மகேஸ்வரி வேலாயுதமும் அங்கு காணப்பட்டுள்ளார்.அவ்வேளை டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர் இராமசந்திரன் சில தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டதாலேயே இராணுவத்தினர் அவரை கொண்டுசென்றதாக தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் இராமசந்திரனின் சகோதரி மகேஸ்வரி வேலாயுதத்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார், அவ்வேளை அவர்இராமசந்திரனை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும், அவர் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் மகேஸ்வரி வேலாயுதமும் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் பின்னரும் இராசந்திரன் குடும்பத்தினர்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளனர்.அவ்வேளை இராமசந்திரனின் தந்தைக்கும் அமைச்சரிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது, அமைச்சரின் கட்சியான ஈபிடிபி இராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படுகின்றது, ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது என இhரமசந்திரனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு பதிலளித்த அமைச்சர் இராணுவம் குறித்து எதனையும் தெரிவிக்க வேண்டாம் அவ்வாறு தெரிவித்தால் சுடப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து சில மாதங்களிற்கு பின்னர் கமலாலிசினி வீட்டிற்கு விஜயம் செய்த ஆறு பேர்-இராணுவம் மற்றும் பொலிஸை சேர்ந்தவர்கள்- இராமசந்திரனின் கல்விசான்றிதழ்கள் உட்பட தனிப்பட்ட ஆவணங்களை கோரியுள்ளனர், இராமசந்திரனின் தந்தை பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் அவற்றை கையளித்தவேளை இராமசந்திரனிற்கு வேலை வழங்குவதற்காகவே  அந்த ஆவணங்கள் தேவை எனக்குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல கண்ணால் கண்ட சாட்சிகள்
2013 பிற்பகுதியில்  இராமசந்திரனை கண்ணால் கண்டதாக இருவர் கமலாலிசினி தெரிவித்துள்ளனர், ஓருவர் காங்கேசன் துறை உயர் பாதுகாப்பு வலயத்திலும், மற்றுமொரு நபர் பலப்பையில் உள்ள 524 பிரிகேட்டிற்றின் முகாமிலும் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.2009 முதல் 2010 ம்ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் இராசந்திரனுடன் உரையாடியதாக ஓருவர் தெரிவித்துள்ளார். ஜிரிஎன். இராமசந்திரனின் படத்தை அவரது குடும்பத்தினர் காண்பித்ததை தொடர்ந்து தான் உரையாடியது இராமசந்திரனுடன் தான் என்பதை அவர் உறுதிசெய்துள்ளார், தன்னை விடுதலை செய்வதாக இராணுவத்தினர் உறுதியளித்துள்ள போதிலும் அதனை நிறைவேற்றவில்லை என இராமச்சந்திரன்  தன்னுடன் உரையாடிய நபரிடம் தெரிவித்துள்ளார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் பலப்பை இராணுவ முகாமிற்கு  சென்ற அரசஅதிகாரி யொருவரிடம் முகாமினை சேர்ந்த புலானய்வு அதிகாரியொருவர் உங்கள் கிராமத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஓருவர் எங்களிடம் உள்ளார் என இராமசந்திரனை அறிமுகப்படுத்தியதை கண்ணால் கண்டதாக ஓருவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரே இராமசந்திரனை கைதுசெய்தனர் என்ற தகவலை அவரது சகோதரியிடம் வழங்கிய புலானய்வு அதிகாரியே இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கை எதனையும் எடுக்காத பொலிஸார்
இராமசந்திரன் காணமற்போய் வில நாட்களிற்கு பின்னர் அவரின் தந்தை பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார், ஆனால் பொலிஸார் இதுவரை எந்த பதிலையும் வழங்கவில்லை,இராமசந்திரன் குறித்த செய்தியை அறிந்ததும் யாழ்ப்பாண நீதவான் ஓருவர் அது குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிற்கு அறிவுறுத்தினார் என தெரிவிக்கும் ஊடகவியலாளர் ஓருவர் இதனை தொடர்ந்து கமலாசினி வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று ஐந்து  மணித்தியாலங்களாக விசாரணை செய்ததாக தெரிவிக்கின்றார். ஜிரிஎன். கலிகை முகாமை சேர்ந்த இராணுவத்தினரே இராமச்சந்திரனை கைதுசெய்தனர் என்பது அவரது சகோதரிக்கு எப்படி தெரியும் என்பது குறித்தே அவர்கள் விசாரணை செய்துள்ளனர், இராமசந்திரனிற்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதை விட அவர் கைது செய்யப்பட்டது குறித்த தகவல்களை பார்த்தவர்கள் யார் என்பதை அறிவதிலேயே பொலிஸார் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர் என கமலாசினி தெரிவிக்கின்றார்.
2015 டிசம்பர் 3 ம் திகதி காணமற்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கமலாசினி வாய்மூல வாக்குமூலத்தை வழங்கியுள்ளார், கண்ணால் கண்டவர்கள் தெரிவித்த தகவல்களை அவர் வழங்கியுள்ளார், ஜனவரி 2016 இல் ஆணைக்குழவிடமிருந்து அவரிற்கு கடிதமொன்று வந்துள்ளது, இராமசந்திரன் காணமற்போனது குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிரிஎன். அவரிற்கு பொருளாதார உதவிகளை பெறுவதற்கான உரிமையுள்ளது எனவும் அதனை பெறுவதற்காக அரச அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணமற்போதல் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவது எப்போது முடிவிற்கு வரும்.
2010 இல் காணமற்போன சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான கைதுகள் மற்றும் நீதிமன்ற விவகாரங்களிற்கு அதிகளவு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.அவரது மனைவியும் குடும்பத்தினரும் வெளிப்படுத்தும் உறுதி காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது,சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. ஜிரிஎன். ஆனால் அது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை, எனினும் பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவன பணியாளர்கள், நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கடும் மௌனம் நிலவுகின்றது.
தமிழ் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட,தாக்கப்பட்ட, காணமற்போன,தடுக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன.யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் பத்திரிகையான உதயன் இவ்வாறான பல தாக்குதல்களை சந்தித்துள்ளது.அதன் உரிமையாளரும் ஆசிரியரும் விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்கின்றனர்.
இராமசந்திரன் விவகாரம் என்பது பல கண்ணால்கண்ட சாட்சிகளைகொண்டது, அவர் காணமற்போன பின்னர் என்ன நடந்தது என்பதைகண்டறிவதற்கு அவை உதவக்கூடும்,அவர் காணமற்போய் இராணுவமுகாம் ஓன்றில் 2013 இல் காணப்பட்ட தகவல் உள்ளது.
அவர் திரும்பிவருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது குடும்பம் 9 வருடம் காத்திருக்கின்றது,இராமசந்திரன் மீண்டும் வீடு திரும்புவாரா?
அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் என்ன நடந்தது என்பதற்கான பதிலை அவரது குடும்பத்தினரிற்கும் சகாக்களிற்கும் அரசாங்கம் வழங்குமா?
Advertisements