பத்திரிகைச் சுதந்திரம் முழுமையாக இருக்கின்றதா?

Posted on May 11, 2015

0


உண்மையை எழுதினால் அரசியல்வாதிகளாலும், அடக்குமுறையாளர்களாலும் அடி உதைபடுகின்ற ஒருகேவலமான நிலைமை இன்றும் தொடர்கின்ற அவலமே காணப்படுகின்றது. சுதந்திரமான முறையில் எழுதமுடியாத ஒருநிலை முடிவுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உண்மையான நிலவரத்தை உண்மையான வடிவத்தில் கொண்டுவந்து நாட்டு மக்களுக்கு அறியச் செய்ய வேண்டிய கடப்பாடு எழுதுகின்றவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் உண்டு. அதனை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இதனைத் தவிர்த்து ஒருவர்மீது கொண்டுள்ள கோபதாங்களை வைத்துக் கொண்டு பத்திரிகை வெளியிடுவதோ, எழுதுவதோ சரியான காரியமல்ல. அதற்காகவேண்டி உண்மையான விடயங்களை எழுதாமல், சமூகத்திற்கு முன்பு காண்பிக்காமல் இருந்தால் உண்மையான ஊடகவியலாளாக இருக்க முடியாது.
இன்று எத்தனையோ பத்திரிகைகள் வெளிவந்தவண்ணமே இருகின்றன. இணைய தளங்களும் நிறைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு விடயத்தையும் ஒளிவுமறைவின்றியே காண்பிக்க வேண்டிய நிலையில் ஊடகங்கள் இருக்கின்றன. உண்மைத்தன்மைக்கு எதிராக எதனையும் எழுதவோ, பிரசுரிக்கவோ முடியாத நிலையி, உண்மையானதை எழுதுவது என்பது சிலவேளைகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திவிடுவதன் காரணமாக பல பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பலர் காணாமல் போய்விடுகின்றனர். இன்றைய புதிய அரசு நல்லாட்சிக்கான கதவினை திறந்து, 19 ஆவது திருத்தச் சட்டத்தினையும் அமுல்படுத்தியுள்ளது. அதில் சுயாதீனமான ஆணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுயாதீனமான முறையில் உண்மையான விடயங்களை எழுத்துருப்படுத்துவதில் எவ்விதமான சிக்கலும் இருக்கமாட்டாது. ஏனெனில் கடந்தகாலங்களில் வெளியேறிய பத்திரிகையாளர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அரசு அழைத்துள்ளமை முக்கியமான விடயமாகும். ஆதனால் பத்திரிகை சுதந்திரத்தை அரசு திறந்த மனதோடு நடைமுறைப்படுத்துவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளதுபோல தென்படுகின்றது.
இந்த வகையில், உலகப் பத்திரிகை சுதந்திர தினம் கடந்த 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. பத்திரிகைகள் உண்மைத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான கலாசார நிறுவனமான யுனெஸ்கோவின் பொது மநாடொன்றின் 26 ஆவது கூட்டத்தொடரில் விதைக்கப்பட்ட விதந்துரைகளுக்கு அமைவாக வருடந்தோறும் மே மாதம் ஆம் திகதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கும் மேலான்மையை 1993 டிசம்பரில் ஐ.நா.பொதுச்சபை ஏகமனதாக நிறைவேற்றியது. அதற்கு முன்னராக 1991 ஏப்ரல் 29 தொடக்கம் மே 3 வரையான காலப்பகுதியில் நமீபியாவின் வின்டோக் மாநகரில் சுதந்திரமானதும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஆபிரிக்கப் பத்திரிகை உலகை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் நடைபெற்ற மநாட்டில் ஆபிரிக்கப் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்பட்ட சுதந்திரப் பத்திரிகைக் கோட்பாட்டுப் பிரகடனத்தின் வருடாந்த தினமாகவும் மே 3 ஆம் திகதி அமைந்திருப்பதாலும், இந்தப் பிரகடனத்தை யுனெஸ்கோ அங்கீகரித்தமை விசேட அம்சமாகும்.
பொதுவாக ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கான மிரட்டலும், தணிக்கைகளும் இல்லாமல், உண்மைத்தன்மையான தகவல்களை வெளியிடுவதற்கான சுதந்திரத்தை வழங்குவதாக அமையும். உண்மையான ஊடக சுதந்திரங்கள் வெவ்வேறு வழிமுறைகளில் காணப்படுகின்றன. நேர்டிக் நாடுகள், கனடா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் கட்டுப்பாடுகளற்ற நிலையிலும், சீனா, ஈரான், வடகொரியா, கியூபா, கிழக்காசியாவிலுள்ள சில நாடுகளில் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அந்த நாடுகளின் அரசுகள் மேற்கொள்கின்ற நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றமையானது அதன் சுதந்திரத்தன்மையில் விழுந்துள்ள பாரிய அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுவதாக பத்திரிகை சுதந்திரத்திற்கான அமைப்புக்கள் கூறுகின்றன. இந்நிலையில் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சாசன பிரகடனத்தின் 19 ஆவது பிரிவு சுதந்திர கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், வெளியிடுவதற்கும், சகலருக்கும் உரிமை உண்டு. பிறரின் தடையின்றி தான் ஒரு கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், தேசங்களின் எல்லைகளைப் பொருட்படுத்தாது எவ்வகையான ஊடகங்களின் மூலமும் தகவல்களைப் பெறுவதற்கும், வழங்குவதற்கும் உரிமையும் இதில் உள்ளடங்குகிறது என்கிற வாசகத்தை இந்நாடுகள் கைகொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
ஒவ்வொரு ஊடகமும் குறிப்பாக பத்திரிகைகள், மக்களின் நலன்களிலும், நாட்டின் உண்மைத்தன்மையான விடயங்களிலும் பக்கச்சார்பற்ற முறையிலும், தேசங்கள் மத்தியில் செம்மையானதும் ‡ சமநிலையானதுமான செய்திகளின் சுதந்திரமான பரிமாற்றத்தையும், உலகின் சகல பாகங்களிலும் இருந்து வருகின்ற தகவல்களின் சரியான தன்மையையும், நேர்மையையும் அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையையும் மேம்படுத்துவதே இந்தத் தினத்தின் அடிப்படையான அம்சமாகக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் பத்திரிகைகள் சுதந்திரமான கருத்துக்களை பக்கசார்பின்றி தங்களுடைய வாசகர்களுக்கு விருந்து படைக்க வேண்டும். இதன்போது உண்மைத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கின்ற செயற்பாடுகளும் உலகின் பல நாடுகளில் பத்திரிகைத்துறைக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டேதான் வருகின்றன. உண்மைத் தன்மையானதும், வாசகர்களின் அபிமானத்திற்குரிய பத்திரிகைகளை எரித்தாலும் நாம் மீண்டு கொண்டே இருப்போம் என்பதையும் உலகிற்கு காண்பித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
காந்தியடிகள் கூறும்போ%

http://sudaroli.com/?p=8452

Advertisements