கருத்துச் சுதந்திரம்

Posted on April 11, 2015

0


துரைசாமி நடராஜா

ஜனநாயக நாடுகளில் மக்களின் கருத்துக்க ளுக்கு களம் அமைத்துக்கொடுப்பதில் ஊட கங்கள் க்கியத்துவம் பெறுகின்றன. ஊட கங்கள் தமது தனித்துவத்தைப் பேணி மக்க ளின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதன் ஊடாக ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டுக்கு உந்துசக்தியாக திகழ்கின்றன. பல சகங்க ளினதும் சாம்ராஜ்ஜியங்களினதும் உருவாக் கத்துக்கு ஊடகங்கள் கை கொடுத்துள்ளன என்பதனை மறுப்பதற்கில்லை. எனவே தான் நாடுகளின் உயிர்நாடியாக ஊடகங்கள் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
ஜனநாயகம் மக்களாட்சி என்று வர்ணிக் கப்படுகின்றது. மக்கள் தமது ஆளும் அதிகா ரத்தை நேரடியாகவோ அல்லது தம்மால் தெவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ஊடாக வோ பிரயோகிக்கக் கூடிய அரசாங்க றையே ஜனநாயகம் என்றும் புத்திஜீவி கள் கருத்து தெவிக்கின்றனர். “மக்களின் மக்களால் மக்களுக்கான அரசாங்கம்’ என்று லிங்கன் ஜனநாயகத்தை விளக்குகின்றார்.
1795 இல் தோமஸ் உப்பர் என்பவர் ஜனநõய கத்தைப் பற்றி கூறுகையில், “மக்களுடைய மக்களுக்கான அரசாங்கம்’ என்று வரைவி லக்கணப்படுத்துகின்றார். டேனியல் வெப்ஸ்டர், தியோடர் பாக்கர் உள்ளிட்ட பலரும் ஜனநாயகம் குறித்து பல்வேறு வரைவிலக்கணங்களை ன்வைத் துள்ளனர்.

ஜனநாயக நாடுகளில் மக்களின் சிவில் உ மைகள், அரசியல் உமைகள், பொருளா தார உமைகள் என்பன சிறப்பாக பேணப் படுகின்றன. இன, மத பேதமின்றி சகலரும் ஒரே விதமாக பேணப்படுவதோடு மக்க ளின் எழுச்சி கருதி அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. ஜனநாயக நாடுகளில் சிந்திப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கு மான உமை க்கியத்துவம் பெறுகின் றமை குறிப்பிடத்தக்கதாகும். ஜனநாயக அமைப்புக்களின் அடிப்படையே இவ்வு மைகளாகும் என்றும் புத்திஜீவிகள் கருத்து தெவித்துள்ளனர்.

““கருத்துக்களை அடக்குவதற்கு அரசு எவ் வித பலாத்காரத்தையும் பயன்படுத்தலாகாது” என்பது மெக்ஜவர் என்பவன் கருத்தாகும்.
கருத்து சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்பன ஒரு நாட்டில் ஒடுக்கப்படும் நிலை ஏற்படுமா னால் மக்களிடையே அதிருப்தி தோன்றுவ தற்கு அது வாய்ப்பாகி விடும். அத்தோடு, இந் நிலை காரணமாக ஜனநாயகத்தில் விசல் ஏற் படுவதோடு ஜனநாயகத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்.

ஜனநாயக நாடு என்ற வகையில் இலங் கையின் அரசியல் யாப்பினை நாம் எடுத்து நோக்குகின்ற போது இந்த யாப்பின் ஊடாக பேச்சுச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு சுதந் திரங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ள மையை அவதானிக்க டிகின்றது.

ஜனநாயக நாடுகளில் மக்களின் கருத்துக் களை ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. இந் நிலையில், ஊடகங்கள் பக்கச்சார்பின்றி நேர்மைத் தன்மையுடன் நடந்துகொள்வது மிகவும் அவசியமாகின்றது. உண்மையான செய்திகளை வழங்குவதற்கு ஊடகங்கள் பின்நிற்கக் கூடாது. இனவாதத்தை தூண்டு கின்றதும் பொய்யான தன்மை கொண்டது மான செய்திகளை ஊடகங்கள் வழங்க னைதல் கூடாது. உண்மையான செய்தி களை வழங்குவதனை ஒரு தேசியக் கடமை யாக ஊடகங்கள் கொள்ளவேண்டும். உண் மையான செய்திகள் கிடைக்காத ஓர் இனம் என்றாவது அல்லது விரைவில் ஏனையோ னால் அடிமை நிலைக்கு இட்டுச்செல்லப் படும் என்பதனை மறந்து விடலாகாது.

பெரும்பாலான நாடுகளில் ஊடகவிய லாளர்கள் இன்றைய சூழ்நிலையில் பல் வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதற்கு பெரும்பாலும் ஊடகவியலாளர்களே கார ணகர்த்தாக்களாக அமைந்து விடுவதாகவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு சிறிய விடயத்தைக் கூட மிகைப்படுத்திக் காட்டுதல், சக மற்றும் இனங்களுக்கிடை யிலான விசல்களுக்கு வித்திடுதல், ஊடக தர்மத்துக்கு மாறாக செயற்படுதல் போன்ற காரணங்களால் ஊடகங்கள் மற்றும் ஊடக வியலாளர்கள் மீதான ஐயப்பார்வை வலுப் பெற்று வருவதாக இவர்கள் மேலும் தெ விக்கின்றனர்.

அரசியல் அழுத்தங்களின் விளைவாக சில நாடுகளில் ஊடகத் துறையின் சுதந்திரங்கள் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெவிக் கப்படுகின்றது. இத்தகைய நாடுகளில் அரசியல்வாதிகள் தமக்கு எதிராக ன்வைக்கப்ப டும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப மாற்று நடவ டிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன ஒற்றுமைக்கு மட்டுமன்றி நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு, கல் வித் துறை ஊக்குவிப்பு, நாட்டின் எதிர்கால வெற்றிக்குய ஆலோசனைகள் என்ற பல் துறை சார்பாகவும் ஊடகங்கள் தம்மாலான உச்சக்கட்ட பங்களிப்பினை வழங்க டி யும் என்பது வெளிப்படை.
உலகின் ஜனநாயக அரசுகள் ஊடகவிய லாளர்களின் நலன் கருதியும் ஊடகங்களின் எழுச்சி கருதியும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கிவருகின்றன. இந்த வகையில் இலங்கை அரசு “மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்தின் ஊடாக ஊடகவிய லாளர்களுக்கான உபகரணங்கள் மற்றும் கடன் வசதிகள் என்பவற்றை வழங்குவதன் ஊடாக ஊடக எழுச்சிக்கு கை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகை ஒரு கிரõமமாக மாற்றியமைத்த தில் தகவல் தொழில்நுட்ப விருத்தி க்கிய காரணியாக அமைந்துள்ளது. அதிலும், ஊட கங்களின் தகவல் பமாற்றல் பங்களிப்பு இந் நிலைக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது.
எனவேதான் ஊடகங்களின் பெருமை குறித் தும், க்கியத்துவம் குறித்தும் தற்போதைய சூழ்நிலையில் அதிகமாக பேசப்படுகின் றது. இந்த வகையில், ஊடகத்துறை சார் அறிவினை பாடசாலை மட்டத்தில் மாணவர்களிடையே மேம்படுத்துவது குறித்து யற்சிகளும் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருவதனை அவதானிக்க டிகின்றது.

ஜனநாயக அரசியல் றையின் வெற்றிக் கும் ஜனநாயக றை சிறப்பாக இயங்குவ தற்குமென பல்வேறு காரணிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஒத்த தேசியத் தன்மை, சக ஒருமைப்பாடு, கல்வி, மக் கள் ஈடுபாடு, அரசியல் சமத்துவம், கட்சி றை, தலைமைத்துவம், மக்களின் சகிப் புத்தன்மை, கருத்துச் சுதந்திரம், சுதந்திரமாக விவாதிக்கும் தன்மை என்பன குறிப்பிடப் படுகின்றன.

இவற்றுள் கருத்துச் சுதந்திரம் என்பது ஜன நாயக நாடுகளின் இன்றியமையாத தேவை யாகும். கருத்துச் சுதந்திரத்தின் உறுதிப்பாட் டுக்கு ஊடகங்களே கை கொடுப்பதாக உள்ளன. எனவே ஜனநாயக நாடுகளில் ஊட கங்களின் சுதந்திர செயற்பாட்டுக்கு இடம ளிப்பதன் லமாக அரசின் மீதான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதோடு ஜனநா யக ஆட்சிக்கும் வலுச்சேர்க்க டியும்.

 

Advertisements