ஜோசப் புலிட்சர்

Posted on April 10, 2014

0


பத்திரிக்கையாளருக்கு முன்னோடியாக இருந்து பத்திரிக்கை துறையில் புரட்சி செய்தவர் ஜோசப் புலிட்சர். எழுத்துத் துறைக்கு சொந்தமான புலிட்சர் விருதுக்கு சொந்தக்காரர். இவரின் பெயரிலேயே புலிட்சர் விருது ஒவ்வொரு வருடமும் தரப்படுகிறது. யார் இந்த ஜோசப் புலிட்சர்?

ஜோசப் புலிட்சர் ஹங்கேரி நாட்டில் இன்றைய தினம் (10.04) 1847-ல் பிறந்தவர். ஜெர்மன், ஃப்ரஞ்ச், ஹங்கேரியன் மற்றும் ஆங்கில மொழிகளிலும் வல்லவராக இருந்தார். அவருக்கு ராணுவத்தில் சேரவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார். ஆனால் அவரின் பலவீனமான உடல்நிலையாலும், கண்பார்வைக் குறைவினாலும் இவரால் ராணுவத்தில் சேரமுடியாமல் போனது. அதனால் அமெரிக்க உள்நாட்டுப்போரில் கலந்துக் கொள்வதற்காக 1864 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிற்க்குச் சென்றார்.

போருக்கு பின்னர் மிசூரியில் உள்ள சென் லூயிஸ் என்னுமிடத்தில் தங்கினார். இவரது வாழ்க்கையின் திருப்பு முனை, நூலக செஸ் விளையாட்டு அரங்கில் அவரைத் தேடி வந்தது. அங்கு பல பிரபல விளையாட்டு வீரர்கள், முன்னனி பத்திரிக்கை ஆசிரியர்கள் வருவார்கள். அவர்களின் விளையாட்டினை கூர்ந்து கவனித்து தினமும் அவர்களுடன் உரையாடுவது வழக்கம்.

அதனுடன் அவருக்கான வேலைவாய்ப்பும் அவரைத் தேடி வந்தது. ஜெர்மன் மொழி தினசரிப் பத்திரிக்கையான வேஸ்ட்லிச் போஸ்ட் (Westliche Post) என்னும் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்தார். தன் இளம் வயதில் நற்பெயரும் புத்திக்கூர்மையுமான சிறந்த நிருபராக வலம் வர ஆரம்பித்தார். அவர் குடியரசுக் கட்சியில் சேர்ந்து, 1869 இல் மிசூரி மாநில சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1872 இல், வெஸ்ட்லிச் போஸ்ட் பத்திரிகையை 3000 டாலருக்கு வாங்கினார். 1878 இல் சென் லூயிஸ் டிஸ்பச் (St. Louis Dispatch) என்னும் பத்திரிகையையும் 2700 டாலருக்கு வாங்கினார். இரண்டு பத்திரிகைகளையும் இணைத்து, சென் லூயிஸ் போஸ்ட் டிஸ்பச் (St. Louis Post-Dispatch) என்னும் பெயரில் தினப் பத்திரிகையாக நடத்தி வந்தார்.

பின் பின்னர் 1883ல் நியூயார்க் வோட்டு என்ற பத்திரிக்கையை ஜெ குவார்ட் என்பவரிடமிருந்து 3.46லட்ச டாலருக்கு வாங்கினார். இந்த பத்திரிக்கை வருடத்திற்கு நாற்பதாயிரம் டாலர் நஷ்டத்தில் இயங்கிவந்ததன் விற்பனையை அதிகப்படுதினார். அதற்காக விருவிருப்பான கதைகள், பரபரப்பான செய்திகள், கிசுகிசு, கார்டூன் விளையாட்டு செய்திகள், போட்டிகள் என புதுப் புது நுட்பங்களையினையும் கொண்டுவந்தார். இவரின் இந்த பத்திரிக்கைகள் இதழியல் துறைக்கு புது வடிவத்தினை தந்தது. நவீனத்துவ பத்திரிக்கையின் முன்னோடியாகவும் செயல்பட்டது. அதிக விற்பனையிலும் எல்லோரும் விரும்பி படிக்கும் விதமாகவும் இருந்தது. 1895ல் ஒவ்வொரு வாரமும் 600 டாலர் முதல் 150000 டாலர் என்ற அளவுக்கு விற்பனையானது பத்திரிக்கை.

கண்பார்வைக் குறைபாடால் 1890 பின் அவரால அரசியல் சார்ந்த பகுதியில் சிறப்பாக செயல்படமுடியாமல் போனது. பின் 1911ல் மறைந்தார். முன்பாக இரண்டு மில்லியன் டாலருக்கு கொலம்பியா பல்கழைக்கழகத்தில் இதழியலுக்காக துறையை இவரின் சொந்த செலவில் 1912ல் கட்டினார்.

இதழியல் துறையின் முக்கியத்துவத்தையும், பத்திரிக்கையாளன் எப்படி நெறிமுறைகளுடன் கற்றுத்தேற வேண்டும் என்பதற்காகவே இந்த படிப்பினையும் தொடங்கிவைத்தார். பின் ஆறு வருடங்கள் கழித்து கொலம்பியா பல்கலை., இதழியல், எழுத்துக்கலை, இசை, நாடகம், முதலிய துறையில் சாதிப்பவர்களுக்கு புலிட்சர் விருதினையும் வழங்கிவருகிறது.

“துல்லியம் துல்லியம் துல்லியம்” இதுவே இவரின் தாரக மந்திரம். இவரின் அலுவலக அறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் இது. “நான் விஞ்ஞானி அல்ல, செய்தியைச் சொல்லும் நிருபன். இந்த அறையிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை வளரும் நகரத்திற்கான மலிவானது ஆனால் பிரகாசமானது. பிரகாசமானது மட்டுமில்லாமல் இதன் சாம்ராஜ்யம் பெரியது.

இது உண்மையான ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு. இது போலி பித்தலாட்டங்களையும் தவறுகளையும் மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் எதிர்த்து நின்று போரிடும். இது மக்களின் சேவகனாகவும் அக்கறையுடனான நேர்மையுடன் செயல்படும். இதழியலில் துறையில் சாதிப்பதே எனது விருப்பம். அதற்காக என் வாழ்நாள் முழுவதையும் செலவிடுவேன். மிக உன்னதமான தொழில் இந்த பத்திரிக்கைத் துறை. ஈடு இணையற்ற இந்த பத்திரிக்கை மக்கள் மனதில் உண்மையுடனும் ஒழுக்கத்துடனும் தன் பணியை செயல்படுத்தும் என்பது உண்மை”. என்று சொன்னவரின் பிறந்த தினம் இன்று.

-பி.எஸ்.முத்து-

spl1

 

http://www.tamilcnnlk.com/archives/271295.html

Advertisements