பத்திரிகை வடிவமைப்பில் 10 கட்டளைகள்.

Posted on June 22, 2012

0


10 யோசனைகளும் உலக புகழ்பெற்ற பத்திரிகை வடிவமைப்பாளர் மரியோகார்ஸியா (Mario Garcia) அவர்களின் கருத்து.இவர் பிரபலமான பத்திரிகைள் பலவற்றை மீள்வடிவமைப்பு செய்துள்ளார்.

1) தலையங்களை ஒன்றுக்கு அருகில் மற்றையதை வைக்காதீர்கள்.இதனை துள்ளும் தலையங்கம் என்று சொல்வார்கள்.திறமையான தலையங்கம் எழுதுவது என்பதைக்காட்டிலும் ஒன்றுக்கு அருகில் தொடர்ந்து மற்றைய தலையங்கம் வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்’

2) வாசகர்கள் கறுப்பில் வெள்ளை எழுத்துக்கள்(reversed)விரும்புவதில்லை. இதனை வாசகர்கள் சிரமத்தின் மத்தியிலேயே வாசிக்கிண்றார்கள்.எப்படி இருந்தாலும் சிறியவரிகள் அல்லது மேற்கோள்கள் அவ்வாறு அமையலாம்.பின்வருகிண்ற சந்தர்ப்பத்தில்
1.வழமையை விட பெரிய எழுத்து
2.இரண்டு வரிகளுக்கு இடையிலான வெளி போதுமானதாக இருக்கம் சந்தர்பங்களில் அமையலாம்.

3) வர்ணம் பொதுவாக அறிமுகப்படுத்த வேண்டும்.வாழ்க்கை வர்ணமயமானது.பல வருடங்களாக கருப்பு வெள்ளையாக இருந்த பத்திரிகைகளுக்கு வர்ணத்தை அறிமுகப்படுத்தும் போது திடீரென அறிமுகப்படுத்தாது கொஞ்சம் கொஞ்சமாகவே செய்ய வேண்டும்.வர்ணம் பாவிக்கும்போது எதனை முன்னிலைப்படுத்த வேண்டுமோ அதற்து பொருத்தமான வர்ணத்தை பயன்படுத்த வேண்;டும்.மிகமுக்கியமாக குறித்த சமூகத்திற்கு பொருத்தமானவற்றை பாவிக்க வேண்டும்.

4) சரிந்த எழுத்துக்கள் வாசிப்பதற்கு கடினமானவை.சரிந்த எழுத்துக்கள் பெண்மைத்தன்மை கொண்டவையாக கருதப்படுகிண்றது.மேலும் வாசிக்கும் வேகததை குறைக்கிண்றது.

5) வர்ண மற்றும் கறுப்பு வெள்ளைப்படங்கள் மற்றும் அட்டவனைகள்,வரைவுகளை கலந்து பயன்படுத்த வேண்டாம்.வடிவமைப்பாளர் சாத்தியமான சிறந்த படங்களை தெரிவு செய்து,எதில் முதல் கண் சொல்ல வேண்டும்,எதில் இரண்டாவது மூன்றாவது என தீர்மானித்து வைக்க வேண்டும்.இனி கறுப்பு வெள்ளைப்படங்கள் என்று வரும் போது இது இரண்டாம் தரப்பிரச்சனை ஆகிவிடும்.படத்தில் என்ன விடயம் உள்ளது அது பக்கத்தில் எங்குவருகிண்றது குறித்த படம் பக்கம் முழுமைக்கும் என்ன பங்கு வகிக்கிண்றது எனப்பார்க்கப்படும்.

6) தொடர்ந்து வாசிப்பதை நிறுத்த வேண்டாம்.சஞ்சிகைகள் இடையில் மேற்கோள்களை போடுகின்றன,முன்னிலைப்படுத்தி காட்டுகின்றன.அவ்வாறான தடைகள் வாசிப்பதை நிறுத்தும் பொயின்ரர் கின்ஸ்ரியுட் செய்த ஆய்வுகளிலேயேஇது கண்டுபிடிக்கப்பட்டது.பத்திரிகைகளில் கண் எப்படி நகர்கின்றது என விஞ்ஞான பூர்வமாக செய்யப்பட்ட ஆய்வில் வாசிக்கும் போது இடையூறு ஏற்பட்டால்(2 ½இன்ச் இற்கு அதிகமான) கண் பாய்ந்து செல்கின்றது.

7) வாசகர்கள் எழுத்துக்கள் இறுக்கமாக அடுக்குவதை விரும்புவதில்லை.அவர்கள் – என்ற வகையிலே விரும்புகின்றனர்.பொதுவாக இறுக்கமாக தரளவகைனைசெய்திருந்தால் அது இறுக்கமான செய்தி என்றும்,மற்றையது மென்மையான சித்தரிப்பு என்றும் கருதப்படுகின்றது.ஆனால் இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.இடது பக்கம் இழுக்கப்பட்ட அமைப்பு பத்திரிகை பக்கத்திற்கு ஒரு ரிதம் ஒன்றை அளிக்கின்றது.மேலும் வெள்ளையான வெளிகளை உருவாக்குகின்றது.இதனால் வாசிப்பது விரைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

8) செய்திகளின் எண்ணிக்கை
பொதுவாக முன் பக்கத்தில் 12செய்தி,8செய்தி,5செய்தி வரவேண்டும் என சிலர் விதிகள் வைத்துள்ளார்கள்.ஆனால் அவ்வாறு இல்லை சில சந்தர்ப்பங்களில் பக்கத்தில் உள்ள ஒரு செய்தி அல்லது ஒரு படம் 10 செய்திகளின் தாக்கத்தை கொடுக்கலாம்.முதல் பக்கம் என்பது பத்திரிகையின் முகப்பு,அது அன்றைய தினத்தின் முக்கியமான விடயத்தை மட்டும் வெளியில் சொல்ல முடியாது பதிலாக உள்ளுக்குள் என்ன இருக்கின்றது என்று சொல்ல வேண்டும்.வாசகர் இலக்கு வைக்கப்பட்டவர்கள் அவர்கள் எத்தனை செய்திகள் என எண்ணமாட்டார்கள்.பத்திரிகையின் பக்கத்தில் கண் எவ்வாறு அசைகின்றது என்பதை எத்தனை செய்திகள் என்ற விடயம் தீர்மானிப்பது இல்லை.வேறு விடயங்களே தாக்கம் செலுத்துகின்றன.

9) ஒவ்வொரு நாளும் உரிய பொருட்களை உரிய இடத்திலேயே விடுங்கள் என்று எவரும் கேட்பதில்லை.ஆனால்ஆசிரியர் எப்போது ஒரே இடத்திலேயே விடுவார்கள்.ஆனால் ஒரு நாளைக்கு ஒரு இடத்தில் இன்னெரு நாள் இன்னொரு இடம் மற்றும் மேல் இருந்து கீழ் அல்லது இடமிருந்து வலம் என உபகோகிக்கலாம்.

10) பிரதான செய்தி எப்பொழுதும் பத்திரிகையின் வலது பக்கத்தில் வரவேண்டும்.இது அநேகமான ஆசிரியர்களுக்கு தெரியும் ஆனாலும் வாசகர்களுக்கு சொல்வதில் அக்கறை எடுப்பதில்லை.பெரிய எழுத்துக்களில் இடது பக்கமோ வலது பக்கமோ பிரசுரிக்கின்றார்கள்.செய்திகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தரவரிசை இருக்கவேண்டும்.பிருதான செய்தியில் இருந்து ஆரம்பித்து வாசகர்கள் வாசிக்க தொடங்குகின்றார்கள்.பிரதான செய்தி மடிப்பிற்கு மேல்பக்கத்தில் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இருந்தாலும் இவ்வாறு நம்பிக்கைகள் ஏன்? இவை இல்லாமல் வாசகர்கள் வாசிக்கமாட்டார்களா? இவற்றில் ஏதாவது ஒன்றை மாற்றி உங்கள் பிரதேசங்களில் செய்துபாருங்கள் சில வேளைகளில் நீங்கள் வெற்றி பெறலாம்.

Advertisements