தொழில்முறைத் தேர்ச்சிமிக்க தமிழ் ஊடகத்துறைக்கான அவாவல்

Posted on March 21, 2012

0


தொழில்முறைத் தேர்ச்சிமிக்க
தமிழ் ஊடகத்துறைக்கான அவாவல் 
கோ.றுசாங்கன் 

‘உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் மக்க ளுக்கு இனிக் கிடைக்காது||
‘யாழ்.குடாநாட்டை முற்றுகைக்குள்ளாக்கும் தென் னிலங்கை மக்கள்||
‘கூட்டமைப்பின் காலக்கெடு இன்றுடன் முடிந் தது! அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூடி ஆராய்வு||

இவை அண்மைக் காலத்தில் வெளிவந்த சில பத்திரிகைச் செய்திகளின் தலைப்புக்களாகும். இந்தத் தலைப்புக்களும், அவை சொல்லவரும் விடயங்களும் இன்றைய தமிழ் ஊடகங்களின் போக்குக்கான சில சுட்டிப்பான உதாரணங்களாக உள்ளன.
உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான முதலாவது தலைப்பு, கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் மாநாட்டில், அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது.
உயர்பாதுகாப்பு வலயங்களில் படிப்படியாக மக்கள் மீளக்குடியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் உறுதி மொழி வழங்கி, சில பகுதிகளில் மீள்குடியேற்றத்துக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு காலப்பகு தியில் இந்தச் செய்தி ‘இடி||போல் யாழ்.பத்திரிகையொன் றின் தலைப்புச் செய்தியாக வெளியாகியிருந்தது.
இந்தச் செய்தியில் இருக்கக்கூடிய ஊடகவியல் சார்ந்த அடிப்படைச் சிக்கல்கள் அல்லது தவறுகளை சாதாரண வாசகர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. எனவே, அப் போதைக்கு இதை உண்மை என்று கருதி, அரசாங்கம் மக்களை உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற் றாது என்ற எதிர்க்கட்சிகளின் அரசியல் கோஷங்களை நம்புமாறு செய்யப்பட்டார்கள் (ஒரு வகையில் அந்த நோக்கத்துக்காகவே இந்தச் செய்தி இப்படி எழுதப்பட்ட தாகவும் கொள்ள இடமுண்டு).

சரி, இந்தச் செய்தியிலுள்ள ஊடக விதிமுறை சார்ந்த பிரச்சினை என்னவென்று பார்ப்போம்.

1.கிளிநொச்சியில் குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக எதுவுமே ஆராயப்படவில்லை என்பதுடன், அதுகுறித்த எந்த முடி வும் எடுக்கப்படவுமில்லை. இதை தமிழ் அமைச்சரொருவர் அந்தச் சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தியுமிருந்தார். இது, அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக் கான அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரின் அப்போதைய பதிலேயன்றி, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வமாக ஒரு தீர்மானமல்ல.

2.உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான விவகாரம் பாதுகாப்பு அமைச்சுடன் சம்பந்தப்பட்டது. அதுகுறித்த முடிவெடுக்கும் அதிகாரம், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கோ அன்றி அமைச்சின் செயலா ளர் மற்றும் அமைச்சு சார்ந்த அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதுபற்றிய முடிவுகளை எடுக்கவோ, அறிவிக்கவோ அதிகாரமுடைய வரல்ல. ஆக, அவருடைய கூற்றை அதிகாரபூர்வமான கருத்தாகக் கொள்ள முடியாது.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படாத, அதே வேளை, அமைச்சரவைப் பேச்சாளாரால் தெரிவிக்கப்பட்டி ருக்கக்கூடிய இந்த விடயத்தைச் செய்தியாக்குவது என்று தீர்மானித்தால், குறைந்தபட்சம், உயர்பாதுகாப்பு வலயம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பொறுப்பான உத்தியோக பூர்வ அமைச்சிடம் மேற்படி அமைச்சரின் கூற்றுப்பற்றி விசாரித்து சரிபார்த்து செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும்.
அதிகாரபூர்வ மூலங்கள் எந்த ஒரு விடயம் தொடர்பான தகவல்களைப் பெறுவ தற்கும், அவற்றைச் சரிபார்ப்பதற்கும், குறிப்பிட்ட விடயம் தொடர்பாகப் பேசுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஒரு தரப் பையே நாடவேண்டும் என்பது ஊடக விதிமுறை. செய்தி மூலம் என்று இதனை ஊடக விதிமுறைகளில் குறிப்பிடு வார்கள். அதுவும், ஒரு செய்திக்கு குறைந்தபட்சம் இரண்டு மூலங்கள் பாவிக்கப்படவேண்டும் என்பதும் அடுத்த விதிமுறை. இதன்மூலமே சரியான-துல்லியமான தகவல் களை வாசகர்களுக்கு வழங்க முடியும் என்பதே அந்த விதிமுறையின் அடிப்படை. வீதி அகலிப்புப் பணிகள் தொடர்பாக சுகாதார அமைச் சரோ, டெங்கு நோய் ஒழிப்புத் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரோ தெரிவிக்கும் கருத்துக்களை குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளா கக் கருதி செய்தி வெளியிடுவோமாகவிருந்தால், மக்கள் வீண் குழப்பங்களுக்கே உள்ளாவார்கள்.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ‘உயர் பாது காப்பு வலயக் காணிகள் மக்களுக்குக் கிடைக்காது|| என்ற மேற்படி செய்தி வெளியாகிய ஓரிரு வாரங்களுக் குள்ளேயே, யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த கடற்கரை வீதி மக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டது. அந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, விரைவில் வடமராட்சி கிழக்கிலுள்ள உயர் பாது காப்பு வலயங்களில் மக்கள் மீள்குடியேற்றப்படுவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். தொடர்ந்து வந்த காலப்பகு திகளில் வடமராட்சி கிழக்கு, வலிகாமம் வடக்கு பிரதேசங் களில்; மீள்குடியேற்றங்கள் நடைபெற்றன. இவ்வாறு, கெஹலிய றம்புக்வெலவின் கூற்றைப் பொய்யாக்கிய மேற்படி நிகழ்வுகள் தொடர்பான செய்திகளையும் அதே பத்திரிகையே பின்னர் முன்பக்கச் செய்திகளாக வெளி யிட்டிருந்தது.

மக்களுக்கு இருக்கக்கூடிய குறுகிய கால ஞாபகசக்தி (ளூழசவ வுநசஅ ஆநஅழசல) காரணமாக, ஒரே பத்திரிகையில் வெளியாகியிருக்கக்கூடிய மேற்படி செய்திகளிடையேயான முரண்பாடுகளை அவர்கள் கண்டுகொண்டிருக்க நியா யமில்லை. அப்போதைக்கப்போது வெளியாகும் செய்தி களை அவ்வப்போதே பார்த்துவிட்டுப் போக அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.

சொற்பதங்கள்
தென்னிலங்கையிலிருந்து அதிகளவில் யாழ்ப்பாணத் துக்கு மக்கள் வந்துபோவது தொடர்பான ஒரு செய்தி, ஏதோ யாழ்ப்பாணத்தின் மீது அந்நியர்கள் போர்ப்படை கொண்டு வருகிறார்கள் என்ற தொனிப்பட செய்தியாக்கப் பட்டுள்ளதை மேலே நாம் கண்ட இரண்டாவது தலைப்புக் காட்டுகிறது. போரியல் விஞ்ஞானப் பதமான ‘முற்றுகை’ என்ற சொல், இங்கு சாதாரண ஒரு பொது விவகாரம் தொடர்பான செய்தி வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டி ருக்கிறது. துல்லியமான செய்தி வெளிப்பாட்டுக்கு, பொருத் தமான சொற்பதங்களும் மிக அவசியமானது. தமிழ் ஊடக வியல் எவ்வளவு தூரம் இன்னமும் போர்க்கால மனோ பாவத்திலிருந்து விடுபடாமல் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்ட இந்தச் சொற்பதக் கோளாறு காட்டுகிறது.

அதுபோன்றே, ‘அரசாங்கத்துடனான பேச்சுவார்த் தைக்கு நாம் நிபந்தனைகளையோ, காலக்கெடுக்களையோ விதிக்கவில்லை. குறிப்பிட்ட சில விவகாரங்கள் தொடர்பாக அடுத்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் தெளிவுபடுத்துமாறே கோரியிருந்தோம்|| என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும் மீறி, ‘காலக்கெடு முடிந்தது, பேச்சுவார்த்தை முறிந்தது|| என்ற தொனிப்பட செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இன்னுமொரு பத்திரி கையில் தம்மை ஒரு அரசியல் ஆய்வாளராகக் காட்டிக் கொள்ளும் நபரொருவர் அரசாங்கத்துக்கும், கூட்டமைப்புக் கும் இடையிலான பேச்சுவார்த்தை ‘முறி||ந்துபோனமைக் கான காரணங்கள் என்ன? என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையையே வெளியிட்டிருந்தார்.

அரசியல் நோய்
தமிழ்ச் சமூகத்தைப் பீடித்துள்ள எதிர்ப்பரசியல் என்ற நோய் ஊடகவியலுக்குள்ளும் எவ்வளவு ஆழமாகப் பரவிவிட்டிருக்கிறது என்பதையே மேற்கண்டவாறான செய்தி வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன. இப்படி இன் னும் ஏராளமான உதாரணங்களைப் பட்டியலிட முடியும்.

தமிழ் ஊடகவியல் என்பது, குறிப்பாக, பிராந்திய பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ் அரசியல் எழுச்சியோடு இணைந்தே சமாந்தரமாக ஏற்பட்டிருந்தது. இதனால், தமிழ் மக்களுடைய உரிமைக்காகக் குரல் கொடுத்தல் அல்லது தமிழ் மக்கள் சார்ந்த கட்சிகள் சார் பாகக் குரல் கொடுத்தல் என்பதையே இந்தப் பத்திரிகைகள் தமது பிரதான கடமையாக ஆரம்ப காலங்களில் வரித்துக் கொண்டிருந்தன. மக்களுக்குச் சரியான தகவல்களை வழங்குதல் என்ற அடிப்படை ஊடகவியல் செயற்பாட்டுக் கும், கருத்துக்களை பரப்புரை செய்தல் என்ற பிரசார ஊடகச் செயற்பாட்டுக்குமிடையிலான வேறுபாட்டை இந்தப் பத்திரிகைகள் அப்போது சரியாகப் புரிந்துகொண்டிருக்க வில்லை(இப்போதும் இந்தக் குழப்பம் நீடிக்கவே செய்கிறது).

தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்து வெளியான ஈழ கேசரி, இந்தப் போக்கிலிருந்து சற்று விடுபட்டு சமூகப் பொறுப்புணர்வுடன் ஒரு பத்திரிகை செயற்படவேண்டிய தன் அவசியத்தையும், தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, பொது நோக்கோடு ஒரு ஊடகவியலாளர் செயற்படவேண்டும் என்ற கோட்பாட்டையும் அதன் ஆரம்பத்திலேயே தெளி வாக வலியுறுத்தி வெளியாகியிருந்தது. எனினும், இந்தப் போக்கு ஏனைய பத்திரிகைகளுக்குள் பரவி வளரவில்லை.

தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ ஏடான சுதந்தி ரன் பத்திரிகையின் தாக்கமே ஆரம்பகாலத்தில் வெளி யான பல தமிழ்ப் பத்திரிகைகளிலும் தென்பட்டன. தமிழர சுக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்ட காலத்தோடு ஒட்டி எழுச்சியடைந்த பிராந்திய தமிழ்ப் பத்திரிகை கலா சாரம், பெரும்பாலும் தமிழ் அரசியல் போராட்டங்கள், அதுகுறித்த செய்திகளுக்கு முதன்மை கொடுப்பதே ஊடகவியல் என்ற கருத்தியலை ஆரம்பம் முதலே வளர்த் தெடுத்துவிட்டிருந்தது. இந்த ஊடகக் கலாசாரம் பின்னர் யாழ்ப்பாணத்திலே தோன்றிய அனேகமாக எல்லாப் பிராந் திய பத்திரிகைகளையும் தொற்றிக்கொண்டது.

கொழும்பிலிருந்து வெளியான தேசியப் பத்திரிகைக ளும் பின்னர் தமது விற்பனை நோக்கம் கருதி தவிர்க்க முடியாதபடி இந்தப் போக்கைப் பின்பற்ற நிர்ப்பந்திக்கப் பட்டன. முன்னணி தேசிய நாளேடு ஒன்றிலிருந்து ஒரு பத்திரிகையாளர் குழுவே வெளியேறி தனித்து ஒரு பத்திரிகையை வெளியிடத் துணிந்தமைக்குப் பின்னாலும், இத்தகைய ஒரு ஊடகக் கலாசாரத்தை நோக்கிய அவாவே பிரதான காரணமாக இருந்தது எனலாம். பின்னர், மேற்படி முன்னணித் தேசியப் பத்திரிகையும் தவிர்க்க முடியாதபடி அதே போக்கையே பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது.

அபிப்பிராயங்களே செய்திகளாக…
இவ்வாறு, தமிழ் அரசியலும், ஊடகவியலும் ஒன்றுட னொன்று பின்னிப் பிணைந்த நிலையில், அடிப்படை ஊடக விதிமுறைகள் பற்றிய தெளிவோ, அவற்றைப் பின்பற்றவேண்டும் என்ற பொறுப்புணர்வோ தமிழ்ப் பத்திரிகையுலகில் போதியளவுக்கு வளரவில்லை. மக்க ளுக்கு தகவல்களை அறியத்தருதல் என்ற அடிப்படை ஊடகச் செயற்பாட்டில், தகவல்கள் அச்சொட்டானவையாக (குயஉவள) இருக்கவேண்டும் என்பதை தமிழ் ஊடகவியல் புரிந்துகொண்டிருந்ததாகத் தெரியவில்லை. குயஉவள ஐக் கொடுப்பதைவிட, தமது அபிப்பிராயங்களை, சொந்தக் கருத்துக்களை (ழுpinழைn) முன்னிறுத்துவதாகவே பல செய்திகள் அமைந்தன, இன்றும் அமைந்து வருகின்றன.
மக்களுடைய அன்றாடத் தேவைகள் முதற்கொண்டு, அவசியமான பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் தக வல்களை வழங்கும் பணியையே ஊடகங்கள் மேற் கொண்டு வருகின்றன. இந்தத் தகவல்களை அடிப்படையா கக் கொண்டே மக்கள் தமது அன்றாட வாழ்வு முதற் கொண்டு, எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகளையும் எடுக்கின்றனர். இவற்றுடன், மக்கள் மத்தியில் ஒரு கருத்து ருவாக்கம் செய்யும் பணியையும் ஊடகங்கள் செய்கின்றன.

ஆனால், இந்தக் கருத்துருவாக்கத்துக்கு அவசியமான, சாத்தியமான அனைத்துத் தகவல்களையும் வழங்குவ துடன் ஊடகங்கள் ஒதுங்கிக்கொண்டு, முடிவுகளை மக்கள் தாமாகவே எடுக்க இடமளிக்கவேண்டும். அவ்வாறன்றி, தமது அல்லது தாம் சார்ந்தவர்களது கருத்துக்களையே செய்திகளாக வெளியிட்டு, தாம் அல்லது தமக்குப் பிடித்த தரப்புக்கள் விரும்பும் முடிவுகளை எடுக்குமாறு மக்களைத் தூண்டும் அல்லது நிர்ப்பந்திக்கும் காரியத்தைச் செய்யும் உரிமை ஊடகங்களுக்குக் கிடையாது. ஆனால், நமது ஊடகங்கள் பலவும் இதையே செய்து முடித்தன.

இந்த ஊடக நெறிமுறைப் பிறழ்வின் விளைவுகள் குறித்தோ, இது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தோ ஊடகத்துறை சார்ந்தோர் சிந்தித்ததாகத் தெரிய வில்லை. ஆனால், இந்த ஊடகங்கள் மூலம் தகவல்க ளைப் பெற்று அதன்மூலம் தீர்மானங்களை மேற்கொண்ட மக்கள் அவற்றின் விளைவுகளுக்கு இரத்ததாலும், சதை யாலும் விலைகொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதை இறுதிப் போர்க்காலத்தில் நாம் நிதர்சனமாகக் கண்டுகொண்டோம்.

துறைசார் பயிற்சியும், தொழில்முறைத் தேர்ச்சியும்
தமிழ் அரசியல் எழுச்சியோடு சமாந்தரமாக வளர்ந்து விட்ட இந்த ஊடகப் போக்கு தொடர்ந்து மாற்றமடையா மலே இருந்து வந்தமைக்கு, பத்திரிகையாளர்கள், ஊடக வியலாளர்கள் போதிய துறைசார் பயிற்சியைப் பெற்று தொழில்முறைத் தேர்ச்சியைப் பெறாமையும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

தமிழ் ஊடகவியலைத் தொற்றிக்கொண்ட இந்த அரசியல் ஆர்வ நோய் காரணமாக, பொதுவான அரசி யல் ஆர்வம், தேசியப் பற்றுக் கொண்ட எவருமே பத்திரி கையாளராகலாம் என்ற நிலை உருவானது. ஆர்வமே பத்திரிகைத்துறை நுழைவுக்கு அடிப்படை என்றாலும், இவ்வாறு நுழைவோரைப் பயிற்றுவித்து, ஊடகத் தொழில்முறைத் தேர்ச்சி மிக்கவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அக்கறையை பத்திரிகை நிறுவனங்க ளும் கொண்டிருக்கவில்லை. விற்பனை விரிவாக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டிய பத்திரிகை உரிமையாளர்கள், பத்திரிகையாளர்களின் தொழில்முறைத் தேர்ச்சியே தமது விநியோக அல்லது விற்பனை விருத்திக்கும் அவசியமா னது என்பதைப் புரிந்துகொண்டாரில்லை. இதன் விளை வாக, தமிழ்ப் பத்திரிகைத்துறையின் தொழில்முறைத் தேர்ச்சியீனம் தொடர்ந்து வளர்ந்துசெல்லவே செய்தது.

மொழியறிவு
ஆரம்ப காலங்களில் தமிழ்த்துறைத் தேர்ச்சி பெற்ற வர்கள், இலக்கியவாதிகள் போன்றோரே பத்திரிகைத் துறையில் அதிகம் நுழைந்தார்கள். தமிழில் நன்றாக எழுதத் தெரிந்திருத்தலே ஊடகவியலுக்கு அடிப்படையான ஒரு தகுதியாக அப்போது கருதப்பட்டது. ஊடகவியல் ஒரு விஞ்ஞானமாக வளர்ச்சி கண்டிராத காலப்பகுதியில் வளர்ந்த பத்திரிகைகளைப் பொருத்தவரையில் இது தவிர்க்க முடியாத ஒரு நிலைமையாகவும் காணப்பட்டது. எனினும், இத்தகையவர்களின் தமிழ் அறிவுத் தேர்ச்சி அன்றைய ஊடகவியலின் பலமாகவும் இருந்தது.

ஆனால், பிற்பட்ட காலங்களில் ஊடகவியலுக்குள் நுழைந்த இளம் சந்ததியினரிடம் இந்தத் தமிழ் அறிவுத் தேர்ச்சியும் போதியளவு இருக்கவில்லை. இதனால், மிக மோசமான, இலக்கணப் பிழைகளுடன் கூடிய செய்தி களை அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் பார்க்க முடிகிறது.

பண்டிதத் தமிழை, சாதாரணத் தமிழாக, எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய தமிழாக மாற்றியமைத்த பெருமை யைத் தனதாக்கிக்கொண்ட தமிழ்ப் பத்திரிகைத்துறை, இப்போது இலக்கணப் பிழைகள் நிறைந்த தமிழை பரவலாக்கும் காரியத்தை நிறைவேற்றி வருவது வேதனை யானது. சாதாரண எழுவாய்-பயனிலை, ஒருமை-பன்மை, உயர்திணை-அஃறிணை உள்ளிட்ட அடிப்படை இலக் கணத்திலேயே தவறுகள் அதிகம் நேர்கிறது.

தொழில்நுட்பத் தேர்ச்சி
பத்திரிகைத்துறையை தொழில்நுட்பம் அதிகம் ஆட் கொண்டுவிட்ட இன்றைய காலகட்டத்தில், எல்லாமே கணினிமயப்பட்டுவிட்டது. இதனால், அச்சுத்துறையில் எழுத்துக்கோர்ப்பின் இடத்தை கணினி தட்டச்சு பிடித்து விட்டது. ஆனால், தமிழ் தட்டச்சு செய்பவர்கள் முன்னைய காலத்து அச்சுக் கோப்பாளர்கள் போன்று போதிய தமிழ றிவு கொண்டவர்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் இளம் சந்ததியினரான இவர்களுக்கு தட்டச்சுத் தொழில் நுட்பம் தெரிந்திருக்கும் அளவுக்கு தமிழ் அறிவு இருப்ப தில்லை. இது, மொழித் தவறுகளுக்கு மேலும் வழி சமைத்துவிட்டது.

கணினி தட்டச்சாளர்களை மாத்திரம் இந்த விடயத்தில் குற்றம் சொல்லியும் பயனில்லை. பத்திரிகைத்துறைக்குள் கணினிப் பயன்பாடு நுழைந்து சில தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையிலும், இன்னமும் கணினித் தட்டச்சைக் கற்றுக்கொள்ளாத, இணைய, மின்னஞ்சல் பாவனையில் தேர்ச்சியற்றிருக்கும் பத்திரிகையாளர்களே அதிகமுள்ளனர். இவர்கள், கணினி தொழில்நுட்பத் தேர்ச்சியைப் பெற்றி ருந்தால் தமிழ்ப் பத்திரிகைத்துறையின் வளர்ச்சி இன்னும் பலம்பெற்றிருக்கும்.

குறை ஊதியம்
பத்திரிகையாளர்கள் இவ்வாறு தொழில்முறைத் தேர்ச்சி யற்றிருப்பதற்கு அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப் படாமை மட்டுமன்றி, பத்திரிகைத்துறை சார்ந்தவர்களின் குறை ஊதியமும் முக்கிய பங்கு வகிக்கிறது. பத்திரிகை யாளர்களுக்கு வழங்கப்படும் குறை ஊதியம் காரணமாக, இந்தத் துறையில் ஈடுபடுவதற்கு திறமைசாலிகள் யாரும் முன்வருவதில்லை. திறமையுள்ள பலரும் அதிக ஊதியம் கிடைக்கக்கூடிய பிற துறைகளை நாடிச் சென்றுவிட, போதிய அறிவும் தேர்ச்சியும் மிக்கவர்கள் இந்தத் துறைக் குள் இல்லாத வறுமை நிலை ஏற்படுகிறது.

குறைந்தளவு சனத்தொகையினரான தமிழர்களுக்கு விற்கப்படும் பத்திரிகை என்பதால், ஏனைய மொழிப் பத்திரிகைகள் அளவுக்கு இலாபம் கிடைப்பதில்லை என்ற நொண்டிச் சாட்டு இந்த விடயத்தில் தமிழ் பத்திரிகை நிறுவன உரிமையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறான குறைந்தளவு பிரதிகள் வெளியா கும் இந்தப் பத்திரிகைகளை அச்சிடுவதற்கான நவீன அச்சியந்திரக் கொள்வனவு, புதிய தொழில்நுட்ப சாதனப் பயன்பாடு போன்ற விடயங்களில் முதலிடுவதற்கு இவர் கள் தயங்குவதில்லை.

இன்னும், பத்திரிகை நிறுவனங்களின் விநியோக, விளம்பர, நிர்வாகத்துறையினரின் ஊதியம், பத்திரிகைக ளின் பிரதான முதுகெலும்பாக இருக்கும் பத்திரிகையாய ளர்களின் ஊதியத்தைவிட அதிகமாகவே இருக்கிறது.

தினமுரசு என்ன செய்யும்?
இத்தகைய ஒரு பொதுவான தமிழ்ப் பத்திரிகைத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிகளவு பிராந்தியப் பத்திரிகைகளைக் கொண்ட யாழ்.மாவட்டத்திலிருந்து, 2010 ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட தினமுரசு பத்திரிகை யின் நிலையை மதிப்பீடு செய்யவேண்டியிருக்கிறது. தமிழ் பத்திரிகைத்துறையில், குறிப்பாக பிராந்தியப் பத்திரிகைக் கலாசாரத்தில் காணப்படும் மேற்படி போதா மைகள், குறைபாடுகள், வறுமை நிலைகளுக்கு மத்தியில் புதிதாகத் தோற்றம்பெற்ற தினமுரசு செய்யப்போவது என்ன?
இட்டு நிரப்பப்படவேண்டிய இந்த வெளிகளை அது நிரப்புமா?

ஊடகவியலுக்கும், பிரசாரத்துக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை அதன் ஆரம்ப காலம் முதற் கொண்டே சரியாகப் புரிந்துகொள்ளாமல் செயற்பட்டுவரும் தமிழ் பத்திரிகைக் கலாசாரத்தின் மத்தியில், ஒரு அரசியல் கட்சியினால் நடத்தப்படும் தினமுரசு எவ்வாறானதொரு நிலையை எடுக்கப்போகிறது?
பணம் கொடுத்து வாங்கிப் படிக்கும் பொதுமக்க ளுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை உணராத தமிழ்ப் பத்திரிகைக் கலாசாரத்தின் போக்கில் தினமுரசு மாற்றத்தைக் காட்டுமா?

பொதுவான பத்திரிகைகளெல்லாம் அரசியல் வேடம் தரித்துத் தடுமாறும் நிலையில், அரசியல் கட்சி ஒன்றினால் நடத்தப்படும் தினமுரசு சரியான ஊடகவியல் நெறிமுறைக் குள் தன்னை நிலை நிறுத்துவதில் வெற்றிபெறுமா?
எல்லாவற்றுக்கும் மேலாக, பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி, தொழில்முறைத் தேர்ச்சி, நியாயமான ஊதியம் போன்ற விடயங்களில் தினமுரசு என்ன கவனத்தைச் செலுத்தப்போகிறது?

ஒரு வருட காலப்பகுதிக்குள் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுகொண்டுவிடுவது சாத்தியமாகாது என்றாலும், இனிவரும் காலங்களில் தினமுரசு எதிர்கொள்ளப்போகும், பதிலளிக்கவேண்டிய பிரதான கேள்விகள் இவைதான்.
இந்தக் கேள்விகளுக்கான குறைந்தபட்ச சாதகமான பதில்களை, அதன் இரண்டாவது ஆண்டு பூர்த்திக்குள் தினமுரசு வழங்கினாலே அது பெரிய சாதனைதான்.
ஒரு தொழில்முறைத் தேர்ச்சி மிக்க தமிழ் ஊடகவிய லுக்கான அவாவலுடன், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

Advertisements