இன்றைய சமூக, தொழில்நுட்ப சூழ்நிலையில் தமிழ்மொழிப் பயன்பாடு

Posted on November 24, 2011

0


இன்றைய சமூக, தொழில்நுட்ப சூழலில் சில குழுக்களுக்கு இடையில் தமிழ்மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பது அநேகமான வர்களுக்கு வெளிப்படையாக தெரியவருவதில்லை. பத்திரிகையில், புத்தகங்களில் அதனை வாசித்து அறிய அல்லது வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் கேட்டு அறியவே பொரும்பாலானவர்களுக்கு முடிகின்றது.

அதே வேளை இணையத்தை (கணினி, தொலைபேசி..) இயக்கத் தெரிந்தவர்களுக்கு இணையத்தில் எவ்வாறு  பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது. இந்த எண்ணிக்கை என்பது தொழில்நுட்ப அறிவு மற்றும் வசதிகளைப் பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது.

இன்றைய பொருளாதார சூழலில் மக்கள் தங்களுக்கு பிடித்த அல்லது வசதியான ஒரு சில ஊடகத்தில் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரே குடும்பத்தில் உள்ள வயது முதிந்தவர்கள் ஒரு ஊடகத்தையும், இளைஞர் யுவதிகள் இன்னொரு வகையான ஊடகத்தையும், சிறுவர்கள்  தங்களுக்காக இன்னொரு ஊடகத்தையும் தெரிவுசெய்து கொள்கின்றனர்.

தமிழ்மொழி மூலப் பாடசாலையில் மொழி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பரீட்சைக்கு என்ற வகையில் அனேக சந்தர்பங்களில் பயன் படுத்தப்படுகின்றது. கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான தேவைகளை ஆங்கில மொழியில் ஆற்றல் உள்ளவர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்தாமலே நிறைவேற்றிக்கொள்கின்றனர். மேலே கூறப்பட்டவை தமிழ்மொழியை இன்றைய நிலையில் பொதுமக்கள் எவ்வாறு  பயன் படுத்துகின்றனர் என்பது பற்றி மேலோட்டமான பார்வையாகும். ஆனாலும் மொழி பற்றிய அக்கறையுள்ளவர்கள் சமூகத்தில், மக்களின் சகல மட்டங்களிலும் மொழி எவ்வாறு பயன் படுத்தப்படுகின்றது என்பதை அறிந்து கொள் வது முக்கியமாகும். அதுமட்டுமல்லாமல் புதிதாக உருவாகும் சவால்களை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றியும் சிந்திக்கவேண்டும்.

தொலைபேசிகளில் தமிழ்மொழி…

தொலைபேசிகளில் குறுஞ்செய்திகள் அனுப்பு வதற்கு ஆங்கில மொழிப் புலமை இல்லாதவர் கள் தமிழ் உச்சரிப்பினை ஆங்கில எழுத்துக்க ளைக் கொண்டு வெளிப்படுத்துகின்றனர். இதனை புரிந்து கொள்வதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் செய்தி அனுப்புகின்றவர்கள் முக்கியமானவர்களாக இருந்தால், தகவலைப் பெறுபவர்கள் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியி லும் இதனை விளங்கி குறிப்பிட்ட செய்திக்கான பதிலையும் அனுப்பி வைத்துக்கொள்வார்கள்.
அதேவேளை  தமிழ்மொழி செய்திச் சேவை களால் எவ்வாறு தொலைபேசி ஊடாக செய்தி கள் குறுந்தகவலாக வழங்கப்படுகின்றது என் பதை சில உதாரணங்களில் காணலாம்…
kuttraviyal sattamoola thiruththam thodarbil muranpaadu. Naadaalumantra amarvai aria mani neram pirathi sabaanaayagar oththi vaiththaar – sooriyan news

குற்றவியல் சட்டமூலம் திருத்தம் தொடர்பில் முரண் பாடு. நாடாளுமன்ற அமர்வை  அரை மணி நேரம் பிரதி சபாநாயகர் ஒத்திவைத்தார் – சூரியன் செய்திகள்

Sri Lanka vs Australia 3vadhu test cricket poatti. SSC maidhaanam. Toss’il srilanka ani vettri. Kalaththaduppu theermaanam – sooriyan news

ஸ்ரீலங்கா வேஸஸ் அவுஸ்ரேலியா 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. எஸ்.எஸ்.சி மைதா னம். டொஸ் இல் இலங்கை அணி வெற்றி. களத்தத்தடுப்பு தீர்மானம். – சூரியன் செய்திகள்

இவ்வாறான செய்திகள் தமிழில் ஆர்வமுள்ள வர்களுக்கு அனுப்பப்படுவதில்லை. பதிலாக அரசியல், விளையாட்டு, வியாபாரம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கே இச்செய்திக் அனுப்பப்படுகின்றன. இங்கு மொழித்தூய்மை, இலக்கணம் போன்ற விடயங்கள் கவனிக்கப்படுவதில்லை. தேவைகளை நிறைவேற்றுதல் என்பது மட்டுமே இலக்காகும். குறிப்பிட்ட நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு மொழியை தூய்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதனை செய்வதற்குரிய தொழில் நுட்பத்தைப் பெறவேண்டிய மூலதனம், பெரியளவில் மூதலீடு செய்வதால் வருகின்ற வருமானம் குறைவு போன்ற காரணங்களால் நிறைவேறாது போகின்றது.

தொடர்பாடல் தொழில்நுட்பம் தமிழர்களுக்கு அல்லது தமிழ் மொழிக்கு சொந்தமானதாக இல் லாத காரணத்தால் தொடர்பாடல் துறையில் ஏற்படுகின்ற மாற்றங்களும் வளர்ச்சிகளும் தமிழ் மொழிப் பயன்பாட்டடில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சமூக வலைத்தளங்கள் மற்றும்   இணையத்தில் தமிழ்மொழி…

இணையத்தைப் பயன்படுத்தும் தமிழர்கள் அதிக மான சந்தர்ப்பங்களில் ஆங்கில மொழிப்புலமை யானவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்களில் சிலருக்கே தமிழ் மொழியைப் பயன்படுத்த தெரிந்திருக்கின்றது அல்லது  தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்கின்றது.

நன்கு தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்த வர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை என்பது குறைவாக இருக்கின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த இரண்டு வகையின ரும் சமூக வலைத்தளங்களில் சந்திக்கும் போது எவ்வாhறான கருத்துப் பரிமாறல்கள் இடம் பெறுகின்றது என்பதை மேலே காணலாம். 

பல்வேறு சூழ்நிலைகளில் தமிழ்மொழி அதன் அடிப்படைத் தன்மைகளை (ஒலி, வரி வடிவம்) இழந்தும், திரிபுபட்டும்; பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பது மொழி மீது பற்றுக்கொண்ட வர்களுக்கு ஒரு சவாலான விடயமாகும். அதே வேளை, தமிழ்மொழி மூலம் படைப்பிலக்கியம், மற்றும் செய்திகள் சொல்பவர்களுக்கு இன்றைய நவீன தொழில்நுட்பம் வரையறையற்ற வசதிகளை வழங் கியுள்ளது. உதாரணமாக வலைப்பூக்கள் எனப்படுகின்ற (blogs) இலவச இணையப்பக்கங்கள்.

பத்திரிகை போன்ற அச்சு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனி யல் ஊடகங்கள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படுகின்ற ஆக்கங்கள் இட வசதிகள், ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற நேர ஒதுக்கீடு, சேமித்து வைத்தல், தேவையானபோது மீளப்பாவித்தல் போன்ற விடயங்களில் குறைபாடுகள் காணப்படு கின்றன. ஆனால் மேற்கூறப்பட்ட குறைபாடுகள் புதிய ஊடகம் என அறியப்படும் இணையப்பரப்பில் இல்லை. அது மட்டுமல்லாமல் நாடுகளின் எல்லலைகள் கடந்து உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கின்ற தமிழ் வாசகர்களை தேடிச் செல்கின்றது. இந்த வாய்ப்பை தமிழ்ப் படைப்பாளிகள் நன்கு பயன்படுத்துவதை இன்று அவதானிக்கலாம்.

சில சில குறைபாடுகள் அல்லது கட்டுப்படுத்த முடியாத நிலை நவீன தொழில்நுட்பத்தில் காணப்பட்டாலும் இதனை தமிழ்மொழி ஆர்வலர்கள் மொழியை வளப்படுத்த பயன்படுத்த புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisements