தொடர்பாடலில் கேட்டல் கிரகித்தல்

Posted on December 30, 2010

0


தொடர்பாடலில் ஐம்புலன்களில் முக்கிய செயற்பாடாக கருத்துக்களை பரிமாறுதல் என்ற செயற்பாட்டினை வெற்றிகரமாக செய்தற்கு நபர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்.
கேட்டல் மற்றும் கேட்கும் போது விடயத்தினை தர்க்க ரீதியாக அணுகுதல் கேட்பதற்கும், கிரகிப்பதற்கும் உள்ள வேறுபாடு?
வெற்றிகரமான கிரகித்தலுக்கு தடையாக இருப்பது?
தேவைக்காக கிரகித்தல்?
கிரக்கிக்கும் போது, உரையாடுபவரைப் பற்றிய புரிதலடன் உரையாடுவது?
உரையாடலைக் கிரக்கிக்கும் போது அவ் உரையாடலின் மெய்த்தன்மையை ஆராய்ந்து உரையாடுவது ?
வெற்றிகரமான கிரகித்தல்?

கேட்டல் – கிரகித்தல் ஐம்புலன்களில் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று குறைவானதல்ல. அவை தங்கள் தங்களின் தொழிற்படுதலில் தனித்துவமாவை. திருவள்ளுவர் அச்சு வழி தொடர்பாடல் இல்லாத காலத்தில் தொடர்பாடலுக்கு அதாவது கருத்தைப் பரிமாறுவதற்கு இருந்த ஒரே ஒரு வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்த ஊடகம் எனில் மொழி. மொழியை உரிய முறையில் உபயோகிப்பதற்கு செவியே பிரதானமான உள்வாங்கும் சாதனம்.

இந்த நிலையில் கேட்டல் என்ற செயற்பாடு விளங்கி திருவள்ளுவர் பல குறள்களை எழுதியுள்ளார். செவி எந்த வேளையிலும் திறந்த நிலையிலேயே இருக்கின்றது. நாங்கள் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும் செவியில் ஒலி அலைகள் பாடும்போது செவிப்பறை அதிர்ந்து கொண்டே இருக்கும். இதனை நாங்கள் கேட்டல் தொழிற்பாடு என்று சொல்லாம்.

கேட்கும் ஒலிகளில் நாம் எமது கவனத்தைக் குவித்து குறிப்பிட்ட ஒலியை உணர்ந்து அதற்கான அர்த்தம் அல்லது விளக்கம் பெறப்படுமாயின் அதனை கிரகித்தல் என்று சொல்லாம். படுக்கையில் இருக்கும் போதும் எமது செவிகளால் ஒலிகள் உள்வாங்கப்படுகின்றது. கேட்கப்பட்ட ஒலியால் எமக்கு ஏதாவது அபாயம் என உணரப்படும் பட்சத்தில் நாம் நித்திரையில் இருந்து எழுந்து கொள்கின்றோம்.

கேட்டலுக்கும் கிரகித்தலுக்கும் உள்ள வேறுபாடுகள் பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்துள்ளோம். பலர் கூடி கதைத்துக்கொண்டிருக்கும் போது சிலர் உரையாடலைத் தவறவிட்டு விட்டு கதைத்த விடயம் பற்றி திருப்பிக் கேட்பதை நாம் சொந்த அனுபவத்தில் கண்டுள்ளோம். விடயத்தில் நாம் மனம் ஒன்றி இருக்கும் போதே எம்மால் விடயத்தை கிரகிக்க முடியும். விடயம் தொடர்பாடலில் ஈடுபடும் பெறுனரால் சரியாக விளங்கிக் கொள்ளும் பட்சத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் கருத்துப்பரிமாறல் வெற்றிகரமாக நிகழும்.

தொடர்பாடலில் ஈடுபடும் நபர் பெறுனரில் தன்மைக்கு ஏற்பவே தன்னுடைய தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும். இதனை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் மேற்கொண்டே வருகின்றோம் என்பதை ஞாகப்படுத்திக் கொள்ளவும்.
உதாரணமாக சிறுவர்களுடன் அல்லது குழந்தைகளுடன் கதைக்கும் போது அவர்களுக்குப் புரியும் வகையில் அவர்களுடைய அறிவுக்கு ஏற்ற வகையில் கதைக்கின்றோம். இது இவ்வாறு இருந்தாலும் வளர்ந்தவர்கள் எலலோரும் சகல வழிகளிலும் வளர்ந்தவர்களாக அல்லது எம்மைப்போல வளர்ந்தவர்களாகக் கொள்ள முடியாது. நிட்சயமாக பல்சந்தர்ப்பங்களில் வேறுபாடுகள் ஏற்படலாம். வேறுபாடுகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு சபையில் நிகழும் உரை முடிந்த பின்னர் சபையில் உள்ள எத்தனை பேரால் நிகழ்த்தப்பட்ட உரையை 100மூ முழுமையாக கிரகித்து திருப்பி ஒப்பிக்க முடியும்.இது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும். எப்போதும் சாராம்சம் சொல்லாப்படலாம் அல்லது சபையில் நிகழ்த்தப்பட்ட உரையின் ஒவ்வொரு பகுதி ஒப்பிக்கப்படலாம்.
நாம் கிரகிக்கும் போது பல தடைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாகவே முழுமையாக கிரகிக்க முடியாமல் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்க.

கிரகித்தலில் ஏற்படும் தடைகள் 1. கவனக்கலைப்பான்கள் அல்லது இரைச்சல் 2. தனிநபர் விடயம் ழேளைந – கவனக்கலைப்பான்கள் இது எமக்குள் இருந்து உருவாகும் உள்ளார்ந்த உடர் ரீதியான தடைகள். உதாரணமாக உடல் நிலை சோர்வாக இருத்தல், மனம் சோர்வாக இருத்தல். அதாவது மனநிலையில் ஏற்படும் சோர்வு என்பவற்றைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக நாம் கிரகித்துக் கொண்டிருக்கும் போது சில விடயங்களை ஆழமாக சிந்தித்தால் தொடர்ந்து கிரகித்தல் ஏற்படாது. அதாவது ஒரு சொற்பொழிவின் அல்லது வகுப்பறை கற்றலில் கேட்பவருக்கு வரும்பிய அல்லது
நீண்ட நாட்களாக தேடிய ஒரு விடயம் வந்தவுடன் பேச்சாளரால் அல்லது வகுப்பறையில் தொடர்ந்து
சொல்லப்படும்

விடயத்தினை மறந்து எமக்குப் பிடித்த விடயத்தில் மனம் செல்லும் போது எமது தொடர்ச்சியான தொடர்பாடல் முடிவடைந்து விடுகின்றது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள் கிரகித்துக் கொண்டிருக்கும் விடயத்தில் குழப்பங்கள் ஏதாவது இடம்பெற்றாலும் கிரகித்தல் இடம்பெறாது எனப் புரிந்து கொள்ளலாம். கேட்கும போது மனம் நடுநிலையாக இருந்து கேட்க வேண்டும். இங்கு நடுநிலை என்பது கிரகிக்கும்விடயங்களுக்கு உணர்ச்சி வசப்பட்டால் கிரகித்தல் தடைப்படும் என்பதைப் புரிந்து கொள்ளவும். அதாவது நபர் ஒருவர் தீவிர சமயப்பற்று உடையவர் என வைத்துக் கொண்டால் குறிப்பிட்ட நபருக்கு, எவராவது சமயத்தை குறையாக கூறும்போது கூறப்படுகின்ற கருத்தில் கவனத்தை செலுத்தாது இருக்கின்ற சந்தர்ப்பம் உள்ளது. அதே போல் அதே சமயத்தை புகழ்ந்து பேசும் போது சில போலியான கருத்துக்களால் ஏமாந்து போகும் சந்தர்ப்பங்கள்

இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளவும். கருத்துகள் கேட்பது என்பது பின்வரும் சந்தர்ப்பங்களாலும் தடைப்படுகின்றது. தொடர்பாடலில் ஈடுபடும் நபர் பற்றிய முற்கற்பித்தங்கள் அதாவது நாம் இன்னொருடன் உரையாடும்போது அந்நபர் பற்றி எமக்கு முன்னரே கிடைக்கும் தகவல்கள் குறிப்பிட்ட நபருடைய கருத்துக்கான கேட்பதா இல்லையா என்பதை எங்களுடைய மனம் தீர்மானிக்கின்றது. நபர் பற்றி கீழ்த்தரமாக கேட்கும் போது அந்நபருடைய கருத்தை மனம் ஏற்க மறுக்கும் குறிப்பிட்ட நபர் நல்ல கருத்துக்கள் கூறினாலும் அவை பிரயோசனமற்றவையே.

கேட்டுக்கொண்டிருக்கும் போது அவ்விடயங்களில் தர்க்க ரீதியாக கேள்விகள் எழுப்பி
விடயங்களை ஆழமாக விளங்குவதற்கு முயற்சிக்குமு; போது கேட்டுக் கொண்டிருக்கும் விடயங்களை கிரகிப்பதற்கு தடைய்hக இருக்கும். உதாரணமாக ஒரு சபையில் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவ்விடயங்களை கேட்டுக் கிரகித்துக்கொண்ட பின்னரே அதில் எழும் சந்தேகங்;களை அல்லது மேலதிக விளக்கத்தை உரையாற்றியவரிடம் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவும்.

உரையாடலைக் கிரகிக்காது கேள்விகளை எழுப்புவது தொடர்பாடலில் ஈடுபடுவருள் இருவருக்கும் தடை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளவும். கேட்டுக்கொண்டிருக்கும் விடயங்கள் கிரகிக்கப்படும் போது ஏற்கனவே மனதில் தேக்கிவைக்கப்பட்ட விடயங்களோடு ஒப்பிட்டு ஏற்கனவே மனதில் உள்ள விடயமாகக் கருதுவது கிரகித்தலில் சில சந்தர்ப்பங்களில் தவறினை ஏற்படுத்தும் எனப் புரிந்து கொள்ளவும் இதனைவிளங்கிக் கொள்வதற்கு பின்வரும் உதாரணத்தை கவனிக்கவும். ஒரு சபையில் பல தேசங்களில் இருந்தும் பல்வேறுபட்ட மக்கள் இருக்கின்றனர். அச்சைபயில் அமெரிக்காவில் இருந்து வந்த வெளிநாட்டவர் உரையாற்றுகின்றனர். அவர் தன் உரையில்“றொட்டி” சாப்பிட்ட கதை ஒன்று சொல்லைக் கேட்டவுடன் எல்லோலரும் தாங்கள் தாங்கள் சாப்பிட்ட நொட்டியை எண்ணிக்கொள்வார்கள். அதன் அடிப்படையிலேயே அக்கதையைப் புரிந்து கொள்வார்கள். ஆனால் இங்கு எழும் பிரச்சினை என்னவெனில்

யாழ்ப்பாணத்தில் ஒருவர் வீட்டில் தயாரித்து உண்ணும் றொட்டிக்கும், யாழ்ப்பாணத்தில் கடையில்
தயாரித்து விற்கப்படும் றொட்டிக்கும் வேறுபாடுகள் இருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும்
அனுபவத்திலேயே கண்டிருக்கின்றோம். அதேபோல் வீடுகளில் தயாரிக்கப்படும் நொட்டிகளிலேயே
பல்வேறு வேறுபாடுகள் இருப்பதையும் பரிசோதித்து அறிந்து கொள்ளவும். இவ்வாறு என்று“நொட்டி”
என்று சொல்லப்படும் ஒரே சொல்லுக்கு ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் விளக்கம் என்பது வேறு.
இந்தநிலையில் எப்படி ஏற்கனவெ உள்ள அனுபவததுடன் நாம் கேட்கும் விடயத்தை ஒப்பிட்டு ஒன்றாக்குவது பொருந்தும் என்பதைப் புரிந்து கொள்ளவும். விடயங்களைப் புரிந்து கொள்வதில் இருக்கும் முரண்பாடுகளில் அடுத்த விடயம் நாம் ஒரு பொருளை நேரடியாக பார்த்து அதற்கான விளக்கத்தினை அறிந்து கொள்வதற்கும் அதே பொருளை ஒரு இன்னொருவரிடம் இருந்து கேடடு அறிவதற்கும் அதே பொருளை புத்தகம் ஒன்றில் இருந்து வாசித்து அறிவதற்கும் பாரிய வேறுபாடு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளவும்.

இதனை புரிந்து கொள்வதற்கு பின்வரும் உதாரணத்தைக் கொள்ளலாம்.
ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து வந்த ஒருவர் அங்குள்ள பனயன் குளிர் பற்றி குறிப்பிட்டு
புகைப்படம் ஒன்றை காட்டினால் முற்று முழுதான உணரமுடியாது என்பதைப் புரிந்து கொள்ளவும். சிலவற்றின் நிஜமான கருத்து என்பது உணரப்பட வேண்டும். வெறும் கண்ணால் பார்ப்பது மட்டுமோ அல்லது வெறும் காதால் கேட்பது மட்டும் முழுமையான கருத்து உணரப்பட முடியாத சந்தர்ப்பங்களும் உள்ளன.

பின்வரும் மூன்று சந்தர்ப்பத்தில் கேட்பவர் கிரகிப்பதற்கு தானாகவே தடையை ஏற்படுத்துகின்றார் அல்லது கிரகித்தலில் கூடிய கவனத்தை செலுத்துவதற்கு காரணமாக இருக்கின்றன. தனக்கு வேண்டாத விடயம் ஒன்று என தீர்மானிக்கும்போது கேட்கும் விடயத்தினை கிரகிக் மறுக்கின்றனர். அதேபோல் தனக்கு ஆபத்து விளைவிக்கும் என எண்ணினால் அவற்றையும் கிரகிக்காது இருப்பது போல் பாவனை செய்கின்றனர். மேற்கூறப்பட்ட சம்பவம் சிறுவர்களில் அதிகளவில் காணப்படுகின்றது என்பதை மனம் கொள்க.
கேட்பவர் பற்றய விடயங்களை ஒர பேசும்பொது கிரகிக்கும் தேவை அதிகரித்து கேட்பதற்கான விருப்பதை வெளியிடுவதை அவதானிக்க முடியும். வயதில் சிறியவரும் வயதில் பெரியவரும் உரையாடும் போது அல்லது ஒரு உயர்பதவியில் இருப்பவரும் அவருடைய பதவிக்கு கீழ் நிலையில் இருப்பவர்க்கும் இடையிலான உரையாடலின் போதும் இருவர்களுக்கும் இடையிலான அனுபவ முதிர்ச்சி அல்லது வயது முதிர்ச்சி இருவருக்கு இடையிலான உரையாடலில் கிரகித்தல் பாதிப்படைதலும் அல்லது அதற்கான சிரத்தை மாறுபடும் என் ஆராய்ந்து அனுபவத்தில் உணர்ந்து கொள்ளவும்.

கிரகித்தல் எமக்குள் 3 வகையாக இடம் பெறுகின்றது. 1. விரும்பிக் கிரகிப்பது – எமது தேவை காரணமாக நாம் தொடர்பாடலில் இடம்பெறும் விடயங்களை கிரகித்தலை குறிக்கின்றது. இதற்கு உதாரணமாக எமக்கு நெருக்கமான நண்பர்களுடன் உரையாடும்போது நிகழும் கிரகித்தலை குறிப்பிடலாம். 2. விருப்பமற்று கிரகிப்பது – மேற்கூறப்பட்ட வகைக்கு எதிர்மாறாக நிகழும் கிரகித்தலாகும். அதாவது எமக்கு விருப்பம் இல்லாது இருக்கும் சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாது இருந்து கேட்டு கிரகிப்பதாகும். இதற்கு உதாரணமாக சில மாணவர்கள் வகுப்பறையில் நிகழும் பாடத்தில் விருப்பு அற்ற நிலையிலம் பாடசாலையின் ஒழுங்கு மற்றும் பரீட்சை போன்றவற்றிற்காக இரந்து வகுப்பறைப்பாடங்களை கேட்டுக்கிரகிப்பதைக் குறிக்கும்.

3. தர்க்க ரீதியாக கேள்வி எழுப்பி விடயங்களை கிரகித்தல்
இவ்வாறான கிரகித்தல் இன்று அவசியமான கிரகித்தலாகும். இது பின்வருமாறு நிகழ்தத்ப்படலாம். ஒரு விடயத்தை கேட்கும் போது சொல்பவருடைய கருத்தை உள்வாங்கி அக்கருத்தின் துல்லியத்தன்மையை மதிப்பீடு செய்து தொடர்ச்சியாக கருத்தை மதிப்பீடு செய்து அக்கருத்தால் ஏற்படும் எதிர்வினையின் பயன்பாட்டை மதிப்பீடு செய்து, தகவலை வலியுறுத்துவதற்காக சொல்லப்படும் தகவல்; மூலங்களின் உண்மைத்தன்மையை போன்ற தேடல்கள் கேள்விகள் மூலம் கேட்டுகும் அல்லது அறியும் விடயங்களை ஆராய்ந்து கிரகித்துக் கொள்ள வேண்டும்.

இதனையே திருவள்ளுவர் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பபொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

Advertisements